விருதுநகர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் 10.7.2022 புரட்சிகர இளைஞர் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பாளராக தோழர் கிருஷ்ண கோபால பாண்டியனும் தோழர்கள் ஜெயகிருஷ்ணன், சிவகுமார், லாரன்ஸ்கிருபாகரன், அஸ்வின், சுரேஷ்குமார், ராஜபாண்டி ஆகிய 7 பேர் கொண்ட புதிய அமைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டது. மேலும் 1000 உறுப்பினர்களை சேர்ப்பது, மாவட்டப் பொதுப்பேரவை நடத்துவது, பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது இயக்கம் நடத்துவது, தஞ்சாவூரில் நடைபெறும் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் 10பேர் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மாணவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல்--கண்டனம்

மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் வேலைக்கு ஆளெடுப்பதில் நடைபெற்ற முறைகேடு களைக் கண்டித்து, புரட்சிகர இளைஞர் கழகம்(ஆர்ஒய்ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கழகம்(அய்சா) சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கு வங்க மம்தா அரசு, சிபிஐ (எம்எல்)விடுதலை கட்சியியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தோழர் அபிஜித் மஜும்தார், அய்சா தலைவர் நிலாஷிஸ், ஆர்ஓய்ஏ தலைவர் ரன்அஜாய் மற்றும் பல முன்னணி தோழர்களைத் தாக்கி கைது செய்தது. ஊர்வலமாக சென்றவர்களை ராம்லீலா மைதானத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் தோழர்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.

நெல்லையில் பாசிச பாஜக - இந்து முன்னணியால் விசிறி விடப்பட்ட சட்ட விரோத கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி; நீதிக்கான போராட்டம் வென்றது !

சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவின் வேட்பாளர் செய்த பணப்பட்டுவாடாவை அம்பலப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ், இக்க(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா மற்றும் சில குடும்பத்தினரையும் காவிக்கும்பல்களின் ஆதரவில் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்து வைத்ததற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் இகக(மாலெ) கட்சியால் எடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 05, 2022 ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு CPI(ML) RYA - AlSA தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 05, 2022 ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு

CPI(ML)- RYA -AlSA தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறை ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டது.

தடை மீறி கண்டன ஆர்ப்பாட்டம். 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது

பாபநாசம் திருமண மஹால்

தமிழக அரசே!

கைது செய்யபட்ட தோழர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்!