முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பாஜகவின் தேசிய பேச்சாளர் நுபுர் சர்மா கூறிய கருத்தானது உலகம் முழுவதும் எதிர்ப்புப் புயலைத் தூண்டிவிட்டது மட்டுமின்றி, இந்தியாவில் பல அடுக்கான ஒரு இருண்ட சதிச் செயல் போன்ற நடவடிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நாட்டின் சட்டத்தின் படி நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு மோடி அரசாங்கம் மறுக்கிறது. அவருடைய கருத்தை, ஓரஞ்சாரத்தில் உள்ளவர் சொன்ன ஒன்றுமில்லாத விசயம் என ஒதுக்க முயற்சிக்கிறது. அது எதிர்பார்த்தது போலவே இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கோபத்தைக் கிளறியது. இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக் கையில் போராட்டங்கள் நடத்தி னார்கள். அவர்களின் போராட்டங்களை இந்திய அரசு புல்லட்கள் கொண்டு புல்டோசர்கள் கொண்டும் நசுக்கியது. பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் புல்டோசரால் நசுக்கும் பணி செய்யப்பட்ட தென்றால், எதிர்க்கட்சி ஆளும் ஜார்கண்ட்டில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர், பலர் காயமுற்றனர்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சைத் தொடர்ந்தே நடந்தன. அழிவுமிக்க அக்னிபாத் திட்டத்தை ஜூன் 14 அன்று அறிவித்தது, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது, மகாராஷ்ராவில் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது ஆகியவற்றின் மூலம் கவன மானது நுபுர் சர்மாவின் அத்தியாயத்தில் இருந்து திசைதிருப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகமது சுபையரை கைது செய்தது, அதிர்ச்சியளிக்கும் வகையில் உதய்பூரில் கன்யாலால் கொல்லப்பட்டது, உதய்பூர் கொலையாளிகளுக்கும் பாஜகவிற்கும் இடையே இருக்கும் தொடர்புகள் வெளியானது ஆகியவை நாம் கண்ணால் காண்பதைக் காட்டிலும் இன்னும் அதிகமான சர்ச்சை இருக்கிறது என்பதை நமக்குத் தெளிவாகச் சொல்கிறது.
பெரும் பின்விளைவைத் தூண்டும் எண்ணத்துடன்தான் உதய்பூர் படுகொலையும் அதன் வீடியோவும் வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது. அந்தப் படுகொலை நாட்டில்
உள்ள ஒவ்வொருவராலும் கண்டிக்கப்பட்டது. குஜராத் 2002ன் அதிர்ச்சிகரமான அச்சு வார்ப்பின் பிரதிபலிப்பாக ராஜஸ்தான் 2022 இருக்கவில்லை என்பதில் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி. இந்த டிஜிட்டல் உலகத்தில் உதய்பூர் கொலையாளியின் அடையாளமும் அவனது அரசியல் உறவும் சமூக ஊடகத்தில் வெளியாக வெகுநேரம் எடுக்கவில்லை. முகமது ரியாஸ் அட்டாரி, அவனது கூட்டாளி முகமது கவுஸுடன் தையல் கலைஞர் கன்யாலாலைக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியாவுடனும் உதய்பூர் பாஜக தலைவர் ரவீந்திர ஸ்ரீமாலியுடனும் அட்டாரி சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் முக்கியமாக காணப்படுகிறது. மேலும் பாஜகவின் முகமது தஹிர் மற்றும் இர்ஷாத் ஜெயின்வாலாவுடனான அட்டாரியின் உறவும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

இந்திய எதிர்க்கட்சிகளுடன் ரியாஸ் அட்டாரிக்கு இம்மாதிரியான உறவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், ஆதிக்க ஊடகங்கள் வெறித்தனமாக கிளம்பியிருக்கும். ஆர்எஸ்எஸ் -பாஜக நிறுவனங்கள், பயங்கரவாதிகளுக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதரவு அளிக்கின்றன என்று இதற்கு கத்தி கூச்சல் போட்டிருப்பார்கள். ஆனால், ரியாஸ் அட்டாரியின் பாஜகவினு டனான உறுதியான உறவை சத்தமில்லாமல் புதைக்கப் பார்க்கிறார்கள். மகாராஷ்டிராவின் அமராவதியில், வேதியியலாளர் ஒருவர் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக உள் நோக்கத்துடன் கொலை செய்யப்பட்ட இன்னொரு கொலைச் சம்பவமாகும். இந்தக் கொலைகள் நடத்தப்பட்ட விதம் புரிந்துகொள்ளத்தக்க வகையில் கவலை களை உண்டாக்குகின்றன. இதற்கிடையே, காஷ்மீரில் இருந்து மற்றொரு செய்தி வருகிறது. பாஜகவின் சிறுபான்மை சமூக ஊடகப் பிரிவினுடைய பொறுப்பாளராக கடந்த மே நியமிக்கப்பட்ட தலிப் மாதம் ஹூசைன்ஷா, தேடப்பட்ட பயங்கரவாதியும் லக்ஷர்-இ தொய்பாவின் காமாண்டரும் ஆவார் என்று கூறி காஷ்மீர் காவல்துறையினால் கடந்த ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உதய்பூர் மற்றும் அமராவதி படுகொலைகள் தொடர்பான புலன்விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லக்ஷர்-இ-தொய்பா கமாண்டரை பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளராக நியமித்த காஷ்மீர் சம்பவத்தைப் பொறுத்தவரை, பின்புலத்தை சரிபார்க்காமலும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட முறையுமே காரணம் என பழிபோடப்பட்டுள்ளது. பாஜகவின் பேச்சாளர் ஒருவர் இதை 'உயர்மட்ட தலைவர்களை கொல்வதற்கான சதித்திட்டம்' என ஏற்கனவே கூறிவிட்டார். மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த தொடர் மோதல் கொலைகளின் போதும் இதே திரைக்கதை வசனம்தான் பயன்படுத்தப்பட்டது. மிகச் சமீபத்தில், இஸ்ரே லின் உளவு மென்பொருள் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மின்னணு சாட்சியை உருவாக்கி பீமா கொரேகான் வழக்கில் மனித உரிமைப் பரப்புரையாளர்களை கைது செய்தார்கள். நுபுர் சர்மாவின் சர்ச்சையும் உதய்பூர் மற்றும் காஷ்மீர் கொலைகளின் வெளிப்பாடுகளும் 'பாஜகவின் உயர் மட்டத் தலைவர்களுக்கு ஆபத்து' என்னும் திரைக் கதைக்காகப் பயன்படுத்தப்படும் என்பதிலும் அதை வைத்துக் கொண்டு 2024 தேர்தலுக்காக இன்னுமொரு வேட்டை நடத்தப்படலாம் என்பதிலும் எவ்வித சந்தேகமும்
இல்லை.உண்மை கண்டறியும் முன்னோடி செய்தி நிறுவனமான அல்ட் நியூஸ்ஸின் இணை நிறுவனர்களான முகமது சுபையரின் கைதும் பிரதிக் சின்ஹாவை கைது செய்யக் கோரிய சமூக ஊடகங்களின் திட்டமிட்ட ஆரவாரமும், பொய்ச் செய்திகளை எதிர்த்த பிரச்சாரம் மற்றும் மாற்று ஊடகத்தை நொறுக்குவதற்காக ஏற்கனவே தொடங்கிவிட்ட மோசமான வேட்டையாகும். குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர் களுக்கான நீதி கேட்டு பிரச்சாரம் செய்ததற்காக டீஸ்டா செதல்வத், ஆர்.பி.ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் துன்புறுத்தப்படுவதுபோல், குறும் புத்தனமான பொய்களுக்கும் பொய்ச் செய்திக ளுக்கும் எதிரான போராட்டத்தில் துணிந்து செயல்பட்டார் என்பதற்காக முகமது சுபையர் இப்போது வேட்டையாடப்படுகிறார். வெறுப்பு, பொய், ஒடுக்குமுறை மற்றும் பயங்கரம் ஆகிய தூண்களால் தூக்கி நிறுத்தப்படும் ஆட்சிக்கு உண்மையும் நீதியும் வெறுப்பூட்டும் ஒன்றாகும். உண்மையையும் நீதியையும் இலக்குகளாகக் கொண்டு செயல்படும் குடிமக்கள் பயங்கரமான குற்றவாளிகளாக நடத்தப்படுகிறார்கள். அதானிகள், அம்பானிகளின் கட்டுக்கடங்காத கார்ப்பரேட் அதிகாரத்தின் ஆதரவால், அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகளை ஆயுதமாய் கொண்டு பாஜக, மேலும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை அமித்ஷா கூறுவதிலிருந்து தெரிகிறது. இந்திய ராணுவத்தையும் அரசியலாக்கி மறுகட்டமைப்பு செய்யும் அரசாங்கத்தின் திட்டங்களை அக்னிபாத் நமக்கு காட்டுகிறது. ராணுவ உயரதிகாரிகளோ இன்றைய அரசாங் கத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க, வேலை உத்தரவாதமும் சமூகப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்த ராணுவ வீரர்கள் களத்தில் போராடு வார்கள். உண்மையான நீதிமன்ற உத்தரவு வழங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே சுபைரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று போலீஸ் அறிவிக்கிறது. குஜராத் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடிய டீஸ்டா செதல்வத்தை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றமே தூண்டிவிடுகிறது. இது எதிர்கால இந்திய நீதித்துறை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டம் ஆகும்.மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில்,பாஜக, 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்பதில் இருந்து 'கருத்துச் சுதந்திரம் இல்லா ஜனநாயகம்' என்பதை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா அரசியலமைப்பின் முன்னுரைக்கு திரும்ப வேண்டிய நேரமிது. அரசியலமைப்பின் முன்னுரையை உரக்கச் சொல்லி, நவீன இந்தியா என்பது ஜனநாயகம், பன்மைத்துவம், மாற்றுக் கருத்து ஆகியவற்றை உள்ளடக்கியது என பிரகடனப்படுத்த வேண்டும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80ஆவது ஆண்டில், காலனி ஆட்சியாளர்களின் காலடியில் கிடந்தவர்கள் இந்தியாவை புல்டோசர் ஆட்சி செய்யும் ஒரு வாழைப்பழ குடியரசாக சுருக்கிவிட அனுமதிக்க மாட்டோம் அழுத்தம்திருத்தமாகக் கூறுவோம். என

எம்எல் அப்டேட்- தலையங்கம்

5-11 ஜூலை 2022

தமிழாக்கம் - சங்கரந்தம்பி.