கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, இந்திய வெளியுறவுக் கொள்கை அமெரிக்க முன்னுரிமைகளோடு ஒன்றிப்போகிறது. இது பொதுவாக, இந்திய-அமெரிக்க நீண்டகால ஒத்துழைப்பு என சித்தரிக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, நேருவிய அணிசேரா சகாப்தத்தின் முடிவிற்கு சமிக்ஞையாகியது. அது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான கூட்டணியில் புதிய கட்டத்தை முன்னறிவித்தது. தாராளமயமாக்க, தனியார்மயமாக்க, உலகமயமாக்க கொள்கைகளை புதுதில்லி ஏற்றுக்கொண்டதன் மூலம் பொருளாதார தளத்தில் இந்திய-அமெரிக்க உறவுகள் உறுதி பெற்றன.