ஜூலை 28 அழைப்பு

தோழர் சாரு மஜும்தார் தியாகியான 52 வது ஆண்டில்கட்சி மறுகட்டமைப்பு இயக்கத்தின் 50 வது ஆண்டில் வளர்ச்சிவிரிவாக்கத்தின் புதிய கட்டத்தை நோக்கி கட்சியை அணியப் படுத்துவோம்.

பாட்னாவில் நடைபெற்ற கட்சியின் 11 ஆவது காங்கிரஸ்கட்சி தனது அனைத்து வலிமையும் ஒன்றுதிரட்டி இந்திய பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்துமாறு கட்சிக்கு வழிகாட்டியதுநடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் 2024 தேர்தல்கள் இந்திய மக்களுக்கு ஒரு மிகப் பெரிய சோதனையாக அமைந்ததுபாசிச ஆட்சிக்கு மக்கள் மாபெரும் அடி கொடுத்துள்ளனர்தேசம் தழுவிய இந்த மாபெரும் இயக்கத்தில் நம்முடைய அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டிமிகப்பெரிய பங்காற்றிசில வெற்றிகளையும் பெற்றுள்ளோம்அதற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து பகுதிகளிலுமுள்ள தோழர்கள் இதில் கடுமையாக பணியாற்றியுள்ளனர்விஷ்ணுதேவ் யாதவ்தினேஷ் சிங்அசோக் சிங் ஆகிய தோழர்கள் இந்தப் போராட்டத்தில் தியாகியானார்கள்கனத்த இதயத்துடன் இந்த தோழர்களை நினைவு கூர்கிறோம்.

2024 தேர்தல் முடிவுகள்நம்மை மேலும் அதிக அளவு பொறுப்புள்ளவர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளதுநாடாளுமன்றத்தில் நம்முடைய பங்கை நாம் சிறப்பாக ஆற்றிட வேண்டும்நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களுடைய போராட்டங்கள் என்ற பரந்து விரிந்த தளத்தில் நம்முடைய அதிகரித்த பங்கையும் அதோடு இணைக்க வேண்டும். 2020, 2024 தேர்தல்களில் பீகாரில் நாம் பெற்ற அடுத்தடுத்த வெற்றிகளை நிச்சயமாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்அதன்மூலம் நம்முடைய கட்சியை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்மற்ற மாநிலங்களிலும் கூட புதிய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு நிச்சயமாக நம்முடைய கட்சியை முன்னணிக்கு எடுத்துச் செல்ல  வேண்டும்.

பாஜக தனது தனிப் பெரும்பான்மையை இழந்துள்ளதுகணிசமான பலவீனத்துடன் இந்த அரசாங்கம் திரும்ப வந்துள்ளதுஆனால் எதுவும் நடக்கவில்லை என்பது போல இந்த அரசாங்கம் பாசாங்கு செய்ய முயற்சிக்கிறதுமோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். அமித்ஷா மீண்டும் உள்துறை அமைச்சராகவும்ஓம் பிர்லா நாடாளுமன்ற அவைத்தலைவராகவும் ஆகியுள்ளனர்இவற்றைக் கொண்டு பார்க்கும்போது,மோடி அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரம்அரசமைப்புச் சட்டம்நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை ஆகியவற்றின் மீது ஒவ்வொரு நாளும் நடத்திய தாக்குதலுடன் ஆட்சி செய்த இரண்டாவது  ஆட்சிக் காலத்தை போலவேபெரும்பாலும் அதே வழியிலேயேதனது மூன்றாவது பதவி காலத்தையும் நடத்திச் செல்ல முயற்சிக்கும்மேலும் சங்கிப் படையணியின் படுகொலை கும்பல்களும் கலவரப் படைகளும் மீண்டும் தெருக்களுக்கு வந்து விட்டனஅரசு நடத்தும் ஒடுக்குமுறைக்கு இசைவாக அரசு ஆதரவுடன் நீதித்துறைக்கு புறம்பான தனியார்மயமாக்கப்பட்ட தெரு வன்முறை இயக்கத்துடன் தொடர் வன்முறைகளை மீண்டும் அரங்கேற்றுகின்றனர்.

2024 மக்கள் தீர்ப்பின் திசைவழியையும் உணர்வையும் காண்போமானால் மக்கள்மோடி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்அதே வேளைநாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் மோடி அரசாங்கத்தை எதிர்கொள்ள போதுமான வலிமையை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர். சங்கிப்படையணியின் பாசிசத் தாக்குதலுக்கு எதிராக அரசியல்சமூக சக்திகளின் பரந்து விரிந்த ஒற்றுமையும் மக்களுடைய இயக்கங்களையும் உருவாக்க வேண்டும் என்ற பரந்த வெகுமக்களின் வேட்கையை வெளிப்படுத்துவதில் நாம் முக்கியமான பங்காற்றி இருக்கிறோம்உள்ளூர் நிலைமைகளில் ஒருவருக்கொருவர் எதிராக  சண்டையிட்டுக் கொள்ளும் சக்திகள் உள்ளிட்ட அரசியல் சக்திகளை அகில இந்திய அளவிலான அரவணைத்துக் கொள்ளும் ஒற்றுமை மேடையாக இந்த செயல்முறையில் இந்தியா கூட்டணி உருவானதுஇந்த செயல்முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் நிச்சயமாக நாம் பங்காற்றிட வேண்டும்அதன்மூலம் அடுத்த சுற்று சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவிற்கும் என்டிஏவிற்கும் மேலும் பெருத்த அடி கொடுக்க வேண்டும்.

இந்த குறிப்பிட்ட தருணத்தில் மிக வலுவானகூடுதல் ஆற்றல்வாய்ந்த இடதுகளின் தலையீட்டிற்கு இககமாலெ-வின் விரிவாக்கமும் வலுப்படுதலும் முக்கிய பங்கு வகிக்கும்மேலும் பாசிச ஆட்சிக்கு தீர்மானகரமான தோல்வியை உறுதி செய்வதற்கு இது அவசியமாகும்இந்த ஜூலை 28 இல் தோழர் சாரு மஜும்தார் தியாகியான 52வது ஆண்டினையும்கட்சி மத்தியக் கமிட்டி மறுகட்டமைப்பு செய்யப்பட்ட 50வது ஆண்டினையும் கடைப்பிடிக்கிறோம். அடுத்தடுத்து வந்த கட்சி மறுகட்டமைப்பும்சீர்செய் இயக்கமும் கட்சி அவசரகால நிலையை, 1970 களின் பின்னடைவை எதிர்கொண்டு தாக்குப்பிடித்து நின்றதை சாத்தியமாக்கினகட்சியை ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அகில இந்திய விரிவாக்கத்திற்கும் வழிவகுத்தனஇன்றைய காலகட்டத்தின் சவால்களுக்கு பதிலளிப்பதற்கு இன்று கட்சிக்கு அதே போன்றதொரு விரிவாக்கமும்வலுப்படுத்தலும் தேவையாக உள்ளதுஜூலை இயக்கம் இந்த புதிய கட்டத்திற்கு கட்சியைத் அணியப் படுத்தட்டும்.

மத்திய கமிட்டி,

இககமாலெ விடுதலை