2022 மார்ச் 28-29

அகில இந்திய இருநாள் வேலைநிறுத்தத்தை

மாபெரும் வெற்றியடையச் செய்வோம்!

ஏஐசிசிடியூ அறைகூவல்!

நாட்டைக் காப்போம்! நாட்டு மக்களைக் காப்போம்

தொழிலாளர்களை, வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதுகாப்போம்!

நாட்டு வளங்களை, பொதுத்துறையைப் பாதுகாப்போம்!

விவசாயத்தை, விவசாயிகளை காப்போம்!

தொழிலாளர் - விவசாயி ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி ஆட்சியின் மதவெறி சதிகளை முறியடிப்போம்!

மோடி தலைமையிலான கம்பெனி ஆட்சியை விரட்டியடிப்போம்!

மோடி-ஷாக்களின் பிடியிலிருந்து இந்திய நாட்டை விடுவிப்போம்!

உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் வேலை வேண்டும்!

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்!

நான்கு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்திட போராடுவோம்!

பெருகி வரும் வேலையின்மையை எதிர்த்து, விண்ணை முட்டும் விலைவாசியை எதிர்த்து போராடுவோம்!

நாட்டின் சொத்துக்களை தனியார் மயமாக்குவதற்கு எதிராக, விற்பதற்கு எதிராக குரல் கொடுப்போம்!

நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிப்போம்!

 

நம் நாட்டு தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள், வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் மீது மோடி ஆட்சி இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொழிலாளர்களை அழித்து ஒழிக்கும் கொள்கைகளை உருவாக்குவது மோடி அரசின் மாபெரும் அடையாளமாக இருக்கிறதுஇந்த நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதசார்பற்ற சமூக அடித்தளம் அனைத் தையும் மோடி அரசு அடித்து நொறுக்குகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை வீரத்து டனும் மன உறுதியுடனும் தொழிலாள வர்க்கம் எதிர்த்து போராடி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விவசாயிகளை சீரழிக்கும் வகையில் இயற்றப் பட்ட 3 விவசாயச் சட்டங்களைத் திமிர்பிடித்த மோடி அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவர்களின் உறுதியான போராட்டம் தொடர்கிறது. (லக்கிம்பூர் கேரியில்  விவசாயிகளை கொன்ற அஷிஷ் மிஸ்ராவும் இப்போது பிணையில் வந்து விட்டார்)

கடந்த ஆண்டு டிசம்பர் 16, 17 தேதிகளில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை நடத்தினார்கள். அதன் விளைவாக வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை, பாராளுமன்றத்தின் குளிர்கால தொடரில் முன்வைப்பதை மோடி அரசு தள்ளிவைத்துள்ளது. அதுமட்டுமல்ல, கௌரவ ஊதியம் பெறும் தொழிலாளர்களில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வரை பல்வேறு துறைகளை சார்ந்த எல்லா முறைசாரா தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு உறுதியான போராட்டப் பாதையில் அணிவகுத்து நிற்கிறார்கள். இப்போது நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் 10 தொழிற் சங்கங்களின் கூட்டு பதாகையின் கீழ் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களின் தொடர்ச்சியாகும்.

மோடி ஆட்சியில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள்

நல்ல காலம் பிறக்குது” “எல்லோருடனும் சேர்ந்து.. எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்..” போன்ற கோஷங்களையும் வாக்குறுதிகளையும் மோடி அரசு மீண்டும் மீண்டும் சொல்லி வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அது மட்டுமல் லாமல், பேரழிவின் இன்னொரு பெயராக மோடி அரசு நம் முன்னே நிற்கிறதுமோடி ஆட்சியில் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் வறுமை யிலும் பட்டினியிலும் பரிதவித்துக் கொண்டிருக் கும் போது, ஒரு சில செல்வச் சீமான்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகளாக பெருகி இருக்கிறது. நாட்டின் 77 சதவீத சொத்து, வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே இருக்கிற பெரும் பணக்கார முதலைகளின் கையில் இருக்கிறது. கொரோனா முதல் அலை பொது முடக்கத்தின் போது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலா ளர்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டிருந்ததுஅதன் தாக்கம் இன்னும் கூட உணரப்படுகிறது. ஆனால், இதே கொரோனா காலகட்டத்தில்தான், இந்தியாவின் முதல் பெரும் பணக்காரான முகேஷ் அம்பானி, (இப்போது அந்த முதலிடத்தை அதானி பிடித்து விட்டார். ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி சம்பாதித்து இருக்கிறார். கொரோனோவிற்கு எதிராக பணிபுரிந்த ஆஷா தொழிலாளர்கள் போன்ற சுகாதார தொழிலாளர்கள் மத்திய அரசின் நிறைவேறாத வாக்குறுதிகளால்  வஞ்சிக்கப்பட்டு அதன் பாதிப்பை அனுபவித்து வருகிறார்கள். கொரோனோ இரண்டாவது அலையின் போது பிராண வாயு இல்லாமல் மருத்துவ வசதிகள் இல்லாமல் செத்து மடிந்த பலருடைய பிணங்கள் கங்கையில் ஊர்வலமாக சென்றபோது இந்த கொரோனோவை ஒரு நல்வாய்ப்பாக பயன் படுத்திக்கொண்ட மத்திய அரசு கார்ப்பரேட் சக்திகளுடன் - மிகப்பெரும் பண முதலைகளுடன் கைகோர்த்து அவர்களு டைய வளர்ச்சிக்காக சேவை செய்தது.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்காத மோடி அரசு,கொரானா காலத்தில் எவ்வித பொரு ளாதார ஆதரவையும் உழைக்கும் மக்களுக்கு அளிக்காமல் அவர்களை துன்ப துயரத்தில் தள்ளியது.

ஆட்சிக்கு வந்தபோது ஆண்டிற்கு இரண்டு கோடி வேலை வேலைவாய்ப்புகளை உருவாக்கு வோம் என்று வாக்குறுதி அளித்தது மோடி அரசுஆனால் உண்மையில் நடந்தது என்ன? மோடி அரசின் பண மதிப்பு நீக்கம் போன்ற கொள்கை கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் 20 கோடிக்கும் அதிகமானோர் தமது வேலைகளை இழந்திருக்கின்றனர். ஆலை மூடல், ஆட் குறைப்பு போன்றவை அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன.  “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்என்ற முழக்கம் ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. அதேநேரம் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இழுத்து மூடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கான அமைக்கப்படாத தொழிலாளர்கள் பட்டினி சம்பளத்திற்கே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையும் இன்று போகுமா நாளை போகுமா என்ற கவலையுடன் அவர்கள் இருக்கும் அவல நிலை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, கார்போரேட்டுகள் லாபம் ஈட்ட ஏதுவாக  வேண்டுமென்றே பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளை உயர்த்தியதன்  மூலம் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை எட்டி, தொழிலாளர்களின் முது கெலும்பு முறியும் நிலை உருவாகியுள்ளது.

மோடி அரசின் பட்ஜெட் 2022-23 என்பது பளபளக்கும் வார்த்தைகளையும் திசைதிருப்பும் பேச்சுக்களையும் வெற்று வாய்ச்சவடால்களையும் கொண்டதாக, உழைக்கும் மக்கள் மீதான மற்றுமொரு தாக்குதலாக முன்வந்துள்ளது. அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வருமான இழப்பு மற்றும் குறைந்து கொண்டே இருக்கும் ஊதியம் ஆகியவற்றால் தொழிலாளர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக இருக்கிறது. உழைக்கும் மக்களை இந்த நெருக்கடியிலிருந்தும், துன்பத்தி லிருந்தும் விடுவிப்பதற்குப் பதிலாக, இந்த பட்ஜெட் அவர்களின் உடைக் கிழிசலை இன்னும் கிழித்து பெரிதாக்குகிறது. சாமானிய மக்கள் தமது வாழ்வின் மிகப்பெரும் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றையநச்சு சகாப்தத்தை” ("விஷ்கால்"), மோடி அரசாங்கம் வெட்கம் ஏதுமின்றி "அமிர்த காலம்" (“அம்ரித் கால்”) என்று அழைக்கிறது. இந்த பட்ஜெட், தொழிலாளர்கள் - விவசாயிகளுக்கு "நஞ்சையும்", கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு "அமிர்தத்தையும்" வழங்குவதாக மட்டுமே இருக்கிறது.

தொழிலாளர் சட்டங்களை மீறுவதற்கு முதலாளிகளுக்கு எப்போதுமே முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இப்போது மோடி அரசு, அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் தாங்களே நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 4 தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து, அவற்றை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது. இந்த சட்டங்கள் கார்போரேட்டுகளின் மந்திரமானவியாபாரம் செய்வதை எளிதாக்குவதுஎன்பதற்கு வழிவகுக்கும், தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் சட்டங்களே தவிர வேறு ஏதுமல்ல. அவை தொழிற்சங்க உரிமை, கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமை, சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமை, சமூக பாதுகாப்பு மற்றும் வேலைப் பாதுகாப்புக்கான உரிமை ஆகியவற்றைப் பறிக்கின்றன. முதலாளிகள் "விரும்பும் போது பணியமர்த்துவது, வேண்டாதபோது வீட்டுக்கு அனுப்புவது" என்கிற கொள்கையை சட்டபூர்வமாக்குகிறது. “குறிப் பிட்ட கால வரையறையுடன் கூடிய வேலை வாய்ப்பு", என்பதன் மூலம் வேலை பாதுகாப் பின்மை அதிகரிக்கிறது. பெண் தொழிலாளர் களின் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளை மேலும் மோசமாக்குகிறது. அவை "புதிய இந்தியாவுக்கான புதிய சட்டங்கள்" என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், உண்மையில் அவை "கார்ப்பரேட் இந்தியாவுக் கான புதிய சட்டங்கள்" மட்டுமே ஆகும். மோடி  அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுதுறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் முனைப்பு (இப்போது எல்ஐசியும் திறந்துவிடப்பட்டிருக்கிறது) தேசத்தின் சொத்துக்களையும் இயற்கை வளங் களையும் அம்பானி, அதானி, டாடா போன்றவர் களுக்கு "தேசிய பணமாக்கல்  திட்டம்" கொள்கை மூலமாக  "இலவசமாக விற்பதில் " போய் முடிந் துள்ளது

மோடி அரசின் இந்தக் கொள்கைகள், நாட்டு மக்களின் பல பத்தாண்டு கால கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பொதுச்  சொத்துக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கின்றன. அது மட்டுமல்லாமல், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் பிற தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளில் அரசியல மைப்புச் சட்டம் அளித்திருக்கும் இடஒதுக்கீடு உரிமையும் கூட பறிக்கப்படுகிறது. இது அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் - சுகாதாரம், கல்வி முதல் போக்குவரத்து, மின் சாரம் வரை - அனைத்து சேவைகளையும் மக்க ளுக்கு கட்டுப்படியாகாததாகவும், இதனால் மக்களுக்கு எளிதில் கிடைக்காத, எட்டாக் கனியாகவும் ஆக்குகிறது.

மோடியின்குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச ஆளுமைஎன்கிற முழக்கம், ‘அரசு கிடையாது, கார்ப்பரேட்டுகள் மட்டுமேஎன்பதாக மாறிவிட்டது. மோடி அரசு, தனது பெருநிறுவன எஜமானர்களுக்கு (கார்ப்பரேட் முதலாளிகளுக்கு) சேவை செய்வதற்காக உழைக்கும் மக்கள் மீது போர் தொடுத்து வருகிறது.

தனது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான திட்டங்களை மூர்க்கத்தனமாக நிறைவேற்றுவதற்காக, மோடி, ஒரு "அடக்கு முறை அரசையும், அடக்குமுறைச் சட்டங்களை யும்" நிறுவுவதன் மூலம் தனது ஆட்சிக்கு எதிரான விமர்சன உரிமையையும் போராட்ட உரிமையையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, நசுக்க முயற்சிக்கிறது. மோடியின் ஆட்சி, அறிவிக்கப்படாத அவசர நிலை கால ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. மதவெறிக்குத் தூபம் போட்டு மக்களைப் பிளப்பது என்கிற தனது வழக்கமான தந்திரத்தை மிகவும் திட்டமிட்ட விதத்திலும் மூர்க்கத்தனமாகவும் செயல்படுத்தி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதரம் சன்சத்என்ற பெயரில் ஹரித்வாரில் நடந்த மதவெறிக் கூட்டமும் தற்போது நடந்து கொண்டிருக்கும் உத்தர பிரதேச தேர்தல் நிகழ்வுகளும் ஆகும். ஹரித்வாரில் மதவாத வெறுப்பையும் வெறியையும் தூபம் போட்டு வளர்ப்பது, ஊதிப் பெரிதாக்குவது குறித்து பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தற்போதைய உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் தமது மதவெறி வெறுப்பை மிகத் தந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்!

2022 மார்ச் 28-29 இரு நாள்கள் வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திட வேண்டும் என இந்திய தொழிலாள வர்க்கத் திற்கு ஏஐசிசிடியு அறைகூவல் விடுக்கிறது.

விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தொழிலாளர்-&விவசாயி ஒற்றுமையை உயர்த்தி பிடித்து, தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்த அழைப்புக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது. உழைக்கும் மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து பொது மக்களையும் வேலைநிறுத்த அழைப்புக்கு முழு ஆதரவு அளிக்குமாறு ஏஐசிசிடியு அழைப்பு விடுக்கிறது. மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம்தான் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மோடி அரசால் பறிக்கப்படுவதை நிறுத்த முடியும். ’மோடி-&ஷாஆட்சியின் மதவெறிவாத மற்றும் பிளவுவாத திட்டங்களை முறியடிக்கவும், உணவு, வேலை, அடிப்படை உரிமைகள், ஜனநாயகம் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளை சக்திவாய்ந்த முறையில் வலியுறுத்தவும் மற்றும் மோடி அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளை தூக்கி எறியவும் ஒன்றுபடுவோம்!

வேலைநிறுத்த கோரிக்கைகள்

  • அதிகரிக்கும் வேலையின்மை, ஆட் குறைப்பு, ஆலை மூடல் ஆகியவற்றை நிறுத்து! விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!
  • தொழிலாளர் விரோதச் சட்டங்களை ரத்து செய்! 12 மணி நேர வேலை நாளை ரத்து செய்! அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை திரும்பப் பெறுவேலை வாய்ப்பை, தொழிலாளர் உரிமைகளை உத்திரவாதம் செய்! பணி நிரந்தர உரிமைகளை, சம வேலைக்கு சம ஊதியத்தை உறுதிப்படுத்து!
  • வேலை உத்தரவாதம் மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை வேண்டும்! நலிந்த மற்றும் மூடப்பட்ட தொழில்கள் மற்றும் தோட்டங்களை புத்துயிர் அளித்து மீண்டும் தொடங்க வேண்டும்! நூறு நாள் வேலைத் திட்டத்தை வலுப்படுத்து! தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் வேலை கிடைப்பதை உறுதி செய்! நகர்ப்புற ஏழைகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்து!
  • 100% அந்நிய நேரடி முதலீடு மற்றும் பெருநிறுவனமயமாக்கல்(கார்ப்பரேட் மயமாக்கம்) உள்ளிட்ட தனியார்மயமாக்கலை நிறுத்து! தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) திரும்பப் பெறு! மின்சார சட்ட (திருத்த) மசோதாவை திரும்பப் பெறு!
  • அனைத்து திட்டப் பணியாளர்கள்/ கௌரவப் பணியாளர்களுக்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்! ஒவ்வொரு முன்களப் பணியாளர்களுக்கும்  காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்!
  • ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பில் கை வைப்பதை நிறுத்து! 26,000/-& குறைந்தபட்ச மாத ஊதியம் மற்றும் 10,000/- மாதாந்திர ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்து! புதிய பென்சன் திட்டத்தை (NPS) திரும்பப் பெற்று பழைய பென்சன் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வா!
  • விவசாயம் மற்றும் கிராமப்புற தொழி லாளர்கள் உட்பட அனைத்து அமைப்பு சாராருக்கும் மாதம் ரூ.10,000/- வருமான ஆதரவு மற்றும் இலவச ரேஷன் கொடு! பொது விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்து!
  • விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராதேனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! குறைந்த பட்ச ஆதார விலை(MSP)&ன் சட்டபூர்வ உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்!
  • தேசத்துரோக சட்டம், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் (UAPA) மற்றும் அனைத்து கொடூரமான சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்; அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

ஒன்றுபட்டு போராடுவோம்!

போராடி வெற்றி பெறுவோம்!