ஏப்ரல் 08, 2022 கடலூர் மாட்டம், கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்(AIARLA) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெய்வசிகாமணி அ.வி.கி.தொ.ச மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.


தோழர்கள் வீராசாமி, குப்புசாமி, கங்கையம்மாள், புகழேந்தி, கணேசன், அம்புஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.வி.கி.தொ.ச மாநில தலைவர் பாலசுந்தரம், CPIML மாவட்ட செயலாளர் தோழர்.தனவேல், அ.வி.கி.தொ.ச.மாநில செயலாளர் தோழர்.இராஜசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கோரிக்கைகள்:


மத்திய , மாநில அரசுகளே! 

 

  1. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கிடு! 
  2. ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 நாள் வேலை வழங்கப்படுவதை உத்திரவாதப்படுத்திடு! 
  3. தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி உடனடியாக 150 நாட்களாக மாற்றிடு! ஆண்டுக்கு 300 நாள் வேலை, நாளொன்றுக்கு ரூ.600 / - ஊதியமாக வழங்கிடு!. 
  4. வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிடு! பட்டா உள்ளவர்களுக்கு இலவச காங்கிரீட் வீடு கட்டிக்கொடுத்திடு! 
  5. மூவலூர் இராமமிர்தம் அம்மையாரின் திருமண உதவி திட்டத்தை (தாலிக்கு தங்கம்) தொடர்ந்து அமல்படுத்திடு! பெண்களுக்கு மாத ஊதியம் திட்டத்தை உடனடியாக துவங்கிடு!. 
  6. நெய்வேலி NLC நிர்வாகம் 3 - ஆம் சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடு!. ஏற்கெனவே NLC -க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டை அதிகப்படுத்தி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கு!. 
  7. 13000 ஆயிரம்  ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரபடுத்து!