தலையங்கம்

குற்றமும் தண்டனையும் !?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப் படையினரால் கடந்த 5.7.2024 அன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்மறுநாள் காவல்துறையிடம்பேர் சரணடைந்தனர்அதில் ஒருவர் திருவேங்கடம்காவல்துறையின் பாதுகாப்பில் இருந்ததிருவேங்கடம் காவல்துறையுடனான மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்தைக் காண்பிக்கக் கூட்டிச் சென்றபோதுபோலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் என்கிறது போலீஸ்ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகஅதிமுகபாஜகதமாக என சகல கட்சிப் பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்திருவேங்கடம் உண்மையான குற்றவாளி இல்லை என்கிறார்கள்அவர் கொல்லப்பட்ட பின்னர் அவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை வெட்டும் வீடியோ ஒளிபரப்பப்பட்டதுஇவையெல்லாம் பல கேள்விகளை எழுப்புகிறதுதமிழ்நாடு கொலைக்களமாகரவுடிகளின் கூலிப்படையினரின் புகலிடமாக மாறிக்  கொண்டிருக்கிறதாஅதனால்அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்திட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாதுஆனால்கூலிப்படையினர் தனித்து இயங்கவில்லைஅவர்கள் இயக்கப்படுகிறார்கள்அவர்களை போலி மோதலில் கொல்வதன் மூலம் அவர்கள் யாருக்காகச் செயல்பட்டார்களோ அந்த உண்மைக் குற்றவாளிகள் காப்பாற்றப் படுகிறார்கள்குற்றங்கள் குறைய வேண்டும் என்றால்உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்திருவேங்கடம் கொல்லப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திருச்சியில் துரை என்பவர் போலி மோதலில் கொல்லப்படுகிறார்அவர் மீது 57 வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்டதுதிருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதுஅதில் சம்பந்தப்பட்டவர்கள் ரவுடிகளும் கூலிப்படையினரும்தான்அவர்களை ரவுடிகள் என்று சொல்லக் கூடாது என பிரச்சாரம் வேறுசில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இரண்டு பள்ளிக் குழந்தைகளைக் கொன்றவர்களை போலி மோதலில் போலீஸ் சுட்டுக் கொன்றதுஅதை பொது மக்கள்  வரவேற்ற அந்த பொதுப் புத்தியைச் சாதகமாகக் கொண்டு  சட்டத்துக்கு அப்பாற்றபட்ட தண்டனை சரியாகாதுபிழைப்பிற்காக மரம் வெட்டச் சென்ற பழங்குடி மக்களும் ஏதுமறியா இஸ்லாமியர்களும் பல ஆண்டுகளாக விசாரணையே கூட இல்லாமல் சிறையில் வாடும் போது இந்த ரவுடிகள்கூலிப்படையினர் மட்டும்  எப்படி சுதந்திரமாகச் சுற்றி வர முடிகிறதுஆட்சியாளர்கள்அதிகார வர்க்கத்தினரின் தயவு இல்லாமல் இது நிச்சயம் சாத்தியமாகாதுஆணவக் கொலைகள்சாதியாதிக்கக் கொலைகள் எந்த அளவுக்கு நடக்கின்றனவோ அதே அளவு போலி மோதல் கொலைகளும் நடக்கின்றனகொடூரக் குற்றவாளிகளைத் தண்டிப்பது என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்வது மனித உரிமைக்கு எதிரானதுஉண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும்  நோக்கம் கொண்டதுமோடி அரசுபோலீஸிற்கு  கட்டுப்பாடில்லா அதிகாரம் வழங்கும் கொடூர குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளதுஒன்றிய அரசின் இச் சட்டங்கள் போலி மோதல்களையும் காவல் கொட்டடிக் கொலைகளையும் இன்னும் அதிகரிக்கும்அச் சட்டங்களை அமல்படுத்திடுவதை நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்நல்லதுஅக் கொடூரச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்இதுபோன்ற போலி மோதல்கள் போலீஸ் ஆட்சிக்கான அறிகுறி இல்லையாஏற்கனவே தூத்துக்குடியும் சாத்தான் குளமும் நீதிமன்றங்களை அதிர வைத்துள்ளனஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்திருவேங்கடம் உள்ளிட்ட மோதல் கொலைகளுக்கு  சட்டப்படியான விசாரணை நடத்தப்பட வேண்டும்ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் திருவேங்கடம் கொலையிலும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்சட்டத்தின் ஆட்சிகுற்றத்தைத் தடுக்கவே போலீசுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறதுகுற்றம் செய்வதற்கு அல்லகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதே போலீசின் வேலைதண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பு!