பல ஆண்டுகளாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும், அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல கட்சி ஜனநாயகமும் கூட்டாட்சி கட்டமைப்பும் என்றென்றைக்குமானது என நம்பிக் கொண்டிருந்தோம். நாம் இனியும் அவ்வாறு நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை 2024 தேர்தல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆளுகின்ற ஆட்சி முறைக்கு மாற்றிட மோடி அரசாங்கம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. பதவியில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் உட்பட, இரண்டு முதலமைச்சர்கள் தேர்தல் காலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊழலை சட்டபூர்வமாக்கிய, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான தேர்தல் பத்திரங்களை செல்லாதவை என அறிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோசமாக விமர்சிக்கப்படுகிறார்.

இந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் அபாயகரமான அளவில் வலுவிழக்கச் செய்யப் பட்டிருக்கிறது. மேலும், தற்போது இந்த அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் 400 க்கும் அதிகமான பெரும்பான்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மோடி அரசாங்கத்திற்கு ஒரு மூன்றாவது பதவிக்காலம் வழங்கப்படுமானால், அது நம்முடைய அரசமைப்புச் சட்டத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், நம்முடைய கலாச்சார பன்மைத்துவத்துக்கும் அன்றாட இருத்தலுக்கும் பேரழிவாகப் போய்முடியும்.

அதிகாரத்தில் தொடர்வதற்காக அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான எல்லா நடவடிக்கைகளையும், முறைகேடான வித்தைகளையும் இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறது. அதற்கு மோடியின் கார்ப்பரேட் நண்பர்களையும் "ஊதுகுழல்" ஊடகங்களையும் துணையாகக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களாகிய நாம் இந்தப் பேரழிவு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, நம்முடைய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அதிகாரமான, வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் துடிப்பான ஜனநாயக நாடாக இந்தியாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள். எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானகரமான போராட்டத்தில், சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க, ஜனநாயகத்தின் வெற்றிக்காக அவற்றைப் பயன்படுத்துங்கள். 

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐஎம்எல் லிபரேஷன் கட்சி, பீகாரில் அரா, காராக்கட், நாலந்தா ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எங்களது துடிப்பான இளம் தலித் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் மன்சிலுக்கு வழங்கப்பட்ட அநீதியான தண்டனையை, தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து பீகாரில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுகிறோம்.

தோழர்கள் வினோத் சிங், ராஜாராம் சிங், சுதாமா பிரசாத், சந்தீப் சவுரவ், சிவ பிரகாஷ் ரஞ்சன் ஆகிய எங்களது வேட்பாளர்கள் கொடர்மா, காராகட், அரா, நாலந்தா, ஏகியோன் (எஸ்சி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

இந்தத் தொகுதிகளில் நாங்கள் வீடு வீடாகச் சென்று நன்கொடை கூப்பன்கள் மூலம் மக்களிடமிருந்து நிதி பெறுவதற்கான விரிவான இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

₹20, ₹50, ₹100 தொகைகளில் மக்களால் வாங்கப்படும் இந்தக் கூப்பன்கள் தான், பாஜகவின் தேர்தல் பத்திரங்களையும், கார்ப்பரேட் லஞ்ச ஊழல் அரசியலையும் அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடுவதற்கான எமது மிகப்பெரிய ஆயுதமாகும். உள்ளூர் அளவிலான இந்த அடிப்படை ஆதரவைத் தாண்டியும் எங்களது அனைத்து நலன் விரும்பிகளின் தாராளமான நிதி ஆதரவு எங்களுக்குத் தேவைப்படுகிறது.

உங்களது நண்பர்களுடன் இந்த வேண்டுகோளை விரிவாகப் பகிருங்கள். எங்களுக்குத் தேவையான நிதியைப் பெற உதவுங்கள்.

www.cpiml.net என்ற இணையதளம் சென்று ஆன்லைன் மூலமாக நன்கொடைகள் வழங்கலாம். 

மேலும் வங்கிகள் மூலம் நன்கொடை அளிப்பதற்கு (இந்திய குடிமக்கள் மட்டும்), 

வங்கிக் கணக்கின் பெயர்: CPI(ML)

வங்கிக் கணக்கு எண்.: 9050 2010 057 518

IFSC Code: CNRB 0019050

MICR No.: 110015388

வங்கியின் பெயர்: கனரா வங்கி, நிர்மான் விஹார், டெல்லி – 110 092

(₹20,000 அல்லது அதற்கு அதிகமாக நிதியளிப்பவர்கள் அருள் கூர்ந்து உங்களது PAN எண்ணை எங்களுக்கு contribution@cpiml.org என்ற இ-மெயில் மூலம் தெரியப்படுத்தவும். 

சிபிஐஎம்எல் கட்சிக்கு அளிக்கப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் (80GGC என்ற பிரிவின் கீழ்) வருமான வரி விலக்கு உண்டு.