தீவட்டிப்பட்டியில்பட்டியலின மக்கள் மீது
சாதியாதிக்கத் தாக்குதல்
சேலம், தீவட்டிப்பட்டி அருள்மிகு பெரியமாரியம்மன் கோவில் வழிபாட்டுமுறையில் தலித் மக்கள்புறக்கணிக்கப்பட்டதால் சாதியாதிக்க மோதல் ஏற்பட்டது.
இதனைகளஆய்வுசெய்வதற்காகநீதிக்கான மக்கள் இயக்கம்மற்றும் அனைத்திந்திய நீதிக்கானவழக்கறிஞர் சங்கம், இகக(மாலெ) குழுவினர் 14.5.2024 அன்று அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நீதிக்கானமக்கள் இயக்கம் சார்பாக அ.சிம்சன்,அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்சங்கம் சார்பாக வழக்குரைஞர் க.ஞானதேசிகன், முனைவர்அரச.முருகுபாண்டியன் பி.யு.சி.எல், அகில இந்திள முற்போக்குபெண்கள் கழகம் பி்லோமினா, அகிலஇந்திய விவசாயிகள் மகாசபைஅய்யன்துரை, இகக(மாலெ) மாநிலச்செயலாளர்பழ.ஆசைத்தம்பி, மத்தியக்குழுஉறுப்பினர்சந்திரமோகன், மாநிலக்குழுஉறுப்பினர்வேல்முருகன், பத்திரிக்கையாளர் தங்கதுரை உள்ளிட்ட குழுவினர்அப்பகுதிமக்களையும்அரசுஅதிகாரிகளையும்சந்தித்துகளஆய்வுமேற்கொண்டனர்.
சேலம்மாவட்டம், கடையாம்பட்டிவட்டம், தீவட்டிப்பட்டிகிராமத்தில் உள்ள அருள்மிகுபெரிய மாரியம்மன் கோவில்திருவிழா 2024 ஏப்ரல் 29 முதல் மே வரை நடைபெற இருந்தது. மே 1 ந்தேதி இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அலகு குத்தும்நிகழ்வு நடப்பதாக அறிவிப்புசெய்யப்பட்டிருந்தது. அதனையொட்டிமே 1 ந் தேதிநாச்சினம்பட்டி காலனி ஆதிதிராவிடசமூக மக்கள் பெண்கள் 4 பேர்அலகு குத்தி மாரியம்மனுக்கு நிவர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றனர். வழக்கமாகபூசை செய்வதற்கு வரும்பூசாரிகோவிலுக்குவராமல்இரவு 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரை, ஆதிதிராவிட சமூகத்தின்நான்கு பெண்களையும் காத்திருக்கவைத்திருக்கிறார். அதன்பின்அவர்கள் நால்வரும் தாங்கள்ஏற்பாடு செய்த தனிநபர் மூலமாக அலகுகுத்திக் கொண்டனர். பின்னர்அலகை நீக்கிவிட்டு சாமியை வழிபடக்கோவிலுக்குள் சென்றனர். அப்போதுஅங்கு நின்றிருந்த, கோவில் தர்மகர்த்தாஎன அறிவிப்புச் செய்துகொண்ட, மருதைய்யா பிள்ளை, ராஜூ, கிருஷ்ணன், தினேஷ்குமார், வெங்கடேஷ் மற்றும் கூடிஇருந்த பலரும் அப்பெண்களைகோவிலுக்குள் செல்ல அனுமதிக்கமுடியாது எனச் சொல்லி, வெளியில் நிறுத்தி திருநீறுவழங்கியிருக்கிறார்கள். வழக்கத்திற்குமாறாக, கோவிலுக்குள் அனுமதிக்காத அச்செயலைக்கண்டித்து நாச்சினம்பட்டி காலனிமக்கள் சுமார் நூற்றுக்கும்மேல் கோவிலின் முன்பாகஒன்று திரண்டு தர்ணாபோராட்டம் செய்துள்ளனர். போராட்டம்இரவு 12.00 மணி வரைநீடித்தது. வட்டாட்சியர்மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்ஆகியோர் கோவிலில் திரண்டிருந்தமக்களைச் சமாதானப்படுத்தி இதுவிசயமாக அமைதிப் பேச்சுவார்த்தை மே 2 காலை 10 மணிக்குவட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்என அறிவித்ததன் அடிப்படையில்கூட்டம் கலைந்து சென்றது.
மே 2 அன்று காலை 10 மணிக்குபேச்சு வார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில், ஆதிதிராவிட மக்கள்பிரதிநிதிகளாக 10 நபர்கள், தலித் அல்லாத சமூகமக்கள் பிரதிநிதியாக 10 நபர்கள், இந்து அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் சில அரசு அதிகாரிகளும்கலந்து கொண்டனர். அருள்மிகு பெரியமாரியம்மன் கோவில் இந்துஅறநிலையக் கட்டுப்பாட்டில் 1973லேயே இணைக்கப்பட்ட செய்தியைஅறநிலையத்துறை அதிகாரி அறிவிப்புசெய்துள்ளார். ஆகவே இக்கோவில் பொதுக்கோவில். அனைவரும்கோவிலுக்குள் செல்ல அனுமதிஉண்டு எனச் சொன்னவுடன்தலித் அல்லாத சமூகத்தார்இச் செய்தி எங்களுக்குத்தெரியாது என்று கூறி, இங்கு வராதஎங்கள் ஊர் மக்களைக் கூட்டிப்பேசி விட்டுத்தான் முடிவுதெரிவிப்போம் எனச் சொல்லி விட்டனர்.அதனடிப்படையில், ஒரு நாள்அவகாசம் அளிப்பதாக வட்டாட்சியர்அறிவிப்புச் செய்து, அமைதிப்பேச்சு வார்த்தை முடிவுக்குகொண்டு வரப்பட்டது.
அதன்பின்,அன்று மதியம் 2.30 மணிஅளவில் ஆதிதிராவிடமக்களுக்கும் தலித் அல்லாத சமூகத்தாருக்கும் இடையே கலவரம்மூண்டது. கல் வீசப்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுதீ வைக்கப்பட்டது. பலர்காயமடைந்தனர். ஆதிதிராவிடமக்களுக்கு பாதிப்புகள் அதிகமாகஉள்ளன. இரண்டு சமூகமக்கள் மீதும் வழக்குகள்பதியப்பட்டுள்ளன. ஆதிதிராவிடப் பெண்கள்கோவிலுக்குள் செல்ல மறுப்புத்தெரிவித்த 10க்கும் மேற்பட்டநபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. மேற்கொண்டகளஆய்வின்அடிப்படையில்,உண்மை அறியும் குழு அரசிற்கு முன் வைக்கும்உடனடிக் கோரிக்கைகள்.
நாச்சினம்பட்டிஆதிதிராவிட மக்கள் தேங்காய்தொழிற்சாலையிலும் எண்ணெய் மில்களிலும்விவசாய வேலைகளிலும் ஈடுபட்டுவரும் அன்றாடக்கூலித் தொழிலாளர். தங்கள் அடிப்படைவாழ்வாதாரத்திற்காக மேற்படி தலித் அல்லாதசமூக மக்களைச் சார்ந்தேஇருக்க வேண்டிய சூழல்உள்ளது. தற்போது தொழில் உரிமையாளர்கள் அனைவரும்,கோவில் பிரச்சினைக்குப் பின்,நாச்சினம்பட்டி ஆதிதிராவிட மக்களுக்குவேலை தர மறுத்ததால் கிட்டத்தட்ட 15 நாட்களாக உணவுக்குக் கூட வழியின்றித் தவிக்கின்றனர். அரசு உடனடியாக அவர்களுக்குத்தேவையான உணவு மற்றும்மருத்துவ உதவிகளை போர்க்காலஅடிப்படையில் ஏற்பாடு செய்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியஊரகவேலைத்திட்டத்தைஉடனடியாகதுவக்கவேண்டும்.
இக்குழுவின்முழு விசாரணை அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)