சேலத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீடுகள் மீதான கடன், வட்டி + அபராத வட்டிகளை உடனே தள்ளுபடி செய்!

விலையில்லா கிரயப் பத்திரம், பட்டா உடனே வழங்கிடு! ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 18.07.2022 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்...

தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்கம் _ இணைப்பு AICCTU சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சங்க தலைவர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஆர்.வேல்முருகன் சங்கச் செயலாளர் , V.அய்யந்துரை மாவட்ட தலைவர்,AIKM, கே.நடராஜன் AICCTU மாவட்டத் தலைவர் பனமரத்துப்பட்டி தோழர் அன்பு, தோழர் பாலு மற்றும்பொன்னம்மாப்பேட்டை மணிகண்டன் ஆகியோர் கோரிக்கை உரை ஆற்றினார். தோழர் ஆர்.குமார் நன்றி உரை ஆற்றினார்.