சிவகாசி பட்டாசு ஆலை தொடர் விபத்துகள்

ஏஐசிசிடியு  உண்மை அறியும் குழு அறிக்கை

 • மதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெடி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 2020 ஜனவரிக்கும் 2024 பிப்ரவரிக்கும்  இடைப்பட்ட 50 மாதங்களில் 83 ஆலைகளில் விபத்து. 93 பேர் உடல் கருகி இறந்துள்ளனர்  என்கிறது ஊடகச் செய்திதொடர்ந்து 2024 மேஅன்று செங்கமலப்பட்டிசுதர்சன் பட்டாசு ஆலையில் நண்பகலில் வெடிவிபத்து. 10 பேர் இறந்துபோனார்கள்.

இது தொடர்பாககடந்த 16.05.2024 அன்று அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பாக ஏஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எம்.அந்தோணிமுத்துபேராசிரியர் முரளிசிபிஐஎம்எல் மதுரை மாவட்டச் செயலாளர் மதிவாணன்பியுசிஎல் கண்மணிசிபிஐஎம்எல் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன்ஏஐசிசிடியு விருதுநகர் மாவட்டத் தலைவர் முருகன்மாவட்ட செயலாளர் ராசையாசிவகாசி செம்மலர் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த குருவம்மாள் ஆகியோர் கொண்ட ஆய்வுக்குழு சிவகாசிக்குச் சென்று வெடிப்பு நிகழ்ந்த செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையைப் பார்வையிட்டதுஅங்கு வேலை செய்தவிபத்துக்குள்ளான தொழிலாளர்களையும்இறந்தவர்கள்பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்துப் பேசியதுஅதனடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஆய்வறிக்கையின் சுருக்கம்.

இந்த மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போனதால்குறிப்பாக சிவகாசியில் 1928 முதல் தீப்பெட்டித் தொழில் நடந்து வருகிறது. 1949 வாக்கில் பட்டாசுத் தொழிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதுஅதனைத் தொடர்ந்து இத்தொழிலுக்குத் தேவையான அச்சுத்தொழிலும் இங்கு வளர்ந்ததுபட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மிகவும் ஆபத்தானவைகூடுதல் வெப்பத்தையும்ஒலியையும்ஒளியையும் அல்லது இரண்டையும் வெளியிடக்கூடியவைபொட்டாசியம் பெர்குளோரேட்பொட்டாசியம் நைட்ரேட்பேரியம் நைட்ரேட்சல்பர்அலுமினியத் தூள்மக்னீசியம் அல்லது PESOவால் அனுமதிக்கப்பட்ட வேறு எந்த வேதிப் பொருளும் அடங்கிய கலவை பட்டாசுகளில் பயன்படுத்தப்படுகிறதுசிறு அதிர்ச்சிசிறு உராய்வு கூட தீயை உண்டாக்கும். 0.1 முதல் 10 மில்லி ஜூல்ஸ் அளவிலான  மின் தூண்டல் இக்கலவைகளை வெடிக்க வைக்கப் போதுமானது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 90 சதம் சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் உற்பத்தியாகிறதுவிருதுநகர் மாவட்டத்தில் 1,087 பட்டாசு ஆலைகள் உள்ளதாகவும், 2,963 மொத்தசில்லறை பட்டாசு கடைகள் செயல்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சிவகாசிப் பட்டாசுத் தொழிலுக்குச் சவாலாக சீன பட்டாசுகளின் வருகை அமைந்துள்ளதுபட்டாசுகள் என்ற பெயரில் அல்லாமல் வெவ்வேறு பெயர்களில் துறைமுகங்கள் வழியாக சீனப் பட்டாசுகள் இந்தியாவிற்கு வந்து சேர்கின்றன.

வெடிபொருட்கள் வெளியிடும் மாசுகள் காரணமாக 2018 அக்டோபரில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் பசுமைப் பட்டாசுகளைத் தவிர வேறு பட்டாசுகளை வெடிப்பதைத் தடை செய்ததுஆனால்பேன்ஸி பட்டாசுகள் என்று சொல்லப்படும் வாணவேடிக்கை பட்டாசுகளின் உற்பத்தி சமீப பத்தாண்டுகளில் அதிகமாகியிருக்கிறதுபேன்ஸி பட்டாசுகளின் உற்பத்திதான் வெடி விபத்துகளுக்கான பிரதான காரணம் என்று தொழிலாளர் பலரும் சொல்கிறார்கள்பேன்ஸி பட்டாசு தயாரிப்பின்போது  கூடுதல் நுணுக்கமான வேலைகளும்வெடி பொருட்களும் கலவை செய்யப்படுகிறதுஇதற்கான உரிய பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லைபசுமைப் பட்டாசுகளுக்கான விதிமுறைகளை நாக்பூரை மையமாகக்கொண்டு செயல்படும் நீரி (NEERI - National Environment Engineering Research Institute) என்கிற நிறுவனம் உருவாக்கிதரநிர்ணயம் செய்யப்பட்ட ஆலைகளுக்கு அங்கீகாரம்  அளித்து வருகிறதுதற்சமயம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் 990 மட்டுமே நீரியின் அங்கீகாரம் பெற்றுள்ளன.

வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு ஒன்றிய அரசின் பெட்ரோலியம்வெடி பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு (Petroleum & Explosives Safety Organization -PESO) உரிமம் அளிக்கிறதுஇதன் தலைமை நாக்பூரில் உள்ளதுஅதன் துணை அலுவலகங்கள் சென்னையிலும் சிவகாசியிலும் உள்ளனசிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் 800 ஆலைகள் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 741 ஆலைகள் (2022 நிலவரப்படி) PESOவின் உரிமம் பெற்றுள்ளனஅதேபோல்மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அனுமதி பெற்று பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுவதும் இங்கு நடக்கிறது. 269 ஆலைகள் (2022 நிலவரப்படிமாவட்ட நிர்வாகத்தின் (DRO) உரிமம் பெற்றுள்ளனமேலும்தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கான துறை (DISH- Department of Industrial Safety and Health), தொழிலாளர் நலத் துறைதீயணைப்பு துறைவருவாய் மற்றும் பேரிடர் துறை உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் இருந்தும்கூட 1.04.2020 முதல் 31.07.2021வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் 179 ஆய்வுகளை நடத்தி 52 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

2012 செப்டம்பர் 5ம்தேதி ஜெயலலிதா  காலத்தில் நடந்த விருதுநகர் முதலிபட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 40 பேர் இறந்தனர்அதன்பின்னர்அதிநவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட சிவகாசி மருத்துவமனையில் கடந்தவருடங்களாக காய சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறைரூபாய் கூட செலவிடவில்லை என்கிறது ஒரு செய்திபட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் (Fireworks, Match Workers’ Welfare Board) 2021 ஜனவரிமுதல் செயல்படுகிறதுமத்திய அரசின் ESI திட்டத்தின் கீழ் வராத இவ்வாரியத்தில் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே பதிவு செய்துகொள்ள வேண்டும்குரூப் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லைவிபத்தில் பாதிக்கப்பட்டால் தொழிலாளர்களின் இன்சூரன்ஸ் பணம் முதலாளிகளுக்கே கிடைக்கும் வகையில் இன்சூரன்ஸை முதலாளிகள் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

சுதர்சன் ஆலையில் வெடிவிபத்து மதியம்மணிக்கு நடந்துள்ளதுஅந்நாளில் தமிழ்நாட்டின் வெப்பநிலை 110 டிகிரிகளுக்கு மேலிருந்ததுஅறைகள் பற்றாக்குறையின் காரணமாக மரத்தடிகளில் வேலை செய்துள்ளார்கள்வெளியில் வெப்பம் அதிகம் இருந்துள்ளது. 60 கிலோவுக்கு மேலான உலர் மணிகள் தரையில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டு எரிந்த நிலையில்  இருந்ததையும் அறை எண் 17ல் அனுமதிக்கப்பட்ட அளவான 25 கிலோவிற்கு மாறாக சுமார் 300 கிலோ தரை சக்கரம் பாதுகாப்பற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததையும் காணமுடிந்தது.

ஒருவர்  பெயரில் உரிமம் எடுத்து  சிறு முதலாளிகளிடம் உள் குத்தகைக்கு விடுகிறார்கள்விபத்துகள் நடக்க எப்போதுமே வாய்ப்பு உள்ளதால்சுதர்சன் ஆலையின் முதலாளிகூட தயாரிப்புக் கூடத்திற்கு உள்ளே வரத் தயங்குவார்,

பட்டாசு ஆலை விபத்தில் உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்டவர்கள் உயிர் பிழைத்தாலும் மீண்டும் வேறு வழியின்றி பட்டாசு ஆலைகளில் வாட்ச்மேன் வேலை பார்க்கின்ற அவல நிலைமைதான் இருக்கின்றது.

வேலைவாய்ப்பின்மையைப் பயன்படுத்திசட்ட விரோத உள்குத்தகைவிதி மீறல்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களைக் கண்டு கொள்ளாத அரசும் நிர்வாகமுமே தொடர் விபத்துகளுக்கும் மரணங்களுக்கும் காரணம்சீனப்பட்டாசு இறக்குமதி போட்டி காரணமாக எழும் தொழில் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்.

 

சில பரிந்துரைகள்

 • விருதுநகர் மாவட்டத்தில்ஒருங்கிணைக்கப்பட்ட பட்டாசு தயாரிப்பு மண்டலத்தைத் துவக்கி அனைத்து சிறு உற்பத்தியாளர்களுக்கும்  உற்பத்தி கூடங்களை அமைத்துக் கொடுத்து கண்காணிப்பைப் பலப்படுத்தி விபத்துகளை தமிழக அரசு தவிர்க்க வேண்டும்!
 • வழக்கமான சோதனைகளின்போதுஉரிமம் எடுத்தவர் உரிமத்தைஆலையை உள் குத்தகைக்கு விட்டிருக்கிறார் என்றால்உரிமம் எடுத்தவர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 • சிவகாசி பகுதியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க கிராமங்களிலும்நகரங்களிலும் (‘நூறு நாள் வேலை’ போன்றசிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தினை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
 • விபத்தின் காரணமாக அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக ஓர் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்படும்போதுஅந்த ஆலைத் தொழிலாளர்களுக்கு கூலியை தமிழக அரசு நேரடியாக வழங்க வேண்டும்அதனை ஆலை முதலாளியிடம் வசூல் செய்துகொள்ள வேண்டும்.
 • பட்டாசு ஆலை விபத்திற்கு கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகளும் பொருத்தமான குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.
 • பட்டாசுகள் தயாரிப்பை நவீனப்படுத்தி எந்திரமயமாக்குவதற்கான நிதி உதவியை மாநில அரசு  வழங்க வேண்டும்.
 • வருவாய் பேரிடர் துறையின் வருவாய் ஆய்வாளர்கிராம நிர்வாக அலுவலர் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பட்டியலை தயார் செய்து கிராம சபையின் முன் வைத்து ஒப்புதல் பெற்றுஅந்தப் பட்டியலின் அடிப்படையில் பட்டாசுத் தொழிலுக்கான வாரிய உறுப்பினர் சேர்க்கையை அரசு நிகழ்த்த வேண்டும்.
 • தற்போது நடப்பில் இருக்கும் குழு காப்பீடு திட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்களின் பட்டியல் இருப்பதையும் அதனை வெளிப்படையாக அறிவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
 • விபத்தின்போது குழு இன்சூரன்ஸ் முறையில் கிடைத்த பணத்தை தொழிலாளிக்கு அளித்துவிட்டு முதலாளி தப்பிப்பதைத் தடுக்க வேண்டும்முதலாளி தன் பங்கிற்கான இழப்பீட்டையும் வழங்கச் செய்ய வேண்டும்.
 • பணியாற்றும் போர்மேன்கள்தொழிலாளர்களுக்கான முறையான பயிற்சியை அளிக்க வேண்டும்பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஆலையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்போர்மேன்கள்தொழிலாளர்களின் பயிற்சி காலத்துக்கு உரிய சம்பளத்தை தொழில் நிறுவனம் வழங்க வேண்டும்.
 • தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது அரசின் கட்டாயக் கடமை ஆக்கப்பட வேண்டும்.
 • விபத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு ரூபாய் 50 லட்சமும்படுகாயங்களுக்கு 25 லட்சமும் வழங்கப்பட வேண்டும்.
 • அனைத்துத் தொழிலகங்களிலும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்அனைத்துத் தொழிலகங்களிலும் வருகைப் பதிவேடுஈஎஸ்ஐ, PF உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்களை அரசு அமுலாக்கம் செய்ய வேண்டும்அமுலாக்கம் குறித்த வெள்ளை அறிக்கையை ஆண்டு தோறும் தொழிலாளர் துறை வெளியிட வேண்டும்.
 • தமிழக அரசுசிவகாசி மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தி இயக்குவதற்குத் தேவையான மருத்துவர்களைசெவிலியர்களை நியமித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.