புவி வெப்பமயமாதல்

காலநிலை மாற்றம்

  • சந்திரமோகன்

அபாயகரமான புவி வெப்பமயமாதல்

தமிழ்நாட்டில்தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வெயில் தகித்ததுசென்னையில் கட்டிட தொழிலாளி ஒருவர் வெயிலின் தாக்கத்தால் உயிர் இழந்தார்கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்வெப்ப அலைகளால் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாததுஅவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளும் ஈடு செய்ய முடியாதது.

ராஜஸ்தான் பாலைவனங்களிலும் ஆந்திராவின் கடப்பா போன்ற மாவட்டங்களிலும்தான், 44 டிகிரி வெயில் இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கரூர் பரமத்தியில் 44 டிகிரி வெயில் சுட்டெரித்ததுகுளிர்ச்சியான ஊட்டியில் வரலாறு காணாத வகையில், 7 டிகிரி அதிகமாக, 29.4 டிகிரி வெயில்இந்தியப் பெருங்கடல் வெப்பத்தில் தத்தளிக்கிறது; இந்தியாவும்  ஆசியாவின் பல்வேறு பகுதிகளும் வெப்ப அலைகளால் திணறி வருகின்றனசமீபத்தில் துபாயில் ஏற்பட்ட பெருமழைக்கு  புவி வெப்பமயமாதலே காரணம்அய்ரோப்பாவில் வெப்ப அலைகள்வட அமெரிக்காவில் சூறாவளிகள்ஆசியாவில் நில நடுக்கங்கள் ஆகியவை மானுட சமூகத்தின் இருப்பை அச்சுறுத்தி வருகின்றன.

காலநிலை மாற்றத்திற்கு யார் குற்றவாளி?

பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்காக, பெரிய விலை கொடுக்க முடிவு செய்த ஆட்சியாளர்களின் கொள்கைகள் தான் இத்தகைய நிலைக்கு காரணமாகும்.

மனித சமூகம் பிழைத்திருப்பது சுற்றுச் சூழலை முழுவதுமாக சார்ந்துள்ளதுமனித சமூகம்பிற உயிரினங்கள்தாவரங்கள்நீர், நிலம்காற்று போன்றவை உள்ளடங்கிய இயற்கை அமைப்பே 'சுற்றுச் சூழல்எனப்படுகிறதுஇத்தகைய பல சுற்றுச்சூழல் மண்டலங்களை தன்னகத்தே கொண்டுள்ளதே ''உயிர்க் கோளம்" (Biosphere) எனப்படுகிறது.

பூமியின் 70 % பெருங்கடல்களால் ஆனதுஅதுவேபூமியின் உயிர்ச்சூழல்காலநிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. அதில் நிகழும் மாற்றங்கள்நிலத்திலும் பல மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. அத்தகைய உள்ளார்ந்த தொடர்புடையதாக அவை இருக்கின்றன.

காலநிலை மாற்றத்திற்கு காரணம் யார்?

ஏகாதிபத்தியமுதலாளித்துவ பொருளுற்பத்தி முறையே இன்று நாம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணமாகும். ஆலைகள் வெளியேற்றும்  இரசாயன கழிவுகளால் நீர்நிலம்காற்று மாசுபடுதல்கனிமங்களுக்காக மலைகள் வெட்டப்படுதல், ஆற்று மணல்கடற்கரை தாது மணல் கொள்ளைஅணு உலை கழிவுகள்ரசாயன உரங்கள் போன்றவற்றால் இயற்கை சீரழிக்கப்படுகிறது. இவை அனைத்தும் புவியை அதீத வெப்பமயமாக்குகின்றனசுற்றுசூழல் நெருக்கடிகளுக்கு  காரணமாக அமைகின்றன.

வெப்பநிலை ஏன் உயர்கிறது?

தொழிற்சாலைகளுக்குத் தேவையான  எரிபொருள்கள்நிலக்கரி, கச்சா எண்ணெய்எரிவாயு போன்றவைபுதைபடிம எரிபொருள்கள் ( Fossil Fuels) ஆகும்இந்த எரிபொருள்கள்  பூமிக்கடியிலிருந்து கண்மூடித்தனமாக  எடுக்கப்பட்டுதொழிற்சாலைகள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்களில் எரிக்கப்படுவதால்அதிகளவிலான பசுமைக் கேடு வாயுக்கள்கார்பன் டை ஆக்ஸைட்மீத்தேன்நைட்ரஸ் உள்ளிட்ட வாயுக்கள்வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படுகின்றன. ஆண்டுதோறும்சராசரியாககோடி டன் பசுமைக் கேடு வாயுக்கள் வெளியேற்றப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளிமண்டலத்தின் மீதான இத்தகைய  அபரிமிதமான பசுமைக் கேடு வாயுக்களின் உமிழ்வால், பசுமைக்குடில் அடுக்கானதுஅதிக அளவிலான சூரிய வெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத் தொடங்குகிறதுஇதனால் புவியின் சராசரி வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்ப வெப்பச் சமநிலையை சீர்குலைய வைக்கிறதுஅதனால்தான் வெப்பம் மிகக் கடுமையாக அதிகரிக்கிறது.

1993 ஜனவரி முதல் 2020-ம் ஆண்டு மே மாதம் வரைஉலகம் முழுவதும் கடல் மட்டம் ஓராண்டுக்கு சராசரியாக 3.1 மில்லிமீட்டர் என்ற அளவில் உயர்ந்துள்ளதுஇது இன்னும் உயரலாம்உலக வெப்பமயமாக்கத்தால் கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக்கில் உருகும்  பனிப்பாளங்கள் கடல் மட்டத்தினை உயர வைக்கின்றனகடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்தால், வியட்நாம்பங்களாதேஷ் மற்றும் பிற தீவுகளில் வாழும் 10 கோடி மக்கள் கடும் அழிவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள்.

அன்றே சொன்னார் மார்க்ஸ்

தனது 'மூலதனம்' நூலில் மார்க்ஸ், '19 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவ விவசாய முறையின் கீழ்மண்ணின் வளம் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதைசுட்டிக் காட்டுகிறார்மக்கள்தொகை திரட்சியாக உள்ள புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காகமுதலாளித்துவம்மண்ணின் வளங்களான பொட்டாசியம்நைட்ரஜன் போன்றவற்றைத் திருடி, புவிக்கு தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்றும்  முதலாளித்துவ கொள்ளை முறை உலகின் சில பகுதிகளில் உள்ள மண்வளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டி விட்டது எனவும்  மார்க்ஸ் விவரிக்கிறார்.

மூன்றாம் உலக நாடுகள் மீது தாக்குதல்!

ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்தே இந்தியா போன்ற வளரும் நாடுகள் இருப்பதால்இயற்கை வளம் சுரண்டப்படுவது மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் வேதிக் கழிவுகள்அணுக் கழிவுகளின் குப்பை மேடுகளாகவும் திகழ்கின்றன.

ஒருபுறம் முதலாளித்துவ நாடுகளின் ரப்பர், பருத்திமரங்கள்கனிமவளங்கள் போன்ற தேவைக்காக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மற்றொருபுறம்முதலாளித்துவ நாடுகளின் உயிரி எரிபொருள் தேவைக்காகவனங்கள் மற்றும் பெரும் நிலப்பரப்புகள் பண்ணை நிலங்களாக மாற்றப்பட்டனகுறிப்பாகஆண்டிற்கு 18,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மழைப் பொழிவில் பாதிப்பை ஏற்படுத்திபுவி வெப்பத்தை அதிகரிக்கின்றன.

இந்திய வனங்கள்கனிமவளங்கள்  சுரண்டல் பாதிப்புகள்

இந்திய ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் உலகமயதாராளமயதனியார்மய பொருளாதாரக் கொள்கைகளால், இந்தியாவில் சுரங்கச் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

உலகளவில் இந்தியாநிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும்  அலுமினியம் மற்றும் துத்தநாகம்தாமிரம் உற்பத்தியில்  மூன்றாம் இடத்திலும்  உள்ளதாக பிரிட்டிஷ் ஜிஎஸ்ஐ அறிக்கை கூறுகிறதுஇந்த உற்பத்தியில் கணிசமான அளவு சீனாஹாங்காங் உள்ளிட்ட 193 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதுசீன ஒலிம்பிக் போட்டி விளையாட்டு அரங்க கட்டுமானங்களுக்கு கர்நாடகாகோவாஒடிசா மாநிலங்களிலிருந்து மட்டுமே  லட்சக்கணக்கான டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்திய சுரங்க அமைச்சரகம் தரும் விவரங்கள் அடிப்படையில் 2021- 22 காலகட்டத்தில் செயல்படும் மிகப்பெரிய சுரங்கங்கள் எண்ணிக்கை 1319 ஆகும்இவற்றில் சிறு கனிமங்கள்எரிபொருள் சுரங்கங்கள்அணுபொருள் சுரங்கங்கள் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் 3000 ற்கும் மேற்பட்ட பெரிய  சுரங்கங்கள் செயல்படுகின்றனநிலக்கரி (Coal) , இரும்புத்தாது (Iron Ore), பாக்சைட் (Bauxite), தாமிரம் (Copper), சுண்ணாம்புக்கல் ஆகிய சுரங்கங்களில் இருந்து மட்டுமே, இதுவரை கோடிக்கணக்கான டன் கனிமங்கள் இராட்சத எந்திரங்கள் மூலம் பூமியைப் பிளந்துதோண்டி எடுக்கப்பட்டுள்ளனஇக்கனிமங்களின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.

ஆயிரத்திற்கும் கூடுதலான சுரங்கங்கள் தோண்டுவதற்காக, 10 லட்சம் ஹெக்டேருக்கும் (சுமார் 25 இலட்சம் ஏக்கர்) அதிகமான காடுகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சுரங்கங்கள் ஏற்படுத்திய கழிவுகள்பாதரச தாக்கங்கள் சுற்றுச்சூழலை மக்கள் வாழ்க்கையைச் சீரழித்தன.

மத்தியப்பிரதேசத்தின் சிங்ரோலி (Singrauli) மாவட்டத்தில் மட்டும்மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் வேதியல் தொழிற்சாலைகளுக்காக சுமார்   23,000 மக்கள் வாழ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டனர்அப்பகுதியிலுள்ள ரேணுகா ஆறுஅனல்மின் நிலையம் வெளியேற்றும் கழிவுகளால்சாம்பலால் அது பாழ்பட்டு விட்டது.

தீர்வு என்ன?

கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக் கொள்ளைக்காக வனங்கள், விவசாய நிலங்கள்கடல்கடற்கரையோர உயிர்க் கோளங்களைத் தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது மோடி அரசுஅதற்காகசுற்றுச்சூழல் சட்டங்களைவிதிமுறைகளைவனச் சட்டங்களை திருத்தி வருகிறதுஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு துரப்பணத் திட்டங்களுக்காக கடலோர நிலம் மற்றும் கடற்பகுதிகளை ஏலம் விடுகிறதுதமிழ்நாடு அரசும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகநீர்நிலைகளை, நிலங்களை கையகப்படுத்தும் (சிறப்புசட்டங்களைக்  கொண்டு வந்துள்ளதுசுற்றுச் சூழல்தட்பவெப்ப நிலைமக்கள் வாழ்நிலை ஒன்றோடொன்று  நெருங்கிய தொடர்புடையது.   முதலாளித்துவக் கொள்ளை, அராஜகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பேணும்சுற்றுச் சூழலை காக்கும் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.