தோழர் தொல்.திருமாவளவன் நேர்காணல்-2

மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி-ஆர்எஸ்எஸ் அரசியல் சித்து விளையாட்டுகளே காரணம்

சென்ற இதழ் தொடர்ச்சி

மணிப்பூர் வன்முறை, கலவரம் இன்னும் தொடர்கிறது. மிசோரத்திலும் கூட எதிரொலிக் கிறது. மணிப்பூர் சென்றுவந்த “இந்தியா கூட்டணியின்” நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அங்குள்ள நிலமைகள் பற்றி மாலெ தீப்பொறி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சிபிஐ எம்எல் கட்சி அறைகூவல்!

இந்த நாடே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. "இந்து ராஷ்ட்ரா" உருவாக்கும் கனவுகளில் சங்கி பரிவாரங்கள் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தாக்குதலின் 22 வது நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் புகைப்புட்டிகள்

டிசம்பர் 13, 2001 அன்று இந்திய நாடாளு மன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்கு தலின் இருபத்திரண்டாவது நினைவு நாளில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் அதிர்ச்சி தரும் புகை பீதிக்கு சாட்சியமாகியது. சாகர் சர்மா என அடையாளம் காணப்பட்ட லக்னோ இளைஞர் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென குதித்து, மேஜைகள் மீது தாவிச்சென்று மஞ்சள் புகையை வெளியேற்றும் புட்டியைத் திறந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிடித்து காவலர்களிடம் ஒப்படைக்கும் முன்பு, ஜீரோ நேரம் நடந்து கொண்டிருக்கும் போதே அவர் இதனைத் செய்தார். சாகருடன் மைசூரின் மனோரஞ்சன் என்ற கூட்டாளியும் இருந்தார்.

சிபிஐஎம்எல் கர்நாடக மாநில மாநாடு

2023 டிசம்பர் 9, 10 தேதிகளில், சிபிஐஎம்எல் கட்சியின் கர்நாடக மாநில இரண்டாவது மாநாடு ரெய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் நடைபெற்றது. டிசம்பர் 9 காலை கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கொடியேற்றி வைத்தார். செங்கொடிகள் நிறைந்த கண்கவர் பேரணி 4 கி.மீ. தூரம் எழுச்சிகரமாக நடைபெற்றது.

தோழர் என்.கே.நடராஜன் முதலாமாண்டு நினைவேந்தல்

இகக(மாலெ) கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச் செயலாளரும் மத்தியக் குழு உறுப்பினரு மான தோழர் என்.கே.நடராஜன் 2022 டிசம்பர் 10 அன்று எதிர்பாராத நேரத்தில் அவரின் அன்புக்குரிய எம்எல் கட்சியையும் நம்மையும் விட்டுப் பிரிந்தார். தோழர் என்கேயின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. 10.12.2023 அன்று திண்டுக்கல் மாவட்டம் எரியோட் டில் தோழர் என்கே நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் தோழர் ரவி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர் பழ.

நாங்களும் இடதுசாரிகள்தான்

நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மாலெ தீப்பொறி பத்திரிகை ஆசிரியர் ஜி.ரமேஷ் மற்றும் தீப்பொறி பத்திரிகைக் குழுவினர் தோழர் பாலசுந்தரம், தோழர் ரஞ்சனி, தோழர் ஜோஸ்வா ஆகியோர் சந்தித்துப் பேசிய உரையாடலின் முதல் பகுதி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 41 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

விடுதலை சிறுத்தைகள் கட்சி, நான் தலைமை ஏற்றபிறகு, தொடக்கத்தில் ஒரு சமூக நீதிக்கான இயக்கமாக, சமூக இயக்கமாகவே பயணத்தைத் தொடங்கியது.

2023 -டிசம்பர் 18 - உறுதிமொழி!

தோழர் விஎம்மின் 25 வது ஆண்டு நினைவுநாளில், நமது மாபெரும் தியாகிகள், மறைந்த தலைவர்களது மாபெரும் புரட்சிகர லட்சியத்திற்கு இகக(மாலெ) தன்னை மறுஅர்ப்பணிப்பு செய்துகொள்கிறது, இன்றைய சவால்மிக்க சூழலில் தோழர் விஎம் மினது புரட்சிகர மரபை முன்னெடுத்துச்செல்ல உறுதி ஏற்கிறது.

ஆறு முதல் கடல் வரை பாலஸ்தீனம் விடுதலை பெற வேண்டும்!

இஸ்ரேலின் இன வெறியால் பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் என லட்சக்கணக்கானவர் கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என குறிவைத்து, திட்டமிட்டுத் தாக்கிக் கொண்டிருக் கிறது இஸ்ரேல். இது இஸ்ரேலின் அகண்ட இஸ்ரேல் நோக்கம் மட்டுமல்ல, இன அழிப்புச் செயல் ஆகும். இந்த இனவெறி உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தொடரும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்-படுகொடுலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி

தமிழ்நாட்டில் அதுவும் தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல பட்டியலின மக்கள் படுகொடுலை செய்யப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை, மதுரை மாவட்டம் பெருங்குடி என தொடர்கிறது. நெல்லை மாநகரம், மணிமூர்த்தீஸ் வரத்தில் இரண்டு பட்டியலின இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மீது சிறு நீர் கழித்து அவமானப்படுத்தினார்கள் சாதியாதிக்க வெறியர்கள்.

ஈபி, ஈடியின் அரசாட்சியும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை மேலும் மேலும் கேலிக்கூத்தாக்குவதும்

மோடி அரசாங்கத்திற்கு ஈபியும் (தேர்தல் பத்திரங்கள்), ஈடியும் (அமலாக்க இயக்குனரகம்) அதிகாரத்திற்கான இரண்டு மிகப்பெரிய ஊற்றாக வெளிப்பட்டுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களில் உண்மையிலேயே ஈடிதான் பாஜகவிற்கான நட்சத்திர பரப்புரையாளராக மாறியுள்ளது. ஈடியின் இருத்தல் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென்றால் தனது எதிர்ப்பாளர்களை இலக்காக்க அதனை ஆயுதமாக்கி யிருக்கிறது. கார்ப்பரேட்டு களிடமிருந்து கட்டுப் பாடற்ற, கணக்கில் வராத நிதி பெறுதலை எளிதாக்க, தேர்தல் பத்திரங்களை மோடி அரசாங்கம் தான் உருவாக்கியது; அறிமுகப்படுத்தியது.