சாய்பாபா: "ஜனநாயக"த்தாலேயே தியாகியாக்கப்பட்ட ஜனநாயகவாதி

அக்டோபர் 12, 2024 அன்று மாலை 8.36 க்கு பேராசிரியர்  ஜிஎன்சாய்பாபா தனது இறுதி மூச்சை சுவாசித்த அவரது இதயம் செயலற்று நின்று போனதுமருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற மிகவும் தீவிரமாக முயற்சித்தனர். ஆனால்அவர்களால் அது முடியவில்லைஅவருக்கு 57 வயதுதான்பித்தப்பை கற்களை நீக்கிய பிறகு ஏற்பட்ட சிக்கல்களால் அவர் இறக்க நேரிட்டதுஇந்தச் சிகிச்சை முறை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதல்லஆனால்சாய்பாபா சாதாரண சூழ்நிலைமைகளில் அறுவை சிகிச்சை அரங்கத்திற்குள் நுழைந்திருக்கவில்லை.

90% செயல்படவியலாத  சாய்பாபாவின் உடல் பத்தாண்டு கால அநீதியான சிறைவாசம்சித்திரவதைமோசமான துன்புறுத்தல்  காரணமாக மிகவும் பலவீனமடைந்திருந்தது. சக அரசியல் கைதிகளான அருட்தந்தை ஸ்டேன் சுவாமிபாண்டு நரோதேஜியா லால் சிறையிலேயே மரணமடைந்தார்கள். சாய்பாபா சிறையில் இறக்கவில்லை என்றபோதிலும்  சிறைவாசத்தின் கொடுமைகள் அவருடைய இறப்பை வேகப்படுத்தின என்பதில் சந்தேகமே இல்லைகுற்றவியல் நீதிமுறை அவரது உடலை கொடூரமாக சிதைக்க எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களுக்குள் நுழைவதற்கு முன்னர்அவரது செயலற்ற உடலுக்குள் இருந்த மனசைக் கண்டு அரசு எந்தளவுக்கு அச்சமடைந்தது என்பதைத்தான் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஐந்து பேருடன் சேர்த்துடெல்லி பல்கலைக்கழக மேனாள் பேராசிரியரான சாய்பாபாவும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டம் 1967இன் பிரிவு 18 உடன்  2014 இன் பிற குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் "அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டார்அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்று அடிக்கடி சொல்லப்பட்டதுபசுமை வேட்டை மற்றும் அதுபோன்ற அரசின் நடவடிக்கைகளை வெளிப்படையாக எதிர்த்தது, அரசின் அடக்கு முறைக்குள்ளான தலித்துகள்பழங்குடியினர், இந்தியாவுக்குள் இருக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஆகியோருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது ஆகியவைதான் சாய்பாபா செய்த "குற்றம்".

2014இல் பாரதிய ஜனதா கட்சி (பாஜகஆட்சியைப் பிடித்ததிலிருந்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள் முதல் வழக்கறிஞர்கள் வரைபத்திரிக்கையாளர்கள் முதல் மாணவர்கள் வரையிலும் ஜனநாயக, முற்போக்கு உரிமைகளுக்காகப் போராட குரல் கொடுப்பவர்கள் துன்புறுத்தப்படுவது வேகமாக அதிகரித்து விட்டது.  2018 இல் பீமா கொரேகானில் ஆரம்பித்து, 2020 இல் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் முதல் செயல்பாட்டாளர் டீஸ்டா செதால்வத்பத்திரிக்கையாளர் முகமத் சுபைர் வரை கைதுகள் தொடர்ந்தனஅதிகாரத்தில் உள்ளவர்கள் பற்றிய உண்மையை பேசும்அதிகாரப் பலம் படைத்தவர்களின் பொய்களையும் பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்தும் எவரையும் சிறைக்குள் தள்ளுவதையே குறியாகக் கொண்டுள்ளது தற்போதைய ஆட்சி. கொடூரமான உபா சட்டம் 1967ன் கீழ், பிணை அரிதானதுசிறையே விதியாகும்எதிர்ப்புக்  குரல்களை தந்திரமாக நசுக்குவதற்கு மிகவும் வசதியான சட்டம் இதுஅதற்காக  "மாவோயிஸ்ட்" முத்திரையும் அடிக்கடி ரொம்பவே பயன்படுத்தப்படுகிறது.

மே 2014 இல் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு கொஞ்சம் முன்பு 2013 இல்  பிரசாந்த் ராஹிஹேம் மிஸ்ரா ஆகியோர் கைது செய்யப்பட்ட வழக்கோடு தொடர்புள்ளதாக ஜிஎன்.சாய்பாபா கைது செய்யப்பட்டார்இந்தக் கைதுகள் பாஜகவின் எழுச்சிக்கு முந்தைய ஆண்டுகளில் ஊர்ந்து வந்த எதேச்சதிகாரத்தின் அடையாளமாகவே இருந்ததுஅது இந்துத்வாவின் எழுச்சியை முன்னாடியே அறித்தது மட்டுமின்றி  எளிதாக்கியது.

1967 லிருந்து உபா சட்டம் அமலில் இருந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்ஆனால் 2004 இல்தான், உபா திருத்தச் சட்டம் 2004 இன் மூலம் பயங்கரவாத  நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவென்று  ஒரு அத்தியாயத்தை நாடாளுமன்றம் சேர்த்ததுஇந்தச் சட்டம் 2004 இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது. 2004, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் கணிசமான  திருத்தங்களைச் செய்து  இந்தச் சட்டம் மேலும் கொடூரமானதாக மாற்றப்பட்டது.

உபா சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட உடனேயே ஜி என்சாய்பாபாவின் உடலும் மனதும் குற்றவியல் நீதிமுறையின் முழு பலத்தையும் எதிர்கொண்டனஎவ்வளவு முடியுமோ அவ்வளவு காலத்திற்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடூர நிலையில் அவரை சிறைக்குள் வைத்திருக்க அரசு எல்லா வேலைகளையும் செய்தது.

கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஒரு முறை அல்ல, இரண்டு முறை (2017மற்றும் 2022) சாய்பாபாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுஆனால், அமர்வு நீதிமன்றத்தின்  நடைமுறைத் தவறுகளின் காரணமாக  2022இல் பாம்பே உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்அதனால் அரசின் திட்டங்கள் தவிடுபொடியானவுடன் அரசு தனது கொடிய விஷப்பற்களை முழுமையாக வெளிக்காட்டியது. தனது ஜனநாயக பாசாங்கை ஒதுக்கித் தள்ளிவிட்டு அவரை சிறை கம்பிகளுக்கு பின்னால் தொடர்ந்து வைத்திருக்க தீவிரமாக முயற்சித்தது.

2022 இல் பாம்பே உயர்நீதிமன்றத்தின் இருவர் அமர்வால் அவர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளேயே மகாராஷ்டிரா அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில்அந்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்ததுஅதனை தொடர்ந்து அவசரத்தின் அலங்கோலங்கள் அரங்கேறின.

அரசுத் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா முதலில் தலைமை நீதிபதி யுயு லலித் அமர்வில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வைக்க முயற்சித்தார். ஆனால் அன்றைய நாளுக்கான விசாரணைகளை ஏற்கனவே நீதிமன்றம் முடித்து விட்டிருந்தது. அதன்பிறகு மேத்தா நீதிபதி டி ஒய் சந்திர சூட் அமர்வை அணுகினார். இங்கும் கூட உயர் நீதிமன்றத்தின் ஆணையை நிறுத்தி வைப்பதற்கான வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விரைவான விசாரணைக்காக விண்ணப்பிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதுஅதேவேளை இவ் வழக்கு  திங்கள் கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ஆனால் திங்களன்று  வழக்கு விசாரிக்கப்படும் என்பதற்காக  விடுதலை செய்து உத்தரவிட்டதை  நிறுத்தி வைக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டது..

ஆனால் வழக்கத்திற்கு மாறாக திடீர் திருப்பமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித்தால் நீதிபதிகள் பேலா திரிவேதிஎம்ஆர்ஷா ஆகியோர் தலைமையில் சனிக்கிழமையன்று ஒரு சிறப்பு விசாரணைக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு அமர்வுஉயர் நீதிமன்றம் நடைமுறை தவறுகளின் மீது மட்டுமே கவனம் குவித்துள்ளதேயொழிய  வழக்கின் தன்மையைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது ஆகவே  வழக்கின் தன்மை  தகுதிகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் ஒரு புதிய அமர்வு வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டதுஉச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வுஒருவர் பயங்கரவாதக் குற்றங்களில் ஈடுபடுவதற்கு அவரின் மூளையானது மிக முக்கியமான ஒருங்கிணைப்புப் பகுதியாகும் என கருத்தும்  கூறியது. பேராசிரியர் சாய்பாபா போன்ற ஒரு மாற்றுத் திறனாளி மூத்த குடிமகனை வெறுமனே வீட்டுக் காவலில் வைப்பது போதுமானதாக இருக்காது என்று  அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பி வைத்தார்கள்..

உச்ச நீதிமன்றத்தின் துரதிஷ்டவசமான இந்த வார்த்தைகள் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் மீது அரசால் நடத்தப்படும்  அரசியல் துன்புறுத்தலுக்கு பின்லுள்ள உண்மையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியதுஜனநாயகமனிதாபிமான, நீதிக்கான சமூக ஒழுங்கு ஆகியவற்றை  விதைக் கூடிய  கருத்துகள் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பவையாகும். அதனால் எழுதுவதுபேசுவதுபயணிப்பது அல்லது சில நேரங்களில் வெறுமனே இருப்பதன் வாயிலாக அத்தகைய கருத்துகளை நடைமுறைக்கு கொண்டு வரும் உடல்முழுவதுமாக செயலாற்றதாக்கப்பட வேண்டுமாம். சாய்பாபா போன்றமாற்றுக் கருத்து சிந்தனைகளை கொண்டிருப்பவர்களின்  உடல் பத்து சதவீதம்கூட  செயல்படும் திறனைக் கொண்டிருப்பதற்கு அனுமதியில்லை.

அவர் இறுதியாக மார்ச் 2024 அன்று விடுதலை செய்யப்பட்டார்பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வுமுட்டாள்தனமான சாட்சிகள்அரசுத் தரப்பு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று  கூறி ஜி என் சாய்பாபாவையும் மற்ற ஐவரையும்  ( அதில் ஒருவர் சிறையில்  பன்றிக்காய்ச்சலால் இறந்து விட்டார்) மீண்டும் ஒருமுறை விடுதலை செய்ததுஅவருடைய விடுதலையை நிறுத்தி வைக்க அரசு மீண்டும்  முயற்சித்தது ஆனால் இம்முறை  வெற்றி பெறமுடியவில்லை.

சாய்பாபாவின் உடலை அழிக்கும் செயலானது மெதுவாக அதேவேளை நிலைக்க க்கூடியதாக  நடத்தப்பட்டது. சிறைக் கொடுமையினால் அவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் கடந்த சில ஆண்டுகளில் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு பல தடவைகள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மருத்துவர்களும் கூட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்த வேண்டுகோள்கள் கண்டு கொள்ளப்படவில்லைஆகஸ்ட் 2022-ல் அவர் தொடர்ந்து கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் கோவிட் தொற்றால் எளிதாக பாதிக்கப்படக் கூடியவராக இருந்தார். கோவிட் அவரது உடல்நலத்தை எதிர்மறையாகப் பாதித்ததுஅவருக்கு தொடர்ந்து சளி பிடித்ததுகாய்ச்சல் வந்ததுஅவர் திடீரென மயக்கிடுவார்உணர்வற்று விழுந்திடுவார்.

அவரின் முடக்குவாத நோய் மோசமடைந்ததால் சிறை மருத்துவர்கள் அவரை டெல்லி ஏஐஐஎம்எஸ்-க்கு கொண்டு செல்லுமாறு வாய்மொழியாக யோசனை கூறினர். அப்போதும் கூட அவரது குடும்பத்திற்கு எழுத்துபூர்வமான அறிக்கைகள் எதுவும்  கொடுக்கப்படவில்லைஅவருக்கு  மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பதற்கு மாறாக, அவப்புகழ் பெற்ற "முட்டை தனிமைச்சிறை" (அண்டா செல்) -யில் அடைத்து வைத்தனர்அது  உயரமான சுவர்களைக் கொண்டதுஅதன்  கூரைக்கு அருகில் முட்டை வடிவத்தில் ஜன்னல். அது வழியாக இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் குளிர்காற்று இரவில் வீசும். 2020 இல் உயர்நீதிமன்றம் அவருக்கு அவசரகால பிணை வழங்க மறுத்துவிட்டது. அவரது அம்மா இறக்கும் தருவாயில் கடைசி நேரத்தில் அவரை காணொளி வாயிலாகப் பார்க்கக் கூட நாக்பூர் சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லைசாய்பாபா விடுதலை செய்யப்பட்ட அந்த நேரத்தில் அவருடைய உடல் சிறிய நோய்களுக்குக் கூட கடும் பாதிப்படையக் கூடியதாக மாறிவிட்டிருந்ததுஅது அவரது இறப்பை விரைவாக்கியது.

எந்த ஒரு அரசாங்கமும் மாற்றுக் கருத்தை ஒடுக்குவதற்காக குற்றவியல் நீதி முறையைத் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திடவிரைவில் பிணை கிடைப்பதற்குஅனைத்து அரசியல் கைதிகளின் வழக்குகளையும் விரைவாக  விசாரிக்கஅனைவருக்குமான நீதியை ஒழித்துக் கட்ட விரும்பும் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்துவத ஒரு ஜனநாயக நாட்டில்  உபா போன்ற சட்டங்களின் தேவையைக் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியத்திற்கு பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவின் தியாகம் மீண்டும் அழுத்தம் கொடுக்கிறதுதண்டனைக்கான நடைமுறையைக் கொண்டுள்ள  நீதிமுறை எப்படி நியாயமானதாக இருக்கமுடியும்அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கில் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒருவர் விடுவிக்கப்பட்டார் என்றாலும் கூட, அரசமைப்பு சட்டஜனநாயக மதிப்பீடுகளில் நீண்ட காலம் என்பது எவ்வளவு நீண்டதுஇக் கேள்வி நம் அனைவரையும் தொந்தரவுக்குள்ளாக்க வேண்டும்.