இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்,

நாகைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

தோழர்  செல்வராசுக்கு செவ்வஞ்சலி!

கம்யூனிஸ்ட் இயக்க கோட்டையாக விளங்கிய காவிரிச் சமவெளிப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் மக்கள் இயக்கத் தலைவராகவும் விளங்கிய தோழர் எம்.செல்வராசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சி அளிக்கிறதுமாணவர் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தோழர் எம் செல்வராசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்பல நிலைகளில் பொறுப்பு வகித்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் இடதுசாரி இயக்கத்தின் முன்னேற்றத்துக்கும் பங்களித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையான காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியமாபெரும் மக்கள் இயக்கமானமனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதில் முதன்மைப் பங்கு வகித்தவர் தோழர் செல்வராசுதோழர் செல்வராசுவின் தொடர்ச்சியான போராட்டங்கள்மக்கள் பிரதிநிதியாக நான்கு முறை வெற்றிபெறச் செய்து அவரை மக்களவைக்கு அனுப்பி வைத்தது.

ஒத்துழைக்க மறுக்கும் உடல்நிலைக்கு மத்தியிலும்பாசிச பாஜக ஆட்சியை தோற்கடிக்கும் முனைப்புடன்நடப்பு மக்களவை தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தோழர் செல்வாரசுவின் திடீர் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி இடதுசாரி இயக்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் தலைவராக அறியப்பட்ட தோழர் செல்வராசுவின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்மாநிலக் குழு தனது செவ்வஞ்சலியை செலுத்துகிறது.

அவரை இழந்து வாடுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவரது இணையர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பழ ஆசைத்தம்பி,

மாநிலச் செயலாளர்

இகக(மாலெ), தமிழ்நாடு