எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை செயல்படாமல் ஆக்கியுள்ளதையும் பல்வேறு அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், செயல் பாட்டாளர்களை சிறையில் அடைத்து வைத்துள் ளதையும் நாம் அறிவோம். அமித்ஷா தமது கட்சியின் அகில இந்திய கூட்டம் ஒன்றில் அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சி தொடரும் என்று அறிவிக்கிறார்.அது மாத்திரம் அல்ல, தமிழ்நாடு உட்பட பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அறைகூவல் விட்டிருக்கிறார். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எப்பாடு பட்டாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு முற்போக்கு அம்சங்கள் இருந்தது.அது ஒரு சிறப்பான ஆட்சியாக இருந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறை ஆட்சி, படிப்பினைகளை வழங்கி இருக்கிறது. ஒவ்வொரு இடதுசாரி கட்சிகளும் தங்களது சொந்த வழியில் மாற்றத்துக்கான முயற்சி செய்து கொண்டிருக் கின்றன. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் அதிபர் பதவியில் அமர வைத்திருப்பது குறித்து பெருமை அடித்து கொண்டிருக்கிறார்கள். தண்டகாருண்யாவில் என்ன நடந்தது? எப்படி பழங்குடி மக்கள் வேட்டையாடப்பட்டார்கள்? எப்படி அவர்கள் வனங்களிலிருந்து துரத்தப்படுகிறார்கள்? எப்படி வனத்தின் செல்வாதாரங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு உள்ளாகிறது? என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். இன்றைக்கு ஊடகங்கள் மோடியை தோற்கடிக்கப்பட முடியாத பிரதமர் என்று சிலாகித்து முன்னிறுத்துகின்றன. இடதுசாரி ஒற்றுமையால் மட்டுமே மோடியை தோற்கடிக்க முடியும். ஒரு பக்கம் பிராந்திய கட்சிகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இடதுசாரிகள் தொடர்ந்து பிளவை சந்தித்துக் கொண்டிருக் கின்றன. இன்னொரு பக்கம் சாதி ரீதியான அணி திரட்டல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வர்க்க ரீதியாக மக்களை அணி திரட்டி இந்த ஆட்சியை முறியடிக்க வேண்டிய கடமை நம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இகை மற்றும் இகை(மா) கட்சிகள் எந்த காலத்திலும் வகுப்புவாத சக்திகளோடு உறவை மேற்கொள் ளாதவர்களாக இருந்து வருகிறார்கள்.

திராவிட மாதிரி' என்பது சோசலிசத்துக்கு மாற்றாக அமையாது என்பதை நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அது உண்மையான மாற்றமாக அமையும் என்றார்.