தோழர் திபங்கர்நேர்காணல்

[மூத்த இதழியலாளர் ஊர்மிலேஷ் அவர்களுக்கு பீகார் அரசியல், தேர்தல் நிலவரம் குறித்து சிபிஐஎம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் அளித்த நேர்காணல்]

ஊர்மிலேஷ்

இந்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில்குறிப்பாக பீகார்இடதுசாரி கட்சிகளுக்கானசெல்வாக்கு மிக்க பகுதியாக இருக்கிறதுபீகாரிலும் நாடுதழுவிய அளவிலும், முக்கிய இடதுசாரி கட்சியாக, அரசியல் செல்வாக்கு பெற்ற, ஆற்றல் நிறைந்த  கட்சியாக சிபிஐஎம்எல்திகழ்கிறதுஇங்கே அதுசக்தி வாய்ந்த முறையில்செயல்படுவது மட்டுமல்லஇந்தியா கூட்டணியின்அங்கமாகவும் செயல்படுகிறது. 40 தொகுதிகள் இருக்கும்பீகாரில்சிபிஐஎம்எல் ஒருஆற்றல் மிக்க சக்தியாக செயல்பட்டு வருகிறது.

நடந்து கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் பிரச்சனைகள்குறித்து உரையாட சிபிஐஎம்எல் விடுதலைகட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர்அவர்கள் நம்முடன் இருக்கிறார்.

இந்தியா கூட்டணியின் பீகார் அவதாரமான மகா கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குதொகுதிகள்மட்டுமேகிடைத்திருக்கிறது. அது பற்றி உங்களுக்கு மகிழ்ச்சிதானா? அல்லது அது மிகவும் குறைவு எனக் கருதுகிறீர்களா?

இது எங்கள் கட்சி குறித்த விசயம் மட்டுமல்ல. பீகாரில் பலரும் மாலெ கட்சிக்கு மிகவும் குறைவான தொகுதிகளே கிடைத்திருக்கிறது எனச் சொல்கிறார்கள்மாநிலத்தில் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால்காங்கிரசுக்கு 19 எம் எல் ஏ க்கள் இருந்தார்கள்இருவர் பிஜேபிக்கு சென்று விட்டார்கள். 17 பேர் மட்டுமே இருக்கிறார்கள். 9 தொகுதி கிடைத்திருக்கிறது. எங்களுக்கு 12 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால், 3 தொகுதிதான் கிடைத்திருக்கிறது. விகிதாச்சாரப்படி பார்த்தால்காங்கிரசுக்கு 2:1 என்ற அடிப்படையிலும் எங்களுக்கு 4:1 என்ற அடிப்படையிலும் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றனகடந்த சட்டமன்றத் தேர்தலில்மகா கூட்டணியிலேயேஅதிக தாக்கும் திறன் (ஸ்ட்ரைக் ரேட்பெற்ற கட்சியாக எமது கட்சிதான் எழுந்து வந்திருக்கிறது. எனவேவழங்கப்பட்ட தொகுதிகள் மிகவும் குறைவுதான். ஆனாலும்இதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை. பாசிச எதிர்ப்புப் போராட்டம்பிஜேபியை தோற்கடிப்பது என்கிற ஒரு மாபெரும் அரசியல் கடமையை முன்னிறுத்திதொகுதிப் பிரச்சனையை பெரிதுபடுத்தாமல், மக்களிடமே அதை விட்டுவிட்டோம்.

உண்மைதான்ஒட்டுமொத்தத்தில்மாலெ கட்சி தாக்கும் திறனில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இம்முறை மக்களவைத் தேர்தலிலும் பிஜேபியை வீழ்த்திடுவதில் அதே போல செயல்பட முடியும் எனக் கருதுகிறீர்களா?

கண்டிப்பாகஅதே போல செயல்பட முடியும் எனும் நம்பிக்கை இருக்கிறதுபீகார் பற்றிப் பேசும்போது பலரும் 2019 ஐ ஒப்பிடுகிறார்கள். 2019 ஒரு வழக்கத்துக்கு மாறான தேர்தல். 2020 சட்டமன்றத் தேர்தலைத்தான் ஒப்பிடுவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும்பீகாரோடு, ஜார்க்கண்டையும் சேர்த்துஒன்றுபட்ட பீகார் என எடுத்துக் கொண்டால், மொத்தம் 54 (40+14) தொகுதிகள் இருக்கின்றனஇதில் தேசிய ஜனநாயக கூட்டணி 2019ல் 51 (39+12) தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால், 2019 இறுதியில் ஜார்க்கண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்தது. பிஜேபி தலைமையிலான மாநில அரசாங்கம் பதவி விலகியதுஓராண்டுக்குப் பிறகு, 2020ல்கொரோனா காலத்தில்பீகாரில் தேர்தல் நடந்ததுஅப்போது எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட பெரும்பான்மையைத் தொட்டுவிட்டனகிட்டத்தட்ட பாதிக்குப் பாதி தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. 2020 நிலைமையிலிருந்து, பின்னோக்கிச் செல்வதல்லமுன்னேறிச் செல்ல வேண்டும் என முயற்சிக்கிறோம்.

இடைப்பட்ட காலத்தில்நிதிஷ் எங்களோடு வந்தார்மீண்டும் திரும்பிச் சென்று விட்டார். இந்தியா கூட்டணிஎதிர்க் கட்சி ஒற்றுமை உருவாவதில் நிதிஷ்-க்கும் ஒரு பங்கு இருக்கிறதுநிதிஷ் போய்விட்டால்எதிர்க் கட்சி ஒற்றுமையும் சிதைந்து விடும் என சிலர் கருதினர்ஆனால், அது தலைகீழாக நடந்திருக்கிறதுஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் கைதுபீகாரில் நிதிஷ் குமார் அடித்த அந்தர் பல்டிஇந்தப் பின்னணியில் இரண்டு மாநிலங்களிலுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான சூழல்இந்தியா கூட்டணிக்கு ஆதரவான சூழல் உருவாகி இருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான சூழல் இருந்தாலும், பிஜேபி க்கு பிரச்சனை ஏதுமில்லை என சிலர் கருதுகின்றனர். அது அப்படியல்ல என நான் கருதுகிறேன்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக சூழலில் பிஜேபியும் பாதிக்கப்படும்பிஜேபி அதிலிருந்து தப்ப முடியாது என நான் கருதுகிறேன்.

ஜேடியு மற்றும் லோக் ஜன்சக்தி கட்சிகளுக்கு அதிக வீழ்ச்சி இருக்கும்தான்ஆனால்பிஜேபியும் அத்தகைய வீழ்ச்சியிலிருந்து தப்ப முடியாது. 2020ல் நாங்கள் எவ்வளவு வெற்றி பெற்றோமோ அதிலிருந்து மேலும் முன்னேறிச் செல்வோமே தவிர, பின்னோக்கிச் செல்ல மாட்டோம் என உறுதியாக நம்புகிறேன்.

ஆர் எஸ் எஸ் அடித்தளம், பணபலம்அரசுஅதிகாரபலம் எல்லாம் பிஜேபிக்கு சாதகமாக இருக்கிறது என்கிறார்கள். பிஜேபியிடம் இந்து ராஷ்ட்ரா என்கிற அரசியல் லட்சியம் இருக்கிறது. அதில் ஜேடி யுஎல்ஜேபியும்உள்வாங்கப்பட்டிருக்கிறது. பிஜேபிக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறதோ அதை ஜேடியு வும் எல்ஜேபியும் அதிகப்படுத்துகிறது. அப்படி இருக்கும் போது நிதிஷ் அரசியல் பல்டி அடித்ததனால் அவர் மட்டுமல்ல, பிஜேபியையும் அது பாதிக்கும் என்பதற்கு நீங்கள் சொல்லும் குறிப்பான காரணம் என்ன?

கடந்த தேர்தலில் பீகாரில் பிஜேபி 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதுஅந்த வெற்றி பிஜேபியின் சொந்த அடித்தளத்தின் அடிப்படையில் கிடைத்ததல்லபுல்வாமா தாக்குதல் சூழலில் கிடைத்தது. அதைக்கூட விட்டுவிடுவோம்அத்தகைய வெற்றிக்கு அதன் கூட்டணி ஒரு முக்கிய காரணம். பிஜேபிக்கு பாரம்பரிய செல்வாக்கு இருந்த பட்னா போன்ற ஒரு சில பெரிய நகரங்களை விட்டுவிட்டால்அதற்கு வெளியே பிஜேபிக்கு அத்தகைய ஒரு பாரம்பரிய அடித்தளம் இருந்ததில்லைஅப்படி பிஜேபி தனது அரசியல் லட்சியத்தை வைத்துக்கொண்டே தேர்தலில் ஜெயிக்க முடியும் என்றிருந்தால்நிதிஷை உடைத்து வெளியே கொண்டுவர வேண்டிய அவசியம் பிஜேபிக்கு ஏன் வந்ததுநிதிஷை உடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு சுமையையும் சேர்த்துக் கொள்கிறோம் என்பது பிஜேபிக்கும் தெரியும்அவர்களும் லாபநஷ்ட கணக்கு போட்டுப் பார்த்திருப்பார்கள்அதில் நஷ்டம் குறைவாகவும் லாபம் அதிகமாகவும் கிடைப்பதாக கணக்கிட்டிருப்பார்கள். அதன் காரணமாகவேநிதிஷைத் தங்களோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்மெல்லமெல்ல பிஜேபிக்கு இப்போது புரிகிறது; வீழ்ச்சி ஜேடியுவுக்கு மட்டுமல்லபிஜேபிக்கும் தான் என்பதுஅது விகிதாச்சார அடிப்படையில் பிஜேபிக்கு சற்று குறைவாகவும் ஜேடியுஎல்ஜேபிக்கு அதிகமாகவும் இருக்கலாம்.

மகா கூட்டணியில் மிகப்பெரும் கட்சி ஆர்ஜேடி. அதனிடம் மக்கள் அடித்தளம் இருக்கிறது. யாதவர்முஸ்லீம்ஆதரவுஅடித்தளம்இருக்கிறது. அதில் இதர சில சமூகங்களின் ஆதரவையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள், உதாரணத்திற்கு குஸ்வகா சமுதாயத்தின் ஆதரவு. ஆனாலும்பிற்படுத்தப்பட்டசமூகங்களின்பெரும்பிரிவு, குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இன்னமும் நிதிஷ் குமாரின் பின்னால் இருப்பதாக சொல்லப்படுகிறது. நிதிஷ் பல்டி எதுவும் அவர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறதா? அல்லது அதில் உங்களின் மகா கூட்டணி ஏதும் செல்வாக்கு பெற்றிருக்கிறதா?

நிதிஷ் பல்டி அடித்ததன் காரணமாகவே பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது எனச் சொல்ல முடியாதுஆனால்அதற்கு முன்னால், ஒரு சமூக பொருளாதார கணக்கெடுப்புசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுஅது பீகார் மக்களின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பீகார் வளர்ச்சி அடைந்து விட்டது என தம்பட்டம் அடிக்கப்பட்டது. ஆனால்மாநில மக்கள் தொகையில் 33-35 சதவீதத்திற்கும் மேல்மாதம் ரூ 6000 க்கும் கீழ் வருமானம் உடையவர்களாக இருக்கிறார்கள்சுமார் 63-65 சதவீதம் மக்கள் ரூ 10000 க்கும் கீழ் வருமானம் உடையவர்களாக இருக்கிறார்கள்ஏழைகளாக இருக்கிறார்கள்நிதிஷ் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். 20 ஆண்டுகளில் என்னதான் வளர்ச்சி என கூறப்பட்டாலும் ஏழை மக்களுக்கு எந்த வளர்ச்சியும் இல்லைஇதுதான் பீகாரின் யதார்த்தம்.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிப் பேசும்போது அது எப்போதும் நிலையானது போல பேசுகிறார்கள்சாதிய சமன்பாடுகள் நிலையானவை அல்ல. அவை இயங்காற்றல் கொண்டவைஅவை மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்றைய பீகாரில்மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியிலும் உணவு, உடைஇருப்பிடம் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அவர்களுக்கு வீடு ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறதுநாடு முழுவதுமுள்ள ஏழை மக்களுக்குவறியவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்தும் பீகார் மாநில ஏழை மக்களுக்கும் இருக்கின்றன.

இது தவிரஇந்தத் தேர்தலில் இன்னும் இரண்டு முக்கிய பிரச்சனைகள் முன்வந்திருக்கின்றனஒன்று இளைஞர் பிரச்சனைவேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுக்க பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 2020 தேர்தலிலும் கூட வேலையில்லாத் திண்டாட்டம்இளைஞர் மத்தியில் ஒரு கொந்தளிப்புமிக்க பிரச்சனையாக இருந்ததை நாம் கண்டோம். இதை சாதீய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடியாதுஇது சாதீய அணிசேர்க்கை என்கிற கண்ணோட்டத்தைப் பொய்யாக்கி ஒரு புதிய சமன்பாடு உருவாவதைக் காட்டுகிறது.

அதே போலஅரசமைப்புச் சட்ட நெருக்கடி என்பது கிராமங்கள் தோறும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தோடு இட ஒதுக்கீடும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது வெறும் இட ஒதுக்கீடு குறித்தது மட்டுமே அல்லபிஜேபியின் அதிகரித்து வரும் மதவெறிவாதம்மனு ஸ்மிருதியைக் கொண்டு வருவது போன்றவை குறித்ததுமாகும். இதிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் விலகி நிற்க முடியாது. இது அனைத்து தலித் பகுஜன் மக்களையும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நாடு முழுக்க இந்தப் பிரச்சனைகள் மீதுதான் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. விண்ணை முட்டும் விலைவாசிவேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளோடு கூடவே ஜனநாயகம்அரசமைப்புச் சட்டம் ஆகியனவும் முக்கிய பிரச்சனைகளாக இந்தத் தேர்தலில் முன்னுக்கு வந்திருக்கின்றன.

மீண்டும் மோடி அரசு என பிஜேபி சொல்லி வருகிறது. ஆனால்பல மாநிலங்களிலிருந்தும் வெவ்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனநிதிஷ்பிஜேபியின் மிகப்பெரும் வாக்கு வங்கியாக சொல்லப்படும் பெண்களின் வாக்குகளிலும் மிகப்பெரும் உடைசல் ஏற்பட்டு வருகிறதுஇதையும் நாம் சாதிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடியாது. மாபெரும் மாறுதல்கள் பீகாரில் மட்டுமல்லநாடு முழுவதும் நடந்து வருகின்றன.

மகாராஷ்ட்ராவில்அம்பேத்கர், அரசமைப்புச் சட்டம் போன்றவை குறித்து ஒரு விழிப்புணர்வு தென்படுகிறது. பீகாரில் அது பற்றி சாமான்ய மக்கள் என்ன கருதுகிறார்கள்?

மகாராஷ்ட்ராவில் அத்தகைய விழிப்புணர்வு மக்களின் உணர்வில், சிந்தனையில் வேர் கொண்டுள்ளதுஎனவே அது  இயல்பானதுதான்பீகாரில் கடந்த பத்தாண்டுகளில் அம்பேத்கர் சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்இன்று ஜனநாயகம்அரசமைப்புச் சட்டம் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறதென்றால்அம்பேத்கர் 70-75 ஆண்டுகளுக்கு முன்பே அது பற்றி புரிந்து கொண்டிருந்தார் என்று அதைப் பற்றி படிப்பவர்கள் சொல்கிறார்கள்அம்பேத்கர் என்றால் அரசமைப்புச் சட்டம், இட ஒதுக்கீட்டின் தலைவர் என்று சொல்பவர்களும் கூட இப்போது வேறுவிதத்தில் யோசிக்கிறார்கள்.

ரோகித் வெமுலாவின் நிறுவனப் படுகொலை நிகழ்வு ஒரு திருப்பு முனையாக அமைந்ததுமோடி அரசுக்கு எதிராக நடந்த முதல் மாபெரும் மக்கள் இயக்கம் மாணவர் இயக்கம்தான்விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னால், இளைஞர் போராட்டத்துக்கு முன்னால் நடந்த மிகப்பெரும் மாணவர் போராட்டம் அது. இதில் ரோகித் வெமுலா மட்டுமல்லஅம்பேத்கரும் ஒரு பெரும் காரணியாக இருந்தார்மகாராஷ்ட்ராவோடு ஒப்பிடுகையில், அளவில் சற்று குறைவாகத் தெரிந்தாலும்அத்தகைய விழிப்புணர்வு பீகாரில் அதிகரித்திருக்கிறதுதொடர்ந்து அதிகரித்து வருகிறதுஎல்லா திசைகளிலும் அம்பேத்கர் சிலைகள் உதித்திருக்கின்றன. அம்பேத்கர் சிலைகள் உடைப்பு உள்ளிட்ட தாக்குதல்களும் நடந்திருக்கின்றன. அம்பேத்கர் சிலைஅம்பேத்கர் சிந்தனைகள்அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைக் காக்க வேண்டும் எனும் விழிப்புணர்வும் அதிகரித்திருக்கின்றன.

தெலுங்கானா காங்கிரஸ் அரசு ரோகித் வெமுலா நிறுவனப் படுகொலை குறித்த 2018 அறிக்கையை பரிசீலிக்காமலே 2024ல் சமர்ப்பித்து இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்   

அது தவறுஎந்த நிகழ்வு குறித்து மாபெரும் இயக்கம் நடந்ததோமாபெரும் விவாதம் நடந்ததோஅது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லாமல் அத்தகையதொரு அறிக்கை சமர்ப்பிப்பது நியாயத்தை, நீதியைப் படுகொலை செய்வது ஆகும்மறுவிசாரணை செய்திட வேண்டும் எனும் கோரிக்கையை நாங்கள் உடனே எழுப்பினோம்அரசாங்கமும் கூட மறுவிசாரணை செய்கிறோம் எனச் சொல்லி இருக்கிறதுகாவல் துறை தலைமை அதிகாரியும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

உங்கள் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி எதுவும் பெறவில்லை என எனக்கு தெரியும். பெரிய செல்வந்தர்களிடமிருந்தும் நீங்கள் நிதி எதுவும் பெறுவதில்லை. அப்படி இருக்கும் போது தேர்தலில் எப்படி போட்டியிடுகிறீர்கள்? உங்கள் மாடல் என்ன?

மக்களைச் சார்ந்து நிற்பதுமக்களிடமிருந்து உதவி பெறுவது என்பதுதான் எங்கள் மாடல்இந்த முறை அதனை நிறுவனமயப்படுத்த முயற்சி செய்கிறோம். 20 ரூபாய், 30 ரூபாய், 100 ரூபாய் மதிப்புள்ள நன்கொடைச் சீட்டுகள் மூலம் நாங்கள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான போராட்டத்தைத் துவங்கி இருக்கிறோம். கார்ப்பரேட் ஊழலுக்கு சரியான எதிர்ப்புமக்கள் செய்யும் உதவிதான்வீட்டுக்கு 20 ரூபாய் கேட்டு வீடுவீடாகச் செல்லும் எங்கள் தோழர்களுக்கு மக்கள் மத்தியில் பீகார் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறதுசிலர் 1000 ரூபாய் கூட கொடுக்கிறார்கள்இது முன்னெப்போதும் இல்லாத பெரும் வரவேற்பு.

எங்கள் தோழர் சந்தீப்நலந்தா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்அவர் மாணவர் தலைவர்ஆசிரியர் இயக்கத் தலைவர்அவருக்கு மாணவர்களும்இளைஞர்களும்ஆசிரியர்களும், தொழிலாளர்களும்விவசாயிகளும் நிதி உதவி செய்கிறார்கள். 1000 ரூபாய், 2000 ரூபாய் கூட நிதி வழங்குகிறார்கள். இந்த மாடலைத் தான் நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்.

தேர்தல் செலவுகளைக் குறைப்பதற்காகவும் நாங்கள் போராடி வருகிறோம்தேர்தல் சீர்திருத்தம் தேவைவேட்பாளர் செலவுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதுஆனால், கட்சிகளின் செலவுக்கு வரம்பு இல்லைதேர்தல் பத்திரத்துக்கு எதிராக பேசினால் மட்டும் போதாதுகட்சிகள் செய்யும் செலவுகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்எல்லையற்ற செலவு அனுமதிக்கப்படக் கூடாது. தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை.

இன்னொரு விசயம் பற்றியும் யோசித்தாக வேண்டும். வேட்பாளர்கள் மீதுள்ள வழக்குகள் பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை பத்திரிகையில்தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். 25000 ரூபாய் வேட்பாளர் கட்டணம்ஆனால்விளம்பரத்திற்கு 3-4 லட்சம் செலவாகிறதுதேர்தல் கமிஷன்தான் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

கம்யூனிஸ்ட்சோசலிஸ்ட், மக்கள் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் இருக்கவே செய்கின்றன. எல்லா இடங்களிலும் வேட்பாளர்கள் மீது வழக்குகள் இருக்கின்றன. விளம்பர செலவுகள்தேர்தல் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். செலவுகள் குறைப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும்.