தீப்பொறிஓர் அரசியல்கருத்தியல் ஆயுதம்

தீப்பொறி மாநில ஊழியர் கூட்டம்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்விடுதலைதமிழ்நாடு மாநிலக்குழுவின் அரசியல்கருத்தியல் ஏடாககட்சியின் தலைமறைவு காலத்தில் இருந்தே கடந்த ஐம்பது ஆண்டு காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறதுமாலெ தீப்பொறி பத்திரிகைக்கான மாநில ஊழியர் கூட்டம்ஜூன்2024 அன்று விருத்தாச்சலத்தில் நடைபெற்றதுகூட்டத்தை இகக(மாலெமாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி  தலைமையேற்று நடத்தினார்கூட்டத்தின் நோக்கம் குறித்து  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சந்திரமோகன் உரையாற்றினார்அதனைத் தொடர்ந்து தீப்பொறி பத்திரிகை மீதான அறிக்கையை முன்வைத்து பத்திரிகை ஆசிரியர் ஜி.ரமேஷ் பேசினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த தோழர்கள் அறிக்கை மீதான தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்தீப்பொறி பத்திரிகையின் உள்ளடக்கத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் பற்றிவிநியோகத்தினை அதிகரிக்கசந்தாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கபத்திரிகையைத் தொய்வின்றி கொண்டு வருவதற்கான நிதி ஆதாரம் பற்றிவாசகர் வட்டங்களை நடத்துவது பற்றி என பல்வேறு அம்சங்களில் தங்களின் கருத்துகளை முன்வைத்துப் பேசினார்கள்அவர்களின் கருத்துகள் மீதான தொகுப்புரையாக மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் உரையாற்றினார்இறுதியாக இகக(மாலெகட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும்பத்திரிகையின் முதன்மை ஆசிரியருமான வீ.சங்கர் பத்திரிகையின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றியும் உரையாற்றி ஊழியர் கூட்டத்தை நிறைவு செய்தார்.

கட்சி ஏடு என்பது கட்சியின் முகம் மட்டுமல்லஅரசியல் கருத்தியல் ஆயுதம்கட்சி ஏடு என்பது வெறும் அச்சிடப்பட்ட இதழ் மட்டுமல்லஅதுவே கம்யூனிஸ்ட் கட்சியின் பரப்புரையாளரும்கிளர்ச்சியாளரும்அமைப்பாளருமாகும்அதை நாம் படிப்பது மட்டுமல்லபரந்த அளவில் கட்சிக்கு வெளியிலும் விநியோகம் செய்வது அவசியம்பரந்துபட்ட விநியோகம் கட்சியைநமது கருத்துக்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்துகிறதுஅவர்களை ஈர்க்கிறதுஅதற்கு கட்சி அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்கட்சி அமைப்பையும் கட்சிப் பத்திரிகையையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாதுகட்சி அமைப்பு விரிவடைய கட்சிப் பத்திரிகையின் விநியோகமும் படிப்பும் அதிகரிக்க வேண்டும். அதேபோல் கட்சிப் பத்திரிகையின் விநியோகமும் படிப்பும் அதிரிகரிக்கும்போது    கட்சி அமைப்பும் விரிவடையும்அதற்காக கிளைகள் வாசகர் வட்டங்களாகச் செயல்பட வேண்டும். ஒன்றியபகுதி மட்டங்களில் வாசகர் வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். அவை மாதமிருமுறையாவது நடத்தப்பட வேண்டும்தீப்பொறி விநியோகிக்கும் விநியோகிப்பாளர்களை உருவாக்க வேண்டும்விநியோகிக்கும் தோழர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதற்கும் மாவட்டக் கமிட்டிகள், செயலாளர்கள்தீப்பொறி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். தீப்பொறி பத்திரிகையானது விநியோகிப்பாளர்களுக்கோசந்தாதாரர்களுக்கோ நேராக அனுப்பப்படுகிறது என்பதற்காக மாவட்டஒன்றிய கமிட்டிகளுக்கு பொறுப்பு இல்லை என பொருளாகாது.

இன்றைய எண்மய (டிஜிட்டல்உலகில் அன்றாட நிகழ்வுகள் குறித்தும்  அகில இந்தியமாநில நிகழ்வுகள் குறித்தும் நமது கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட தீப்பொறி போலவே கட்சியின் இணைய இதழ் ஒன்றும் வெளியிடப்பட வேண்டும்அது சமூக ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் பொதுவான இலட்சியத்தின் ஒரு பகுதியாக பத்திரிகை இருக்க வேண்டும்இது ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் முழு அரசியல் உணர்வுப் பெற்ற முன்னணிகளால் இயக்கப்படுகிற கட்சிப் பொறியமைப்பின் "மரையும் திருகும்ஆகும்கட்சி இலக்கியம்பத்திரிகை ஒழுங்கமைக்கப்பட்டதிட்டமிடப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த கட்சிப் பணியின் ஓர் அங்கமாக மாற வேண்டும்” என மாமேதை லெனின் கூறியதை மனதில் கொண்டு செயலாற்றுவோம்.

  • சந்தாவைபொது விநியோகத்தை அதிகப்படுத்துவோம் !
  • நிதி திரட்டுவோம்!
  • வாசகர் வட்டங்கள் கட்டமைப்போம்!
  • கட்சியை வலுப்படுத்த தீப்பொறியை வலுப்படுத்துவோம்

அரசியல்-கருத்தியல் ஆயுதமான மாலெ தீப்பொறி பத்திரிகையை

பரப்புரையாளர்கிளர்ச்சியாளர்அமைப்பாளராக மாற்றுவோம்.