இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) திருச்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர், AICCTU தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மகேந்திரன் அகால மரணம் அடைந்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக கட்சியின் பல்வேறு மட்ட பொறுப்புகளில் பணியாற்றிய தோழர். மகேந்திரனுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) தமிழ்நாடு மாநில கமிட்டி அஞ்சலி செலுத்துகிறது. அவரது பிரிவால் துயர் உறும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறது.
நாளை 11.8.22 மதியம் 1.00 மணி அளவில் அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தபட்டு இறுதி ஊர்வலம் புத்தூர் நால்ரோடு ரெங்கா ஜூஸ் சென்டர் அருகில் துவங்கவுள்ளது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில், காவிரிக் கரையில் உள்ள ஓயாமரி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும். அங்கு அஞ்சலிக் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழருக்கு செவ்வஞ்சலி!