இகக(மாலெ) சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்; இகக(மாலெ) கண்டனம்!

நிதிஷ்குமார் தலைமையிலான பீகாரின் அய்க்கிய ஜனதா தளம்-பாஜக ஆட்சியில் வளர்ந்து வரும் குற்றமய நடவடிக்கைகள், ஊழல், மதவாதம் பற்றி நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டுமெனக்கோரி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை 31.3.2022 அன்று கொண்டு வந்ததற்காக இகக(மாலெ) உறுப்பினர்கள் அனைவரும் (12பேர்) அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். தீர்மானத்தைக் கொண்டுவந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சமீபகாலமாக தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் மீது நடைபெற்றுவரும் அடுக்கடுக்கான  வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் ஊழல், குற்றமய நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துக்காட்டுகளை மேற்கோள்காட்டி பேசினர்.

இதுபோன்ற வன்முறைகள் விஷயத்தில் "பூஜ்யம் சகிப்புத்தன்மையையே" காட்டுவோம் (துளியும் சகித்துக் கொள்ளமாட்டோம்) என்று கூறிய தேசிய ஜனநாயக அணியின் கூற்று பொய்த்துப் போனதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இந்தப் பொருள் குறித்து ஒரு ஜனநாயக ரீதியான விவாதத்தைக் கோரியதற்காக இகக(மாலெ) சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டிருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம்; பீகார் சட்டப்பேரவை, குற்றமய நடவடிக்கைகள், ஊழல், மதவாதம் ஆகியன குறித்து விவாதம் நடத்திட வேண்டுமென்றும்  கோருகிறோம்.

                       -இகக(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ),

                                         மத்தியக் கமிட்டி