இயக்கங்களால் பெற்ற வெற்றி;

இயக்கங்கள் பெற்ற வெற்றி!

தோழர்ராஜாராம் சிங் நேர்காணல்

பீகாரில் இருந்து சிபிஐஎம்எல் மக்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள்புரட்சிகர வாழ்த்துக்கள்எப்படி உணர்கிறீர்கள்?

*ராஜாராம் சிங்*:  இப்போது நாம் இரண்டு எம்.பி களை பெற்றுள்ளோம் ;   மக்கள் இயக்கங்கள்அவற்றுக்கான குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கும்   உறுப்பினர்களை  பெற்றுள்ளனவிவசாயிகளும், மற்ற இயக்கங்களும் வெற்றி பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்களால் சக்தி பெற்றுள்ளதாகவும்சொல்லமுடியும்.

உங்கள் தேர்தல் பரப்புரை பணிகள் பற்றி

ராஜாராம் சிங்தேர்தல் பரப்புரையில்எங்கள் கவனம்அரசமைப்புச் சட்டம்ஜனநாயகம்விவசாயம், வேலைவாய்ப்பை பாதுகாப்பதிலும்அதற்காக வாதிடுவதிலும் இருந்தது.   இந்த பிரச்சினைகளில் எங்களால் மக்களை அணிதிரட்ட முடிந்ததுஉண்மையில் மக்கள் நமது அரசியல்  செய்திகளை உள்வாங்கிக் கொண்டனர்இரண்டு மாத கால தேர்தல் பரப்புரை மிகவும் கடினமானதாக இருந்தது.   ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள்பிரச்சார  வாகனங்களைக் கொண்டிருந்தோம்தேர்தல்  பிரச்சாரத்திற்கான ஒற்றுமைஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு உணர்வை வளர்ப்பதற்காக மகாகத்பந்தன் (இந்தியா) கூட்டணி சார்பில்பாராளுமன்ற தொகுதி அளவில் தலைவர்கள் பங்கெடுத்த கொண்ட  கூட்டங்கள் இரண்டை நடத்தினோம்; சட்டமன்றப்பகுதி வாரியாக ஊழியர் மாநாடுகளையும்  நடத்தினோம்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் பொதுச் செயலாளராகவும்எஸ்கேஎம் தலைவர்களில்ஒருவராகவும் இருப்பதால்கிராமப்புற இந்தியாவின்சார்பாக மக்களவையில் நீங்கள்எழுப்பவுள்ள பிரச்சனைகள் பற்றி

*ராஜாராம் சிங்குடியரசு தலைவர்  உரையில்விவசாயிகள் இயக்கத்தின் முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை  (C2+50%) என்பதை சேர்க்க வேண்டும் என நான்  திருத்தங்களை தந்துள்ளேன்எதிர் வரும் நாட்களில்பாசன வசதிகள்மாசுபடுதல் போன்றவற்றுடன் விவசாயிகள்சாகுபடியாளர்கள் சந்திக்கும் விவசாய நெருக்கடியின் பல்வேறு பிரச்சினைகளையும்  எழுப்பவுள்ளோம்.

பீகார் மாநில எம்.பி.யாக கரக்காட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள்தொகுதிக்கும் பீகார் மக்களுக்கும்ஆற்றக்கூடிய பங்குஎன்னவாக இருக்கும்?

ராஜாராம் சிங்:  பீகார் மாற்றத்தை எதிர்நோக்கும் மாநிலம்; இது பின்தங்கிய மாநிலம்பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். மேலும்,

பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது போலதேசிய அளவிலும் நடத்த வேண்டுமென்றும் கோருகிறோம்எங்கள் கட்சி ஏழைகளின் கண்ணியம், உரிமைகளுக்காகப் போராடி வருகிறதுநாங்கள் பாராளுமன்றத்தில் அவர்களின் குரலை ஒலிக்க கடமைப்பட்டுள்ளோம்அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மை, சோசலிசம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடுவோம்.   மகத்ஷஹாபாத்தின் பல மாவட்டங்களின் வாழ் வாதாரமாக சோன் கால்வாய் கட்டமைப்பு திகழ்கிறது.அதுதற்போது மோசமான நிலையில் உள்ளது. இது நவீன கால இந்தியாவில், 1874 இல் கட்டப்பட்ட பழமையான கால்வாய் அமைப்பு ஆகும்பீகார் விவசாயத்தின் முதுகெலும்பாகும். இந்த சோன் கால்வாய் கட்டமைப்பை  நவீனமயமாக்கும் திட்டத்தையும், இந்திரபுரி அணையை உடனடியாக கட்ட வேண்டும் என்பதையும் எழுப்புவோம்.

பாராளுமன்றத்திற்குள் இடதுசாரிக்கட்சி எம்.பி.க்களின் பங்குஎன்னவாக இருக்கும்?

ராஜாராம் சிங்இடதுசாரிகள், பிற மதச்சார்பற்றமுற்போக்கு  உறுப்பினர்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவோம்சனநாயகத்தையும்அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கப் போராடுவோம்.

இந்தியா கூட்டணி மக்களவை உறுப்பினர்களுடனான அவைஒருங்கிணைப்பு பற்றி…? மோடி 3.0 ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி மூலம் எழுப்பப்படும் பிரச்சனைகள், வழிமுறைகள்  பற்றி

ராஜாராம் சிங்இந்த திசையில் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணியாக  நாங்கள்  ஒன்றுபட்டுள்ளோம்.

நேர்காணல்சந்திரமோகன்