2024 பொதுத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கின்ற நிலையில், பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வருமானமின்மை என பற்றி எரியும் பிரச்சனைகளை பொதுவான இந்தியர் சந்தித்துக் கொண்டிருக்க, மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக மோடி ஆட்சி அதனுடைய பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான உத்தியான மதவெறிக்கு பலிகடா ஆக்குவதில் ஆவலுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. புல்வாரியிலும் பீகாரின் மற்ற பகுதிகளிலும் ஜூலையில் நடந்த தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சோதனைகள், விடுதலையின் 75ஆம் ஆண்டை இந்தியா கொண்டாடிக் கொண்டிருந்த அந்த நாளில், குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் பாலியல் வன்புணர்வுக்காகவும் கொலைக் குற்றத்திற் காகவும் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்து விருந்து வைத்தது, இப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளை தடை விதித்தது இவை யெல்லாம் சங் - பாஜக படைகள் வரவிருக்கிற தேர்தல்களுக்கு இவ்வாண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில், 2023ல் நடைபெறவிருக்கும் பல்வேறு சட்டமன்றத் தேர்தல்கள், 2024ல் முக்கிய போர்க்களத்திற்கு எவ்வாறு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்குச் சொல்கின்றன.

2002 கோத்ராவுக்குப் பிந்தைய, குஜராத் இனப் படுகொலை யைத் தொடர்ந்து, மோடி ஆட்சி குஜராத்தின் அடையாளத்தையும் மாண்பையும் சீர்குலைத்து விட்டது என உலகளவில் மோடி கண்டனத்திற் குள்ளானார். அதனால், தன்னுடைய அதிகா ரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக 'குஜராத்தின் கவுரவம்' அல்லது குஜராத்தின் பெருமை என்று தேர்தல் முழக்கத்தை உருவாக்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சக்திகளின் சமநிலையும் மைய நீரோட்ட ஊடகங்கள் வெளிப்படுத்திய குணங்களும் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மோடி குஜராத்தை தக்கவைக்கத் தடுமாறிக் கொண்டி ருந்தபோது, 'இந்தியா ஒளிர்கிறது' என்று ஓங்கி ஓங்கி பிரச்சாரம் செய்தபோதும் வாஜ்பாயும் அத்வானியும் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது. வாஜ்பாய்-அத்வானியின் சகாப்தத்திற்கான முடிவுரை முடிவுரை எழுதுவதற்கு இட்டுச் சென்றது, நடைமுறை எதார்த்தமாக இருந்த விவசாயிகள் தற்கொ லைகள், பொருளாதார மந்தநிலை மட்டுமின்றி, குஜராத் இனப் படுகொலையும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.

குஜராத்திற்குள் மோடி எப்படியோ, 'அதிரும் குஜராத்' என்று சொல்லி, இந்தியாவின் பெரு முதலாளிகளை தன் பின்னால் அணிதிரட்டி அவர்களின் விசுவாசத்தைப் பெற்றார். அரசு அதிகாரம்- ஒரு கடிவாளம் இல்லாத நிர்வாகி நடத்தும் தான்தோன்றித்தனமான போலீஸ் அரசு இனவெறித் தத்துவத்தையும் கார்ப்பரேட் நலன்களையும் ஒன்றிணைத்துப் பின் அதை கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டது. இப்போது ஆர்எஸ்எஸ்ஆல் ஆசிர்வதிக்கப்பட்ட உசந்த தலைவரின் ஆட்சியை தங்குதடையின்றி உத்தரவாதப்படுத்துவதற்காக இந்த 'குஜராத் மாதிரி' இந்தியா வெங்கும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. உச்சத் தலைவருக்கு ஆபத்து என்றும் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் அவ்வப்போது குற்றச்சாட்டை அவிழ்த்துவிட்டு இந்தியா என்கிற ஒரு நாட்டையே அந்தத் திரைக்கதைக்கு மையமாக ஆக்கியுள்ளார்கள்.

70களின் மத்தியில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் போது, அன்றைய உச்சத் தலைவர் இந்திராதான் இந்தியா என்கிற முழக்கத்தை நாம் கேட்டோம். அன்று இந்தியாவையும் இந்திராவையும் சமமாகக் கூறியதுபோல் இப்போது இந்தியாவும் தலைவ ருக்கும் இந்து அடையாளத்தை நடுவிலே சொரு கியிருக்கிறார்கள். ஏனென்றால், தலைவர் இந்துக்களின் இதயங்களில் உள்ள சக்கரவர் தியாம். ஆட்சியை, அதன் தீய அரசியலை, பேரழிவுமிக்க செயல்பாடுகளை விமர்சனம் செய்பவர்கள் தேச விரோதி என்றும் இந்து விரோதி அல்லது இந்து வெறுப்பாளன் என்றும் இப்போது தொடர்ந்து குற்றஞ்சாட்டப் படுகிறார்கள். சங்கிப் படைகள் இந்தியாவை இந்து நாடு என்று வியாக்யானம் செய்வதில் இருந்து இது வருகிறது. வெளியில் இருந்து ஆபத்து அல்லது நாட்டிற் குள்ளேயே ஆபத்து என்று அரசாங்கம் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறது. மாற்றுக் கருத்து கூறும் குடிமக்களை பல வகைகளில் பிரித்து அவர்களை உள்நாட்டு எதிரிகள் என்று பட்டம் கட்டுகிறது. நகர்புற நக்சல்கள் என்று கூச்சல் போட்டு பலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்தியாவின் தீவிரமாகச் செயல்பட்ட மனித உரிமைப் போராளிகள் சிறையிலேயே மரணம் அடைந் தார்கள். இப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் இணை அமைப்பு களையும் தடை செய்துள்ளதானது இந்திய இஸ்லாமியர்களை பாகுபாடு இல்லாமல் வேட்டையாடுவதற்கான தொடக்கம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

நெருக்கடி நிலை காலத்தில், இந்திய பத்திரி கைகள் தணிக்கைக்குள்ளாயின. பெரும ளவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் டைக்கப் பட்டனர். ஜனநாயகத்தை மீட்போம் முழக்கம் முக்கியமானதாக இருந்தது. பரந்த அளவில் அதன் தேவை உணரப்பட்டது. நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டது, சர்வாதிகார ஆட்சி தோற்கடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் சிறைவாசிகளும் விடுதலை செய்யப் படவேண்டும் என்றும் 1974 இரயில்வே வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்து வேலை இழந்த அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும் என்றும் உணர்வு பூர்வமான பிரச்சாரம் நடந்ததை காணமுடிந்தது. இப்போது, பெரும் பாலான மைய நீரோட்ட ஊடகங்கள் ஆட்சியாளர் களின் பிரச்சார சாதனமாக மாறி விட்டன. சிறைவாசப் பிரச்சாரமானது பெருமள வில், கட்சி சாராத செயற்பாட்டாளர்கள் மத்தி யிலேயே சுருங்கிப் போய்விட்டது. இதற்கு ஜம்மு-காஷ்மீர் விதிவிலக்கு. அங்கே அரசியல் சட்டப்பிரிவு 370ஐ முடக்கியதைத் தொடர்ந்து அங்குள்ள ஒட்டு மொத்த எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களையும் சிறையிலடைத்துள்ளார்கள் அல்லது வீட்டுக் காவலில் வைத்துள்ளார்கள்.

வேட்டையாடுதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற, அரசியல் சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக இன்னும் ஏன் முன்வர வில்லை என்பதை இது கொஞ்சம் விளக்கலாம். மேலும், எதிர்க்கட்சிகள் பொருளாதாரப் பிரச்சனை யில் மட்டுமே கவனம் குவிக்க வேண்டும் என்கிற பழைய தவறான நம்பிக்கையும் இருக்கிறது. சந்தையானது பாஜகவின் மதவெறி அரசியலை ஊதித் தள்ளிவிடும் என்று நரசிம்மராவ் பெரிதும் நினைத்தார். ஆனால், சந்தை அடிப்படைவாதமும் மதவெறிப் பாசிசமும் பத்து பொருத்தத்துடன் மணம் புரிந்து கொண்டுள்ளதை மோடியின் நிகழ்வு தெளிவாகக் காட்டுகிறது. இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் தங்களு டைய முக்கிய நிகழ்ச்சி நிரலில் அரசியல் சுதந்திரத்திற்கான தேவைக்கு அழுத்தம் கொடுத்து விழித்தெழுவதற்கான நேரம் இதுதான். அரசியலமைப்புச் சட்டத்தைக் கீழ்ப்படுத்திடவும் எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு கட்சி அரசியலுக்கு இந்தியாவை மாற்றிடவும் பாஜக முனைந்து கொண்டிருக்கும்போது, ஜனநாயகத்தை, அரசியல மைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க எதிர்க் கட்சிகள் தயக்கமின்றி எழுந்து வரவேண்டும். பாசிசத்திற்கு எதிரான போரில் ஜனநாயக நிகழ்ச்சி நிரலை ஒத்திப்போடவோ, துண்டிக்கவோ இயலாது.