உள்ளாட்சியில் ஜனநாயகம் மலர்ந்திட:

திமுக ஆட்சிக்கு எதிரான மக்கள் குரலாய் ஒலித்திட,

கார்ப்பரேட், -மதவெறி பாஜகவை அப்புறப்படுத்த

மாலெ கட்சி போராடும்!

சட்டப்பேரவை தேர்தலின் தொடர்ச்சியா கவே நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைகள் இருந்தன. ஆளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சி அதிமுகவும் அதைச் சார்ந்த கட்சிகளும் அதிமுகவிடமிருந்து தனித்துப் போட்டியிட்ட பாஜகவும் வேறு பல கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தல் போலவே பரப்புரையை நடத்தின. சில சிறிய கட்சிகள் உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக எழுப்பிய அரைகுறை பேச்சுகளும் இந்த மேலோங்கிய பெரும் கூச்சலில் எடுபடவில்லை. மார்க்சிஸ்ட்-&லெனினிஸ்ட் கட்சி மட்டுமே உள்ளாட்சி அமைப்பை முதன்மைப் படுத்திய தேர்தல் பரப்புரையை முன்னிறுத்த முயற்சித்தது.

மேல்தளத்தில் மேற்சொன்னவாறு இருந்தா லும் அடித்தளத்தில், குடும்பம், ரத்தம், சாதி, தெரு, பணம் போன்றவை பெரும் செல்வாக்கு செலுத்தின. மேடையில் அரசியல் பேசும் பெரிய கட்சிகளின் தலைவர்கள், மேடையை விட்டு இறங்கியதும் மேற்கூறிய கணக்குகளைக் கையாள்வதை கண்கூடாகக் காணமுடிந்தது. பணம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பணம்தான் தேர்தல் வெற்றி, தோல்விகளை முடிவுசெய்கிறது என்ற தவறான மதிப்பீட்டுக்கும் இட்டுச் செல்கிறது. மேற்கூறிய அனைத்துப் போக்குகளுக்கு கூடுதலாக மக்களது அரசியல் முடிவுகள் தேர்தலில் வெளிப் பட்டுள்ளன.

அரசமைப்பு சட்டத்திருத்தத்தின்படி நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படா திருக்கும் அதிகாரங்கள் பற்றி, அவற்றைமக்கள் அமைப்புகளாகசெயல்பட வைப்பதுபற்றி, ஜனநாயக ரீதியாக செயல்பட வைப்பதுபற்றி முக்கிய கட்சிகள் பேசவில்லை. ஆளும் கட்சிக்கு சாதகமான, அரசியல் பேரத்துக்கும் கட்சித்தாவும் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் ஊற்றாக இருக்கிற மறைமுகத் தேர்தலை ஒழிப்பது பற்றி இக்கட்சிகள் பேசவில்லை. ஊழலற்ற, நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவோம் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிகள் வாக்குறுதி தரவில்லை. “மூன்றடுக்கு - ஒன்றியம், மாநிலம், உள்ளாட்சி - கூட்டாட்சி அமைப்புமுறையைஒழித்துக் கட்ட முனையும் மோடி அரசின் முயற்சிகளை முறிய டிப்பது பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டாட்சி அமைப்பு முறைக்காக குரல் கொடுக்கும் திமுகவின் தேர்தல் பரப்புரையும் இதுபற்றி பேசவில்லை. மாநகராட்சிகளுக்கு தனி தேர்தல் அறிக்கை, என்றெல்லாம் வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியும் மேற் கூறிய முக்கிய அம்சங்கள் பற்றி பேசவில்லை.

மேலே கூறிய அடிப்படையில் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் வாக்காளர்களின் கவனத்தை, அக்கறையை ஈர்க்கத் தவறிவிட்டன. இக்கட்சிகளோடு சேர்ந்த கட்சிகளும்கூட்டணி தர்மத்தால்இதே தவறைச் செய்தன. வாக்காளர் களின் ஆர்வமின்மையே வாக்குப்பதிவு குறைந்து போனதற்கு முதன்மைக் காரணம். சென்னையில் மிகமோசமான வாக்குப்பதிவுக்கும் இதுதான் முதன்மைக் காரணமாக இருந்துள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மிகமோசமாக சீரழிக்கப்பட்டு விட்டன. தேர்தல் நடத்தப்படாமலும் காலங் கடந்து தேர்தல் நடத்தியும் அதிகாரிகள், அமைச்சர்களின் அதிகாரத்துவ ஆட்சியால் உள்ளாட்சி அமைப்புகளை அதிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை செயலிழக்கச் செய்ததும்தான் சென்னை பெருநகரத்தில் படுமோசமான வாக்குப்பதிவுக்கு கூடுதல் காரணமாக இருந்துள்ளது. “உள்ளாட்சியில் நல்லாட்சிஎன்று கூறிய திமுகவும் இந்தப் பிரச்சனையை தெரிந்தே கையிலெடுக்கத் தவறிவிட்டது. கட்சிகளின் பலத்தைக் காட்டு வதேநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்என்பதாக சுருங்கி இறுகிப் போய்விட்டது. மார்க்சிஸ்ட்-&லெனினிஸ்ட் கட்சி, இந்த இறுகிப் போன குறுகிய வட்டத்திலிருந்து வெளியே நின்று, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களின் அதிகாரம், செயல்பாடு, மக்கள் பங்கேற்பு உள்ளிட்டவற்றை அரசியல் பரப்புரையாக்கி தேர்தலில் பங்குபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளைசுய ஆட்சி மக்கள் அமைப்பு களாக”, நிறுத்தும் அரசியல் கடமையை முன்னி றுத்தியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக முடிந்துள்ளது. மிகக் குறிப்பாக, அனைவரும் அறிந்தது போல கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில் திமுக வெற்றி பெற்றிருக் கிறது. திமுக தலைவர் ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று கூறிக்கொள்வதற்குத் தோதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. ஒன்பது மாத திமுக ஆட்சி மீதான மக்களதுநல்லெண்ணம்தொடர்கிறது என்பதை தேரதல் முடிவுகள் காட்டுகின்றன. வலு விழந்த எதிரணி முகாம் திமுக கூட்டணியின் வெற்றியை எளிதாக்கியுள்ளன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வதைப்போல, இந்த வெற்றியைதிராவிடவியல் ஆட்சி முறைக்கு கிடைத்த வெற்றிஎன்று சொல்ல முடியாது.

அதிமுகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனாலும் தோல்வி மிக அவமானகரமான தோல்வியாக மாறிவிட்டது. முன்னாள் முதலமைச்சர்கள், பழனிசாமி, பன்னீர்செல்வம் சொந்தப் பகுதிகளிலேயே அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கி திமுக நோக்கி திரும்பிவிட்டது தெளிவாகத் தெரிகிறது. பல இடங்களில் அதிமுகவின் கட்சி அமைப்பே திமுக பக்கம் திரும்பியுள்ளதும் தெரிகிறது. அதிமுக, பாஜகவுடன் கூட்டணியை விலக்கிக் கொண்டாலும் பாஜக கொள்கைகளை பாஜகவின் குரலிலேயே பேசியது. அதிமுகவின் பெரும் சரிவுக்கு இதுவும் காரணம். பத்தாண்டு காலம் உள்ளாட்சி அமைப்புகளை சீரழித்து சின்னாபின் னாமாக்கியதற்கான தண்டனையை அதிமுக பெற்றிருக்கிறது. (இது ஆளும் கட்சிக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்). பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னுக்கு வந்துள்ளது. இதை அதிமுக கணக்கில் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால் அது மீண்டும் எழமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டதாக கூறமுடியாது. “பொறுத்திருந்து பார்க்கவேண்டும்”.

ஒரே நாடு, ஒரே தேர்தல்கொள்கை உடைய பாஜக இந்த தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து விட்டதாக உண்மைக்குப் புறம்பாக மார்தட்டிக் கொள்கிறது. பாஜகவுக்குவளர்ச்சிபாஜகவின்எழுச்சிஎன்று அதன் தலைவர் அண்ணாமலை கூறிக் கொள்கிறார். “தாமரை வேர் பிடிக்கிறதுஎன்று தினமணி போன்ற ஏடுகள் எழுதுவது பாஜக பற்றிய ஒரு வெற்றி பிம்பத்தைக் காட்டுவதற்காக எழுதப்படுகிறது. ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. குமரி நகராட்சியை இழந்திருக்கிறது. வேறு சில மாவட்டங்களில் அது கணக்கை துவங்கியிருந்தாலும் குமரி, கோவை போன்ற மாவட்டங்களில் சற்றே சரிந்திருக்கிறது. அது பெற்றுள்ள வெற்றி கவனத்தில் கொள்ளத்தக்க, கவலைப்படத்தக்க வெற்றியாக இருந்தாலும் அதைபெரும் வளர்ச்சி என்றோ, எழுச்சி என்றோ கூறமுடியாது”.

சட்டப்பேரவை தேர்தலில் கவனத்தை கவரத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்த, நாம் தமிழர் கட்சி, தேமுதேக, மக்கள் நீதி மய்யம் ஆகியன கடுமையாக அடிவாங்கியுள்ளன. அரசியல், கருத்தியல், சமூக போக்காக வாக்காளர்களால் அடையாளம் காணப்படும் இந்த கட்சிகள்வேர்க்கால்மட்டத்தில் பிடிப்பு கொண்ட கட்சிகளாக பார்க்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. பாமகவும் கூட பெரும் ஏமாற்றத்தையே அறுவடை செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடுத்து எழுந்துள்ள அரசியல் சூழலில் திமுக அரசை எதிர்க்கும் எதிரணி முகாம்வெற்றிடமாகஉள்ளது. பாஜக அந்த இடத்தைக் கைப்பற்று வதற்கான மூர்க்கமான முயற்சிகள் அனைத் தையும் மேற்கொள்ளும். பாஜகவின் அத்தகைய முயற்சிகளை முறியடித்து, இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள்எதிர்க்கட்சி அரசியல் களத்தைக்கைப்பற்ற வேர்க்கால் மட்டத்தில், உள்ளூர் அளவிலும் மாநிலம் தழுவிய அளவிலும் தம்மை வலுப்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இந்தப்பணிக்கு, இகக(மாலெ) தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும்.

உள்ளாட்சித் தேர்தல் களத்தில், “திமுக, அதிமுக, ஆகிய கட்சிகளுக்கு மாற்றான, பாஜக கட்சிக்கு எதிரானமாலெ கட்சி ஒரு போராடும் புரட்சிகர கொள்கை உறுதியோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமாடி குமரியில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. பெண் வேட்பாளர் தோழர் சுசீலா வெற்றி பெற்றிருக்கிறார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி”?

கோட்டை தொடங்கி குக்கிராமங்கள், நகர்ப்புறங்கள் வரை அதிகாரம் திமுகவின் கைக்கு வந்துள்ளது. அதிமுக ஆட்சியால் சீர்குலைந்து, சீரழிந்து கிடக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புத்துயிரூட்டும் பணியை திமுக அரசு செய்தாக வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயக அமைப்புகளாக, மக்களமைப்புகளாக அதிகாரம் பெறச் செய்வதற்கு கவனம் செலுத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில், குதிரை பேரம், கட்சித் தாவல்களை ஒழித்துக்கட்ட, அனைத்து மட்டத்திலும் நேரடி தேர்தல் நடத்திட சட்டம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு கொண்டு வருவது தேர்தலில் பணத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளை முடக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரி களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக விரோத முறை நீக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியினரது குறுக்கீட்டை ஒழித்திட வேண்டும். கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போதுமான நிதி, நிர்வாக அதிகாரம் பெறத்தக்க வகையில் அரசமைப்பு சட்டம் கூறியுள்ள அதிகாரங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்க வேண்டும். மாநில அரசுகள் நிதிக்காக ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை மாற்றப்பட வேண்டும். அதுபோல, உள்ளாட்சி அமைப்புகள் மாநில அரசிடம் பிச்சை கேட்கும் நிலை ஒழிக்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்திட வேண்டும். வரவேற்கத்தக்க முன்னேற்றமாக 50% பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் மிக முக்கியமானது, பின்னாலிருந்து இயக்கும் எந்தக் கயிறுகளும் இல்லாது செயல்படும்உண்மை யான அதிகாரம்பெண்கள் பெற வேண்டும். சமூகநீதியில் இது மிக மிக முக்கியமானது. வெற்றி பெற்ற பெண்கள், தலித்துகள், பழங்குடி பிரதிநிதிகள் மீது ஏவப்படும் சாதி ஆதிக்க ஒடுக்கு முறைகளை ஒழித்துக் கட்டும் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். பெண்கள், தலித்துகள், பழங்குடிப் பிரதிநிதிகள் அச்சமற்று சுதந்திரமாக பணியாற்றுவதை உறுதிப்படுத்திட வேண்டும். கூட்டாட்சி உரிமைக்காக குரல் கொடுக்கும் திமுக உள்ளாட்சி அமைப்புகளோடு அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதுதான் உண்மையில் ஜனநாயகமானது. சமூகநீதிக்காக குரல் கொடுக்கும் திமுக உள்ளாட்சி அமைப்புகளும் சமநீதி பெற முனைப்புடன் செயல்படுவதேஉள்ளாட்சியில் நல்லாட்சிக்கான ஆதாரம். வாக்குப்பதிவு கடுமையாக குறைந்துள்ள நிலையில், வாக்களிக்கும் உரிமையை புறக்கணிக்காமலி ருக்கவும் பணம் பரிசுகளுக்கு விலை போகும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சாதிக் கணக்குளை கைவிடும் விழிப்புணர்வைக் கொண்டுவரவும் அரசு விரிவான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்திட வேண்டும்.

மார்க்சிஸ்ட்&-லெனினிஸ்ட் கட்சி தேர்தல் பரப்புரையின்போது அளித்துள்ள வாக்குறுதிகள் வெற்றிபெற வாதாடும், போராடும். உள்ளாட்சி அமைப்புகள் உண்மையான மக்களாட்சி அமைப்புகளாக மாற்றம் பெற தொடர்ந்து போராடும். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை யில், ஆளும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டு கிற தவறுகளைத் தட்டிக்கேட்கிற மக்களின் குரலாக ஆலைகளில், வயல்களில், தெருக்களில், கல்வி வளாகங்களில் போராடும். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜகவை அப்புறப்படுத்து வதிலிருந்து தொடங்கி, மோடி அரசை அகற்றுவது வரையிலான கார்ப்பரேட்-மதவெறி எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்தும் உறுதிப்பாட் டையும் மீண்டும் புதுப்பித்துக்கொள்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),

தமிழ்நாடு மாநிலக் கமிட்டி

(பிப்ரவரி 25,26 தேதிகளில் கோயம்புத்தூரில் கூடிய கட்சி மாநிலக்கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)