தலையங்கம்

மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜகவின் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், 2019 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி சொன்னார். வெற்றி பெற்றோம், இப்போது 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என மோடி கூறியிருக்கிறார். அது நடக்கும். ஆகவே, இது முடிவு அறிவிக்கப்பட்டபின் நடக்கும் தேர்தல் என்கிறார். பாசிச சங்கிகள் எதையும் செய்வார்கள் என்பதை இப்போது நடக்கின்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

தலையங்கம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கால வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியைச் சார்ந்த கட்சிகள் தவிர, இதர கட்சிகளில் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னமும் ஆடு புலி ஆட்டமாகவே இருக்கிறது. நாட்டின் பிரதம அமைச்சரே மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை செய்து கூட்டாளிகளை வலைவீசி பிடிக்க முயற்சிக்கிறார். ஒபிஎஸ் உள்ளிட்டோர் நாங்கள் பிஜேபியிடம் தொகுதி கேட்டிருக்கிறோம் என சொல்லிக்கொண்டு கைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர்.

தலையங்கம்

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த கோல்மால்தனத்தைக் கண்டுபிடித்து தலையில் குட்டியதுமின்றி, தவறு செய்த தேர்தல் அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். அந்தத் தேர்தல் அதிகாரிமட்டுமல்ல, அவரை அவ்வாறு செய்யத் தூண்டிய பாஜக தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அக்குற்றச் செயலைச் செய்யத் தூண்டியவர்கள் தப்பித்துவிடக் கூடாது.

தலையங்கம்

இந்த ஆண்டின் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேச மோடி நாடாளுமன்றத்திற்குள் வரும்போதே, பாஜகவினர் மேசையைத் தட்டி மோடி மோடி என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். இது மோடி 2.0 வின் கடைசி நாடாளுமன்ற உரை. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மோடி அரசு, திட்டமிட்டு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் மாநில முதல்வர்களைக் கைது செய்தும் வஞ்சித்து கொண்டிருக்கிறது.

தலையங்கம்

இம்முறையும் இந்திய குடியரசுத் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப் படவில்லை. அதேபோல் வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கும் அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவிற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முக்கியஸ்தர் பட்டியலில் இல்லை. இந்தியாவில் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டதுபோல் அவருக்கும் வழங்கப்பட்டிருக்கலாம். புராண இதிகாசங்கள்படி இராமாயணத்தில் ராமராகவும் மகாபாரதத்தில் கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்தார் விஷ்ணு. அந்த மகாபாரதத்தில் முக்கியமான கதாபாத்திரம் திரௌபதி.

தலையங்கம்

புத்தாண்டு 2024 பெரும்பான்மை மக்களுக்கு சோகமாகவே பிறந்திருக்கிறது. 2023 டிசம்பர் 2இல் சென்னையை சுற்றியுள்ள வட மாவட்டங்களிலும் டிசம்பர் 17இல் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பெய்த மழையினாலும் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மக்களில் பலர் இன்னும் பாதிப்பிலிருந்து மீளாமுடியாத நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரை மற்றும் கால்வாய்கரைகள் பக்கம் வசித்தவர்கள் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, அனைத்து பொருள்களும் நாசமாகிவிட்டன. பல வீடுகளில் ஒரு சிறிய பொருள், ஊக்கு கூட இல்லாத அளவிற்கு வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது.

தலையங்கம்

2023 டிசம்பர் 3 அன்று சென்னையில் அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்த மழை தொடர்ச்சியாக இடைவிடாமல் பெய்து ஒட்டு மொத்த சென்னையையம் சென்னையையும் மூழ்கடித்தது. முதல்வர் ஸ்டாலின், 2015ல் வந்த வெள்ளம் செயற்கை வெள்ளம். ஆனால், 2023ல் வந்த வெள்ளம் இயற்கை வெள்ளம் என்றார். உண்மைதான். எதிர்பாராத அளவில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் 26 செ.மீ அளவிற்குக் கொட்டித் தீர்த்தது. எப்படிப்பட்ட மழை, வெள்ளம் வந்தாலும் சமாளிப்போம் என்று மழைக்கு முன்பு சொன்னவர்கள், மழைக்குப் பின்பு மாற்றிப் பேசினர். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்றார்கள்.

தலையங்கம்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 102வது வயதில் காலமானார். தோழர் என்.சங்கரய்யா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1922ல் பிறந்தார். 8ம் வகுப்பு வரை தூத்துக்குடியில் படித்து பின்னர் மதுரையில் தனது படிப்பைத் தொடர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் தலைவராகச் செயல்பட்டார்.

தலையங்கம்

மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனத்தின் மீதான போர் நிறுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களைக் காக்கவும் உடனடியாக உதவிகள் வழங்கிடவும் ஐ.நா.பொதுமன்றம் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல், நடுநிலை என்ற பெயரில் புறக்கணித்துள்ளது மோடி அரசு. காலங்காலமாக இருந்து வந்த, பாலஸ்தீன ஆதரவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு மாறாக பாலஸ்தீனத்திற்கு எதிராக, இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு, எதிர்க்கட்சிகளைக் கலந்து பேசாமல், தன்னிச்சையாக இப்படியொரு முடிவு எடுத்தது கடும் கண்டனத்துக்குரியது.

தலையங்கம்

நாற்பதாண்டு கால போராட்டங்களுக்குப் பின்னர் வாச்சாத்தி வன்கொடுமையாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. காவல்துறை, வனத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு கூட செல்லலாம். உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அவர்கள் வாச்சாத்தியில் குற்றம் நடந்தபோது இருந்த காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், வனத்துறை அதிகாரி மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.