ராம் நவமியை சாக்காகக் கொண்டு ஏப்ரல் 10 அன்று, சங் பரிவார் அமைப்புகள், இஸ்லாம் விரோதம் கொண்டு கல்லெறிதல், மதவாத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

இது போன்ற சம்பவங்கள் குஜராத்தின் ஹிம்மத் நகர் மற்றும் காம்பட், மத்திய பிரதேசத்தின் கார்பன்ஜார்க்கண்ட் லோகர் டாஹா மற்றும் பெர்னெய், மேற்கு வங்கத்தின் ஷிப்பூர் ஆகிய இடங்களிலும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் நடைபெற்றுள்ளன.

ராம் நவமிக்கு முன்னிட்டு, பாஜக தலைவர்களும் அரசு நிர்வாகத்திலுள்ள மதவாத சக்திகளும் இறைச்சி விற்பது உண்பதும் தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது அறிவிப்பு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு சொந்தமான, அவர்கள் நடத்துகிற இறைச்சிக் கடைகளை சங் கும்பல் தாக்குவது நடந்தேறின. ஜெஎன்யூ விடுதியில் ஏபிவியினர் வன்முறையில் ஈடுபட்டு அங்குள்ள ஊழியர்கள் அசைவ உணவு சமைப்பதை, பரிமாறுவதை தடுக்க முற்பட்டனர்உணவுக்கூடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை இரும்புக்கம்பிகளாலும் பாறாங்கற்களாலும் தாக்கி பலரைக் காயப்படுத்தினர்.

 ராம நவமி ஊர்வலங்கள், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்புவிடுக்கும் பாடல்களை ஒலிபரப்பும் தருணங்களாக மாறியுள்ளன; மசூதிகளுக்கு வெளியே நின்று கொண்டு இந்து மேலாதிக்க முழக்கங்கள் எழுப்புவதும் இகழ்ச்சியாக பேசுவதும் மசூதிகளை தாக்கி நாசப்படுத்துவதும் மசூதிகளுக்கும் இஸ்லாமியரின் வீடுகளுக்கும் கடைகளுக்கும் தீ வைத்துக் கொளுத்துவதையும் செய்துள்ளனர்குஜராத்திலும் மத்தியபிரதேசத்திலும் ஜெஎன்யூவிலும்  அரசு எந்திரங்கள் வெளிப்படையாக ஆதரவளித்ததைக் காண முடிந்தது. ராம் நவமிக்கு அடுத்தநாள், கார்கோனில் நாசக்கார கலவரக் கும்பல்களிடமிருந்து தப்பித்த இஸ்லாமியர் வீடுகளை மாவட்ட நிர்வாகமே இடித்துத் தள்ளியுள்ளது. இந்த பாசிசச் செயலைத் தொடர்ந்து, மத்திய பிரதேச அரசின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா, ‘எந்த வீடுகளில் இருந்து கற்கள் வீசப்பட்டனவோ அந்த வீடுகளெல்லாம் இடித்து குப்பை மேடாக்கப்படும்என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

துரதிஷ்டவசமாக பெரும்பாலான ஊடகங்கள், இஸ்லாமியர் மீதான இந்த பாசிசத் தாக்குதல்களை, இந்து&இஸ்லாமியர்களுக்கிடையிலான "மோதல்கள்" என்றோ அல்லது ஜென்யூ வில் உள்ளது போல வலது&இடது மாணவர் அமைப்புகளுக்கிடையிலான மோதல் என்றோதான் சித்தரித்துள்ளன. அதுமட்டுமின்றி, திட்டமிட்ட வகையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையை நிகழ்த்திய சங் பரிவாரத்தினர்தான் என்று காட்ட முயற்சித்துள்ளன.

சங்கிகள், இஸ்லாமிய பூச்சாண்டி பரப்புரை மற்றும் வன்முறைக்கான மேடைகளாக இந்து திருவிழாக்களை மாற்றுவதன் மூலம் ஒட்டு மொத்த இந்து சமுதாயத்திற்கும் நஞ்சூட்டப் பார்க்கின்றனர். இத்தகைய பரப்புரை, வன்முறைக்கெதிராக சமூகத்தில் உள்ள ஜனநாயகப் பிரிவினர் நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்களைக் கட்டமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-இகக(மாலெ) லிபரேஷன்,

அரசியல் தலைமைக்குழு