சிபிஐ எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புப் பேட்டி

(பிடிஐ யின்நாடாளுமன்றத் தெரு என்ற சேனலில் வெளிவந்தது)

(ஆங்கிலத்தில் பேட்டி:  https://youtu.be/lLnosZxjpXw)

தமிழ் வரி வடிவம்சிமதிவாணன்

பகுதி -2 சென்ற இதழ் தொடர்ச்சி

(மற்ற இடதுசாரி கட்சிகளுடன் ஒப்பிடும்போது உங்கள் அணுகுமுறை எவ்வாறு மாறுபட்டதாக இருக்கிறதுஎன்ற கேள்விக்கான பதிலின் தொடர்ச்சி)

சுதந்திரமான இடது கட்சியாகச் செயல்பட்டுசில பிரச்சனைகளில் (இடது முன்னணி) அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டோம்சில பிரச்சனைகளின் தன்மையை ஒட்டி இடது முன்னணியோடு ஒத்துப்போகாமல் முரண்பட்டோம்சிங்கூர்நந்திகிராமம் பிரச்சனையோடு வங்கத்தில் சரிவு துவங்கியதுஆனால்எப்படி அதிலிருந்து மீள்வது என்பதை முறையாகக் கையாளவில்லைஅனேகமாகஅவர்கள் மேற்கு வங்கத்தில் பெற்ற வெற்றியின் தன்மையும்நீண்ட காலமாக வெற்றிமுகத்தில் அவர்கள் இருந்ததும்அவர்கள்  தோல்வியிலிருந்து திரும்புவதை மிகுந்த சிரமமாக்குகிறது போலும்

ஆனால் கேரளாவில் நிலைமை வேறுஅங்கே ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி அரசாங்கங்கள் அமைந்தனஆனால்இந்த முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்இருந்தாலும் கேரளாவும் வங்கத்தின் வழியில் செல்லாது என்று நினைக்கிறேன்திரிபுராவும் கூட வங்கத்தைப் போன்றே உள்ளதுஅங்கே இடதுசாரிகளை பிஜேபி முந்திச் செல்கிறதுஇடதுசாரிகள் மீண்டு வருவது கடினமானதாக இருக்கிறது.

அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களின் கொள்கைகளின் பெரும்பகுதி அதிகாரத்தை மையமாகக்கொண்டவையாக மாறிவிட்டதுஅவர்கள் கேரளாவில்என் நினைவு சரியென்றால், 1957ல் துவங்கினார்கள்அவர்களின் ஆட்சியை நீடிக்க விடாது செய்துவிட்டனர்அதுபோன்ற ஒன்றுதான், 1960களின் நடுப்பகுதியில் அல்லது 67ல்   இரண்டாவது முறையாகவும் நேர்ந்ததுநீண்ட காலம் ஆட்சி நடத்த முடியவில்லைஎனவேஅரசாங்கம் நிலையான ஒன்றாக இருப்பது சிபிஐ எம்முக்கு முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்மேற்கு வங்கத்தில் இருந்த நிலைமைகள் காரணமாக அவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவும் முடிந்ததுஇப்படியாகஆட்சியில் இருப்பது முதன்மையானதாகவும்போராட்டங்கள் இரண்டாம் பட்சமாகவும் அவர்களுக்கு மாறிவிட்டது

உதாரணமாக சிங்கூர்நந்திகிராம் பிரச்சனையைப் பாருங்களேன்சமூகத்தை உற்று நோக்கும் யாருக்கும்பெரிய தொழில் ஒன்று வரும் என்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவது என்ற கருத்தை விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்வதில்லை என்பது தெரிந்துவிடும்எனவேகண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கும் எந்தக் கட்சியும்தான் செய்த முடிவை மறு பரிசீலனை செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்அவர்கள் எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்ஆனால்அவர்கள் தாங்கள் எடுத்த முடிவை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்மக்கள் சொல்வது தவறு என்றும் தாங்கள் எடுத்த முடிவு சரியானது என்றும் கருதினார்கள்

எங்களைப் பொறுத்தவரைநாங்கள் எங்கேயும்ஒருபோதும் அதிகாரத்தில் இருந்ததில்லைஎங்கள் கட்சி மக்களைச் சார்ந்து நிற்பதாக இருக்கிறதுபோராட்டங்களை நடத்தும் கட்சியாக இருக்கிறதுஎந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்ஒரு நல்ல கொள்கை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்அதனை அமலாக்கக் கூட நெருக்கடி கொடுப்பது தேவையானதாக இருக்கிறதுஉதாரணமாக நான் உங்களுக்குச் சொன்ன வாக்களிக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளுங்கள்அரசியல் சட்டத்தின்படி வாக்களிப்பு அடிப்படை உரிமையாகும்ஆனால்அது நடைமுறையில் இல்லைஎனவேஎந்த ஒரு உரிமையை நீங்கள் பெறுவதற்கும் போராடியாக வேண்டும்மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால்வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் என்றால்ஒவ்வொரு அங்குலத்திலும் போராடியாக வேண்டும்.

எனவேஎங்களின் அணுகுமுறை மக்களை மையப்படுத்தி நிற்பதாகவே எப்போதும் இருந்ததுசுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடாக இருந்ததுஇருந்தபோதும்நாங்கள் முயற்சியெடுத்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குச் சேர்ந்து செயல்பட முயற்சிக்கிறோம்இப்போதுஇந்தத் தருணத்தின் நிலைமை இதற்கு முன்பு இருந்தது இல்லை

உதாரணமாகஇந்தியா கூட்டணி போன்ற ஒன்றை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாதுதற்போது ஆர்ஜேடி கட்சியோடு நாங்கள் மேற்கொண்டுள்ள சரிக்கட்டல் பற்றியும் கூடஆண்டுகளுக்கு முன்பு யோசித்துப் பார்த்திருப்பது சாத்தியமில்லைஎனவேஇது காலத்தின் தேவைஎனவேஇடது தளத்திற்கு வெளியே உள்ளகருத்தியல் ரீதியில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட கட்சிகளோடும் நாங்கள் ஊடாட  முயற்சிக்கிறோம்இது எங்களுக்கு புதிய அனுபவம்இருந்தாலும்இந்த விஷயத்தில் ஐக்கியப்பட்ட இடதுகள் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை ஆற்றியாக வேண்டும்எனவேநாங்கள் முயற்சி எடுப்போம்பிற இடதுசாரி கட்சிகளும் கூட மீண்டு வரக்கூடும் என்றும் நாங்கள் கருதுகிறோம்இடதுசாரிகள் 2004ல் நாடாளுமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கொண்டிருந்தனர்அது இப்போது ஒன்பதாகச் சரிந்துவிட்டதுஇது குறிப்பிடத்தக்கச் சரிவாகும்

பேட்டியாளர்

நீங்கள் சரிவைப் பற்றி பேசினீர்கள். 60லிருந்துஎன்பதாகமிகவும் கீழே இறங்கிவிட்டதுகேரளாவில் சிபிஐ எம் வென்ற ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நீங்கள் உட்பட இடதுகள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசையும் பிற கட்சிகளையும் சார்ந்துள்ளீர்கள்சார்ந்திருப்பது என்ன விதமான தாக்கங்களை,கருத்தியல் அடிப்படை உட்பட ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்

திபங்கர்

நான் அதனை சார்ந்திருப்பது என்று பார்க்கவில்லைமாறாக ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது என்று பார்க்கிறேன்எங்களின் கூட்டணியில் உள்ளவர்கள் எந்த அளவு லாபம் அடைந்திருக்கிறார்களோ அந்த அளவுக்கு நாங்களும் பலன் பெற்றிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்உண்மையைச் சொல்லப் போனால்அவர்கள் கூடுதலான பலன்களைப் பெற்றுள்ளார்கள்தேர்தலில் வாக்குகள் ஒரு பக்கமாகக் குவிவது அதிகரித்துள்ளதுஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்குலட்சம் அல்லதுலட்சம் வாக்குகளைப் பெற வேண்டும்ஒரு சுதந்திரமான இடதுசாரி கட்சிக்குஅல்லதுலட்சம் வாக்குகள் பெறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கலாம்அனேகமாக அது கேரளாவில் அல்லது எங்கள் கட்சிக்கு வேறு சில மாநிலங்களில் சாத்தியமானதாக இருக்கக் கூடும்எனவேகூட்டணி உருவாக்குவது இந்த காலத்தின் தேவையாக இருக்கிறதுஎல்லாக் கட்சிகளுக்கும் இப்போது அது தேவையானதாக இருக்கிறதுஅது ஒரு நிரந்தரமான சார்பு நிலை என்று சொல்ல வேண்டிய அளவுக்கு இருக்கிறதுஎனவேதான்இந்த காலகட்டத்தை முன்னெப்போதும் இல்லாத  ஒன்று என்று குறிப்பிடுகிறேன்இந்தியா இதுபோன்றதொரு சூழலை இதற்கு முன்பு சந்தித்ததில்லைஎந்தவொரு கட்சியும்இடதுசாரி சோசலிசக் கட்சியாக இருந்தாலும் சரிகாங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரிஇதுவரை எழுந்திராத இந்த கேள்விக்கு வழக்கத்துக்கு மாறான பதில் ஒன்றைக் கண்டுபிடித்தாக வேண்டும்

பேட்டியாளர்:

கூட்டணி அமைப்பதும் எளிதான ஒன்றுதான்கூட்டணியில் உள்ளவர்கள் மையத்தில் உள்ளவர்களாகவோ அல்லது மையத்திற்கு இடது பக்கத்தில் உள்ளவர்களாகவோ இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள்

திபங்கர்

கருத்தியல் நெருக்கத்தைக் காட்டிலும்அனேகமாகஒத்துப்போகும் சமூகத் தன்மை கூடுதலாக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.   உதாரணமாகஎங்களின் வலு அதிகமாக இருக்கும் பீகாரையும் ஜார்கண்ட்டையும் பாருங்களேன்எங்கள் கட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம்தான் வளர்ந்ததுஅந்த பத்தாண்டுகளின்போது காங்கிரஸ் ஆதிக்கத்தில்  இருந்ததுஎனவேஅதுதான் அரசியலில் பிரதானமான நிலப்பிரபுத்துவ சக்தியாகவும் இருந்ததுஎனவேநாங்கள் காங்கிரசுக்கு மிகப் பலத்த அடிகளைக் கொடுத்தோம்இருந்தபோதும் எங்களுக்கு மிகப் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடவில்லைஏனென்றால்நாங்கள் மிகவும் ஏழையான மக்கள் பிரிவினரின் பிரதிநிதியாக இருந்தோம்ஆனால்நாங்கள் அரசியல் நுழைவாயில் ஒன்றைத் திறந்துவிட்டோம்அதன் வழியே பிற கட்சிகள் உள்ளே நுழைந்தனர்உதாரணத்துக்கு ஜனதா தளத்தைச் சொல்லலாம்நீங்கள் 70களின் துவக்க காலத்தைப் பார்த்தீர்கள் என்றால்லாலு யாதவ் போன்றவர்கள் என்ன செய்தார்கள் என்று மக்கள் சொல்கிறார்களோ அதைத்தான் நாங்களும் செய்து வந்தோம்லாலு மக்களுக்காக குரல் கொடுத்தார் என்று மக்கள் சொல்லி வந்தார்கள்லாலு பீகார் மக்களுக்கு இதனைக் கொடுத்தார் என்று சொன்னார்கள்ஆனால், 70களில் அதே கீழ்த்தட்டு மக்கள் தங்களின் கௌரவத்துக்காக எங்களின் பதாகையின் கீழ் போராடிக்கொண்டிருந்தார்கள்மனித உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள்அதாவதுநடுத்தட்டு விவசாயப் பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளைச் சேர்ந்த ஓபிசிக்களும் இபிசிக்களும் போராடிக்கொண்டிருந்தனர்எங்களின் அடித்தளமாக தலித்துகளும் இபிசிக்களின் ஒரு பிரிவினரும் இருந்தனர்இப்படியாகசமூக ரீதியான பொருத்தப்பாடு இருந்ததுஇவை ஒன்றுக்கு ஒன்று அனுசரித்துப் போகும் சமூகப் பிரிவினராக இருந்தனர்உதாரணமாகஆர்ஜேடியின் சமூக அடித்தளம் கடந்த சில ஆண்டுகளில் சுருங்கி வந்ததுமக்கள் இப்போது இரண்டு சமூகங்கள் அல்லது இரண்டு சாதிகள் என்று சொல்கிறார்கள்எனவேஒவ்வொருவரும் பலன் பெறும் விஷயத்தை நாங்கள் அரங்கிற்குள் கொண்டு வந்தோம்கருத்தியல் வார்த்தைகளில் சொல்வதானால்நீங்கள் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவீர்கள் என்றால் நீங்கள் யாராக இருந்தாலும் இந்தியா கூட்டணியில் இருக்க முடியும்

உதாரணமாக சிவசேனா இந்தியா கூட்டணியில் இருக்கிறதுகருத்தியல் ரீதியில் பார்த்தால் மகாராஷ்டிராவின் சிவசேனா இந்துத்துவா கட்சியாக இருந்தபோதும்அது அரசியல் சட்டத்திற்கு அர்ப்பணிப்பு உள்ளதாக இருக்கும்வரைஜனநாயகத்தைக் காப்பதாக இருக்கும்வரை அது இந்தியா கூட்டணியில் இருப்பதில் பிரச்சனையில்லைஎங்களைப் பொருத்தவரை நாங்கள் மகாராஷ்டிராவில் பெரிய அளவில் இல்லைஎங்களுக்கும் அவர்களுக்கும் நேரடி ஊடாடலுக்கு வாய்ப்பில்லைஐக்கியத்துக்கான மைய கருத்தாக இருக்கும் அரசியல் சட்டத்தைக் காப்போம் என்பதில் ஒற்றுமை இருக்கும் என்றால் நாம் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற முடியும்.

(தொடரும்)