மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு (எம்சிசிசிபிஐ(எம்எல்விடுதலையுடன் இணைந்தது

செப்டம்பர் 9, 2024 அன்று இந்திய நிலக்கரியின் தலைநகரமான  ஜார்கண்ட் மாநிலம்தன்பாத்தில் செங்கொடிகள் பறக்கவரலாற்றுச் சிறப்புமிக்க ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. 1969ல் சாருமஜூம்தாரால் உருவாக்கப்பட்ட சிபிஐ(எம்எல்கட்சியுடன் 1972ல் ஏ.கே.ராயால்  உருவாக்கப்பட்ட மார்ச்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு இணைந்தை அறிவிக்கும் நிகழ்ச்சியாக அம் மாபெரும் பேரணி நடைபெற்றதுஜார்கண்ட் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள்ஆலைத் தொழிலாளர்கள்விவசாயிகள்மாணவர்கள்இளைஞர்கள்கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள்முற்போக்காளர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச்  செய்யும் வேலையில் பாஜக மும்முரமாக இருக்கும் வேளையில் நடைபெற்ற இந்த ஒற்றுமைப் பேரணிஜார்கண்ட்டைக் காக்கஜனநாயகத்தைப் பாதுகாக்கப் போராடும் சக்திகளுக்கு  ஒரு உத்வேகமூட்டும்  செய்தியைச் சொல்லியுள்ளதுஇந்த இணைப்பானது  சுதந்திர இந்தியாவில் நடைபெற்றுள்ள இரண்டு பாரம்பரியமிக்க இடதுசாரி கட்சிகளுக்கு இடையில் நடந்துள்ள இணைப்பாகும்.

நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியிலிருந்து அரசு ஒடுக்குமுறை மற்றும் நிலபிரபுத்துவ வன்முறைக்கு எதிராக உதயமான கம்யூனிச இயக்கம்சிபிஐ(எம்எல்இந்திய மண்ணில் ஆழமாக வேரூன்றியுள்ளதுஒடுக்கப்பட்டசுரண்டப்பட்ட மக்களுக்காகஉரிமை மறுக்கப்பட்ட இந்திய மக்களுக்காகஏழைகளின் உரிமைகளுக்காககவுரவத்திற்காகவும் சமூக மாற்றத்தில் ஒரு புரட்சிகர உறுதிப்பாட்டைத் தாங்கி வருவது  சிபிஐஎம்எல் கட்சிநிலக்கரி தேசியமயமாக்கப்படுவதற்காகவும் ஜார்கண்ட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருவது எம்சிசி கட்சிஇந்த இரண்டு நீரோட்டங்களும் ஏ.கே.ராய்ராம் நரேஷ்ராம்மகேந்திரசிங்குருதாஸ் சட்டர்ஜி ஆகிய மகத்தான தலைவர்களை உருவாக்கியதுஅவர்கள்  மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்இந்த இரண்டு நீரோட்டங்களின் ஒன்றிணைவானது தோழர் வினோத் மிஸ்ராவும்  தோழர் ஏ.கே.ராயும் போற்றிவந்த பரந்த கம்யூனிஸ்ட் ஒன்றுமையை உணர்த்துகிற வகையில் மிக முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறதுஇந்த இணைப்பானது தற்போது  இந்தியாவின் குறிப்பாக ஜார்கண்ட்டின் தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த இணைப்பை முன்னிட்டு நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியினைத் தொடர்ந்து தன்பாத்தின் கோல்ப் மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டம்  நடைபெற்றதுஅந்த மைதானம் முழுவதும் செங்கொடிகளாலும் பதாகைகளாலும்  சிவந்து காணப்பட்டதுதில்கா மன்ஜிசித்துஹன்னுபூலோஜானுபிர்ஸா முண்டா உள்ளிட்ட தியாகிகள்வரலாற்றுத் தலைவர்கள் படங்களும் வினோத் மிஸ்ரா.கே.ராய்குருதாஸ் சட்டர்ஜிமகேந்திரசிங் உள்ளிட்ட தலைர்களின் படங்களும் அங்கு காணப்பட்டனநீரையும் வனத்தையும் நிலத்தையும் பாதுகாக்கஜார்கண்ட்டின் பழங்குடி மற்றும் அடித்தட்டு மக்களையும் காத்திட பாஜவை வெளியேற்றுவோம் என பேரணியில் கலந்து கொண்ட மக்கள் உறுதியேற்றுக்கொண்டனர்பிஜேபியை வெளியேற்றுவோம்கொள்ளையைத் தடுத்திடுவோம்என முழங்கினர்இரு கட்சிகளின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர்எம்சிசியின்  தலைவர் ஆனந்த் மஹதோ  தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார்சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புரை ஆற்றினார்பல்வேறு தலைவர்களும் எழுச்சி உரை ஆற்றினர்சிபிஐ(எம்எல்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஸவதேஷ்எம்சிசியின் மிதிலேஷ்சிங்சிபிஐஎம்எல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜாராம்சிங்சுதாமா பிரசாத்ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் வினோத்சிங்பிகார் மாநில சிபிஐஎம்எல் சட்டமன்ற உறுப்பினர்கள்அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பொதுச்செயலாளர் மீனா திவாரிதிட்டத் தொழிலாளர்கள்  தலைவர் சசியாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்பாசிசத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை ஆழப்படுத்திடபாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கத் தீர்மானிக்கப்பட்டது.