புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

சுதந்திரத்தின் 75 வது ஆண்டை அமுதப் பெருவிழா என்று பெயர் சூட்டி கொண்டாடி வரும் மோடி (சாவர்க்கரை சுதந்திர போராட்ட வீரர் என்று கொண்டாடி வரும் கோட்சே கூட்டத்தின் எச்.ராஜா காரைக்குடியில்தான் குடியிருக்கிறார்), மோடி கூட்டத்தினர் வேறு தேசிய மாநிலக் கட்சிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி கண்டுகொள்ளாத நிலையில் புரட்சிகர இளைஞர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) எடுத்துள்ள முயற்சி பற்றி நாட்டுப்பற்று கொண்ட முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். -ரஞ்சித்