தீர்ப்பு 2024:

சுட்டும் திசைகள்       கிட்டும் பாடங்கள்

திபங்கர்:   2024 தேர்தல்கள் பாஜகவிற்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுபெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைந்து போய் விட்டது. 240 இடங்களில் நின்று போயிருக்கிறதுஇந்த முடிவுகள்கிட்டத்தட்ட, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வெற்றி போலவும் பாஜகவிற்கு ஒரு தோல்வி போலவும் அமைந்துள்ளது. ஏனென்றால்இந்தியாவில் இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களிலேயே, அனைவருக்கும் சமவாய்ப்பே வழங்கப்படாத ஒரு தேர்தலில் இத்தகைய தீர்ப்பை பெற்றிருப்பதே இதற்கான காரணமாகும்ஊடகங்கள்தேர்தல் ஆணையம், நிர்வாக எந்திரம் அனைத்தும் ஒருதலைப் பட்சமாகபாஜகவுக்கு ஆதரவாக செயலாற்றின. ”பாஜகவிற்கு 370, என்டிஏ கூட்டணிக்கு '400 க்கும் மேல்” என மீண்டும் மீண்டும் தம்பட்டம் அடிக்கப்பட்ட இலக்கோடு ஒப்பிடும்போதுபெரும்பான்மை கூட கிடைக்கவில்லை என்பது, வெறும் 240 தொகுதிகளே என்பது மிகமிக குறைவானதே. தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பாஜகவின் சுருதி இறங்கி விட்டது. ”400க்கும் மேல்” என்பதுதொடர்ச்சியாக 'மூன்றாம் முறையாக மீண்டும் மோடிஎன்பதாக சுருங்கிப் போய்விட்டதுஆனால்தேர்தல் முடிந்ததும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள்மீண்டும் ஒருமுறை அதீத கற்பனைகளை தூண்டிவிட்டன. அதன்மூலம்திட்டமிட்ட விதத்தில் பங்குச் சந்தை மதிப்பு விண்ணில் பாயுமாறு  செய்யப்பட்டது. மோடியும் ஷாவும் அதானி தொலைகாட்சிகளும் ஜூன்க்குள் பங்குகளை வாங்கச் சொல்லி கூக்குரலிட்டனஅறிவுரை வழங்கின. ஆனால்அது வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச் சந்தை அதலபாதாளத்தில் சரிவதற்கு கட்டியம் கூறுவதாக மட்டுமே இருந்து.

 

தெலுங்கானாவில் 15.4, ஆந்திர பிரதேசத்தில் 10.3, தமிழ்நாட்டில் 7.6, ஒடிசாவில் 6.4, கேரளாவில் 3.7 என கடலோரதென்னக  பகுதிகளில் பாஜக வாக்குகளின் பங்கு பெருமளவு அதிகரித்த போதும் கூடஅது 2019 இல் பெற்ற வாக்குகளையே  மீண்டும் தக்கவைக்க முடிந்தது. அது 37.3% லிருந்து 36.5% ஆக ஓரளவே குறைந்ததுஇதற்கு மாறாககாங்கிரஸ் அதன் வாக்குகளின் பங்கில் வெறும்சதவீதம் மட்டுமே கூடுதலாக பெற்ற போதும் கூட, அது ஏற்கனவே பெற்ற இடங்களை இரட்டிப்பாக்கியதுஇருப்பினும் அந்தக் கட்சி 2019-ல் 421 இடங்களில் போட்டியிட்டதை ஒப்பிடும்போது 2024 இல் 328 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதுஅப்படிப்பார்க்கும் போது காங்கிரசுக்கு கிடைத்த வாக்குகள் அதிகம்தான்.

 

பாஜக தனது இலக்கை ”400 க்கும் மேல்” என நிர்ணயித்தன் காரணம் என்ன? 1984 இல் காங்கிரஸ் பெற்ற சாதனை அளவான 404 இடங்களை தாண்டி செல்ல வேண்டும் என்பதற்காகவா? 2019 இல் பாஜக பெற்ற 303 தொகுதிகளுக்கும் என்டிஏ பெற்ற 353 தொகுதிகளுக்கும் அதிகமாக பெறும் நோக்கம் மட்டும்தானாஅயோத்தியில் ராமர் கோயிலை கட்டியதற்கான தேர்தல் பரிசாக இந்துக்கள் முன்னெப்போதும் கண்டிராத ஆதரவை வழங்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பாயோகியின் 80:20 என்ற சூத்திரத்தின் அடிப்படையிலா? 400 க்கும் கூடுதலான இடங்கள் எங்கிருந்து கிடைக்கும் என யோகியிடம் கேட்கப்பட்டபோதுதற்பெருமை கொள்ளும் அற்ப யோகி, 'உபியிலிருந்து மட்டுமே 80 இடங்கள் என நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளலாம்என அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கூறினார்அதனால்பாஜக அதன் மிகமிக மோசமான அதிர்ச்சிகரமான பின்னடைவை உபியில் சந்தித்தது மிகவும் பொருத்தமானதாக இருந்ததுஅங்கே அது சமாஜ்வாதி கட்சியின் முதுபெரும் தலித் தலைவரிடம் அயோத்தியை (ஃபைசாபாத்பறி கொடுத்தது. உத்தர பிரதேசத்தில் 29 இடங்களை இழந்தது.

முனை மழுங்கடிக்கப்பட்ட அச்சமும் வெறுப்பும்

பாஜகவின் இரண்டு முக்கிய ஆயுதங்களான அச்சமூட்டலும் வெறுப்பும் முனை மழுங்கடிக்கப்பட்டு விட்டன என்பதுதான் 2024 தேர்தல் முடிவுகளில் நாம் காணும் முக்கிய அம்சங்களாக உள்ளன. ’வெல்லற்கரியவர் மோடி’ என்ற கருத்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளதுமிகமிக மோசமாக, முஸ்லிம்களுக்கு எதிராகவெறுப்பு அரசியல் பரப்புரை இயக்கம் மேற்கொண்டால், இந்துக்களின் பெரும் வாக்கைப் பெறலாம் எனும் பாஜக சூத்திரம் பொய்த்துப் போய்விட்டது. வெற்று நம்பிக்கை என்பதாகி விட்டதுஇந்த தேர்தல் காலத்தில் மோடி மிகவும் அதீதமாக வெறுப்பை உமிழ்ந்து உரையாற்றிய இடங்களை, அநேகமாக 20 இடங்களை, பாஜக பறி கொடுத்துள்ளது.

மக்கள் போராட்ட இயக்கங்கள்

மிகவும் நம்பிக்கை அளிக்கும் மற்றொரு பலன் என்னவென்றால்மக்களுடைய ஆற்றலும் எதையும் தாங்கும் திறனும் ஆகும்எல்லையற்ற பண பலத்தையும்ஊடக பலத்தையும் அதிகாரத்தையும், மாபெரும் நிர்வாக ஆதரவையும் பாஜக தனது ஆயுதங்களாக பெற்றிருந்தது. அது மட்டுமல்லஅமித் ஷாவின் சாணக்ய தனத்தால் அதிகாரம் பெற்றதாக சொல்லப்பட்ட, ஈவிரக்கமற்றதிறன்வாய்ந்த தேர்தல் எந்திரத்தையும் ஆயுதமாக அது கொண்டிருந்தது. அது மட்டுமல்லஅவர்கள் கையிலிருந்த மற்றொரு முக்கிய ஆயுதம் 'பன்னா ப்ரமுக்ஸ்'. அதாவதுவாக்காளர் பட்டியலில் உள்ள ஒரு பக்கத்தில் உள்ள பெயர் கொண்டவர்களை தொடர்பு கொள்வதற்கான பொறுப்பாளர்கள். தமிழில்பக்க பொறுப்பாளர்கள்” எனலாம். பாஜகவின் வளங்களோடும் அமைப்பு வலிமையோடும் ஒப்பிடும்போது, தாமதமாக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி அதற்கு கொஞ்சமும் நிகரானதாக தோன்றவில்லை. அப்போதும் கூட இந்திய மக்கள் இதனை ஒரு கடும் போட்டியாக மாற்றி அமைத்தனர். மேலும் இந்துத்வா இதயப் பகுதியான உத்தரப்பிரதேசத்திலேயே பாஜகவை பெரிய அளவில் தோற்கடித்தனர்இந்தியா கூட்டணியின் அரசியல் கட்சிகளையும் தாண்டி, பல்வேறுபட்ட போராட்ட இயக்க சக்திகள்குடிமை சமூக அமைப்புகள்பரப்புரை தளங்கள்எண்ணிய (டிஜிட்டல்தொடர்பு சாதன ஊடகங்களின் செயல்வீரர்கள் ஆகியோர் தங்களுடைய மூலாதாரங்களையும் ஆற்றலையும் ஒன்று திரட்டினர்அதன் மூலம் இந்த தேர்தலை உண்மையான மக்கள் இயக்கமாக மாற்றினர்.         இந்துத்வாவின் கருவான நிகழ்ச்சி நிரலையும்பிராண்ட் மோடி எனப்படும் மோடி துதிபாடலையும் மையமாக கொண்டதனால் பாஜக சேதமடைந்தது. 2019 போலல்லாமல், இந்த தேர்தல்களில் எவ்வித அதீத தேசியவாத அலையும் வீசவில்லை. அயோத்தியின் ராமர் கோவில் ஒரு தேர்தல் சூறாவளியை உருவாக்கும் என பாஜக எதிர்பார்த்ததும் நடக்கவில்லைமாறாகஅந்த எதிர்பார்ப்பு பெருத்த ஏமாற்றமாக மாறிவிட்டதுசமாஜ்வாதி கட்சி அயோத்தி/பைசாபாத் தொகுதியை வென்றது மட்டுமல்லபாஜக இந்த ஒட்டுமொத்த மண்டலத்திலும் அனேக இடங்களில் தோற்றுப் போனது.         2024 தேர்தலை, எவ்வித தேசிய அளவிலான கதையாடலும் அற்ற 'வழக்கமான', 'உள்ளூர்தேர்தலாக பல விமர்சகர்களும் வரையறுக்கின்றனர். ஆனால் பொருளாதாரம் குறித்த கேள்விகளும்பொதுமக்களுடைய வாழ்வாதாரம் குறித்த கவலைகளும் தேர்தல் நிகழ்ச்சி நிரலாக மாறும்போது, அரியணையில் வீற்றிருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகளாக அது எதிரொலிக்கும் போதுநிச்சயமாகஅதனை 'உள்ளூர் காரணி'யாக எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையில் சொல்லப்போனால்மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அக்கம்பக்கமாகவே, இந்திய ஜனநாயகம்அரசமைப்புச் சட்டத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளும்  கூட தேர்தல் உரையாடலின் ஒரு மாபெரும் பகுதியாக மாறி இருந்தன.     ஜனநாயகம் பின்னடைவை சந்திப்பது குறித்த கவலைகளோ அல்லது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் சிதைவுற்று அதுவொரு தேர்தல் எதேச்சதிகாரமாக மாறுவதோ மேற்கத்திய பரப்புரையல்ல; நாடு முழுவதும் உள்ள மக்கள்இந்திய மக்கள் இந்த ஆபத்தை மிகவும் ஆழமாக உணருகிறார்கள் என பொருளாகும்அதனை வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர். கூட்டாட்சிஇட ஒதுக்கீடு முதல் மதச்சார்பின்மை, குடியுரிமை வரை அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறுபட்ட அம்சங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலையும் மக்கள் நேரடியாக உணர்கின்றனர்அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதுமாற்றுவது என்பதற்காக, 400க்கும் கூடுதலான இடங்கள் பெற வேண்டும் என பாஜக தலைவர்களே சொல்லத் தொடங்கிய போது, அது விரைவிலேயே மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவிட்டதுஇந்தியாவின் முன்னணி கருத்துக் கணிப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி நேர்காணலில் ஒப்புக்கொண்டார். ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பொது வாக்காளரின் தேர்தல் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் என்பது குறித்த எந்த ஒரு ஆலோசனையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு நகைப்புக்கிடமானதாகவே இருந்திருக்கும் என்றார்ஆனால் தேர்தல் அவரது கூற்றை தவறென நிரூபித்து விட்டது என்றார்.

 ஜனநாயகத்திற்கான டிஜிட்டல் (எண்ணியபோர்

அரசியல் செய்திகளுக்கான மிகவும் திறன்வாய்ந்த ஊடகமாகயூ ட்யூப்’ எழுச்சி பெற்றது, இந்தத் தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும்இந்தியாவின் 'மைய நீரோட்ட ஊடகங்கள்எனப்படுகிற பெரும்பாலானவை அரசாங்கத்தின் பரப்புரை அங்கமாக சீரழிந்து போனதால்பொதுவாக தொலைக்காட்சி காண்போரில் கணிசமானோர், அதை பார்ப்பதையே விட்டுவிட்டனர்இந்தியாவின் பல துணிச்சலான பத்திரிக்கையாளர்களுக்கு ஊடகத் தொழில் என்பது ஆட்சியாளர்களுக்கு எதிராக உண்மையை பேசுவதே என்பது இன்னும் கூட இருப்பதை காண முடிந்துஅவர்களும் கூட தங்களது விருப்பமான தகவல் தொடர்பு சாதன தளமாக யூ ட்யூப்பையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இது இன்றைய இந்தியாவில் டிஜிட்டல் (எண்ணிய) ஊடகத்தின் மிகச் சிறப்பான எழுச்சியை வடிவமைத்துள்ளதுஇந்த தேர்தல்களில் இந்த வெகுமக்கள் தகவல் தொடர்புக்கான புதிய கருவியின் ஆற்றலை நாம் கண்டிருக்கிறோம்.   மோடியின் செல்ல ஊடகங்கள் மூலமும்வாட்ஸ்அப்பல்கலைக்கழகங்கள்மூலமும் பரப்பப்படும் வெறுப்புபொய்களுக்கு எதிராகஜனநாயகத்திற்கான டிஜிட்டல் (எண்ணிய) போராளிகளான ரவிஷ் குமார்துருவ் ரதி போன்ற ஊடகவியலாளர்கள், தகவல் தொடர்பாளர்களின் காணொளிகளும்வளர்ந்துவரும் யூ ட்யூபர்களின் சமூகமும் அதீத துணிச்சலுடன் திறன்மிக்க எதிர்ப்பைக் கட்டமைத்தனர். மோடி அரசாங்கம் தற்போது இந்த டிஜிட்டல் (எண்ணிய) ஊடகத்தின் சுதந்திரத்தை பறிக்க தீவிரமாக முயற்சிப்பதையும் அதன் குரல் வளையை கொடூரமாக நசுக்கப் பார்ப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடையேயான ஒருமைப்பாடு  

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2024 தேர்தல்களில் காங்கிரஸ் ஓரளவுக்கு மீட்சியடைந்திருக்கிறது என்றால் அதற்கு முஸ்லிம்கள் மொத்தமாக காங்கிரசுக்கு வாக்களித்ததனால்தான் என சொல்ல முடியாதுமாறாகமுஸ்லிம்கள் அல்லாத சமூகத்தினர்குறிப்பாக இந்து மக்களின் ஆதரவு அதிகரித்ததன் காரணமாகவே அது நிகழ்ந்துள்ளது.        இந்தக் கதையாடலின் மிகவும் விஷமத்தனமான பகுதி என்னவென்றால்நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு முஸ்லிம்கள் மீதே பழி சுமத்துவதாகும். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பதினெட்டாவது மக்களவையில் மிகக் குறைவாக இருப்பதற்கு பொறுப்பு முஸ்லிம்கள்தானா? இந்திய நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கிற பாஜக முஸ்லிம்களை ஒதுக்கி வைத்தல் எனும் கொள்கையை கொண்டுள்ளதுஅதை அறிவித்தும் உள்ளதுஅதனுடைய அரசியலும் ஆட்சி நிர்வாகமும் நச்சுத்தன்மை வாய்ந்த இஸ்லாமிய வெறுப்பை எப்போதுமே உமிழ்ந்து கொண்டிருக்கிறதுபாஜக எப்படி இருக்கிறதோ அப்படியே அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதனை தோற்கடிப்பதற்கானபலவீனப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதை நிறுத்துங்கள் என இந்திய முஸ்லிம்களை மிரட்டுவதுபாஜகவின் இஸ்லாமிய வெறுப்பை நியாயப்படுத்துவதாகவே இருக்கிறது. இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 24 உறுப்பினர்களும் கூட என்டிஏ அல்லாத 250 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியாகவே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதமே உள்ளனர். என்டிஏ விலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட முஸ்லீம் அல்ல என்பது குறிப்பிடத் தக்கதுஇது பாஜகவின் பிரிவினைவாத இஸ்லாமிய வெறுப்பு அரசியலை, அதன் தாக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.  தேசிய அளவிலும் உள்ளூர் மட்டத்திலும் ஜனநாயகத்திற்காகநீதிக்காக நடத்தப்படும் போராட்டங்களின் மூலம்சிறுபான்மை மக்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்குமிடையே வடிவம் பெறும் வலுவானபரவலான சகோதரத்துவ பிணைப்பே வெறுப்பு அரசியலுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும்இத்தகையதோர் முயற்சியை முஸ்லிம் மக்கள் பின்பற்றி வருகின்றனர். தலித்துகள்பழங்குடியினர்பிற ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் ஆகியோரிடமும்தனித்த அடையாளம் கொண்ட சமூகத்தினரிடமும்அத்தகையதொரு ஒருமைப்பாட்டை வளர்த்தெடுப்பதற்கான தேவையையும் சாத்தியக்கூறையும் 2024 தேர்தல்கள்  சுட்டிக்காட்டியுள்ளன.

 நாடாளுமன்றத்திலும் அதனை தாண்டியும் ஒன்றுபட்ட அறுதியிடல்

ஒருமைப்பாட்டு உணர்வே மையமானதாகும்அது உள்ளூர் மட்டத்திலான அல்லது மாநில மட்டத்திலான சமூகக் கூட்டணிகளை கட்டமைப்பதற்கானது மட்டுமல்லபரந்த, பல வண்ண கருத்தியல் நீரோட்டங்களையும் மாநில கட்சிகளையும் கொண்டுள்ள அகில இந்திய மட்டத்திலான கூட்டணியைப் பேணி வளர்ப்பதற்கும் தான்இந்தியா கூட்டணி இந்த தேவையை நிறைவேற்றுவதற்காக பணியாற்றியதுஅதனால்தான், இந்தியா கூட்டணி மிக தாமதமாக உருவான போதும்உள்ளூர் அல்லது மாநில அளவில் தேவையான ஒற்றுமை சில மாநிலங்களில் குறைவாக இருந்த போதும், அது மிக அதிக அளவிலான பரந்த மக்களின் ஆதரவையும் தேர்தல் வெற்றியையும் பெற முடிந்தது. தேர்தல் களத்தில் அதிதீவிர தேசியவாத உணர்வெழுச்சியும்இந்துத்துவ வெறித்தனத்தின் செல்வாக்கும் குறைந்து போனவுடன்மூர்க்கமான குஜராத் ஆதரவு குழுவினரால் இயக்கப்படும் அரசு சலுகைசார் முதலாளித்துவ நிறுவனமாக, பாஜகவின் மோடி – ஷா கும்பல் அம்பலப்பட்டு நிற்கிறது.                                                                மதம் வணிகமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஅந்த மத வணிகமயமாக்கத்தில் குஜராத் கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறதுஅரசு சலுகைசார் கார்ப்பரேட் முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்இதுதான் கோவில்களையும்கோவில் தாழ்வாரங்களையும் மையமாக கொண்டு உருவாக்கப்படும் அரசியல் – பொருளாதார சமன்பாடுகளின் முக்கிய அம்சமாக உதித்திருக்கின்றன.அதீத மையப்படுத்துதலுக்கு எதிராககுஜராத் கும்பலின் ஆதிக்கத்துக்கு எதிராக, ஆதரவு குழுவினரின் ஒப்பிட முடியாதளவு ஆதிக்கத்துக்கும், 'இரட்டை எஞ்சின் அரசாங்கங்கள்', 'அதிகபட்ச நிர்வாகம்' எனும் பெயரில் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளுக்கு எதிராக, உத்தர பிரதேசம் முதல் தமிழ்நாடு வரைமகாராஷ்டிரா முதல் மணிப்பூர் வரை நாடு முழுவதுமுள்ளமக்கள் ஒரு வலுவான செய்தியை ஆட்சியாளர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். மோடி ஆட்சியை ஒட்டுமொத்தமாக தோற்கடிப்பதுவெளியேற்றுவது என்ற இலக்கை அடைவதில் 2024 தீர்ப்பு சிறிதளவு தவறிவிட்டது என்பது உண்மைதான்ஆனால் அது நிச்சயமாகபாஜகமோடியின் ஆணவத்தைஆட்சியின் மூர்க்கத்தனத்தை பெருமளவில் சிதைத்து விட்டது. ஜனநாயகம் பெருமூச்சுவிடுவதற்கான வெளியைப் பெற்றுள்ளதுஉத்தரவாதமான வாழ்வாதாரம்நீதிஅரசமைப்பு சட்டத்தின் ஆட்சிமதச்சார்பற்ற ஜனநாயகம்அனைவரையும் உள்ளடக்கியபன்மைத்துவ இந்தியா ஆகியவற்றை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தேர்தல் நிகழ்ச்சி நிரல்மக்களின் அடக்கவியலாத துணிச்சல் மற்றும் ஆற்றலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும்வீதிகளிலும் வலுப்படுத்தப்பட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் அரசமைப்புச் சட்ட ஜனநாயகம் இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ளதுஇந்திய மக்களாகிய நாம்இந்தியாவில் பாசிசம் வேரூன்றுவதையோ, இந்தியாவை அச்சத்தின் குடியரசாகவெறுப்பின் குடியரசாக மாற்றுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது.