ஜூன் 22, 2022 சேலம் மாவட்டம் மல்லூரில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்!
நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி சேலம் மாவட்டம் மல்லூரில் புரட்சிகர இளைஞர் கழகம் தோழர்.காளிதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
RYA மாவட்ட அமைப்பாளர் G.ஜெயராமன், AISA நிர்வாகிகள் ராகுல், பிருத்வி மற்றும் CPIML பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் அன்பு மற்றும் மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம், வேல்முருகன், அய்யந்துரை, பாலு, ரேவதி, மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.