அக்டோபர் 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடி ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மாநில செயலாளர் தோழர் ராஜசங்கர் விளக்கி பேசினார்.
https://youtu.be/_uaGgg2wP30
https://fb.watch/ghS9dPnT9A/
மேலும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் கந்தசாமி, கல்யாணி, ஏழுமலை, அன்பழகன், தட்சணாமூர்த்தி, கலாமணி, எல்லப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகள்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 28 பேர்கள் எந்த வித முன்னறிவிப்பு இன்றி சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்!
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அக்டோபர் 01-லிருந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எந்த முன் நிபந்தனை இன்றி வேலை வழங்கிட வேண்டும்.