அம்பலமான அதானியின் அசுர வளர்ச்சியும் மோடி வித்தையும்!

இந்திய நாட்டின் வளர்ச்சியை விரும்பாத வர்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்கள் அதானி குழுமத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் இது இந்தியாவின் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்றும் நாங்கள் இந்த நாட்டின் நலனிற்காகவே பாடுபடுகிறோம் என்றும் அதானி குழுமத்தால் பல பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் விளம்பரம் போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் என்ற முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வுகளை அரித்துப்போகச் செய்யும்: இகக(மாலெ)

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் கடிதத்திற்கு இகக(மாலெ) அளித்துள்ள பதிலில் இந்த முன்மொழிவு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத் துக்கு விரோதமானது என்று சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் சாவு மணி அடிக்கிற செயலாகும்.

தலையங்கம்

வேங்கை வயலில் குடி தண்ணீரில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாறாக, எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அவர்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கிறது. வேங்கை வயல் பிரச்சினை வெளியில் வந்தபோது அங்குள்ள கோயிலுக்குள் தலித் மக்கள் செல்வதற்கு மறுக்கப்பட்ட விசயமும் வெளியே வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அந்த மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது அதைத் தடுக்க சாமியாடினார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டார்.

மக்களை ஏமாற்றும் மத்திய நிதிநிலை அறிக்கை 2023

ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை வழக்கம் போலவே அதிகமாக வாய்ச் சவடால் விடும் பாஜகவின் நிதிநிலை அறிக்கைதான். 2014ஆம் ஆண்டில் இருந்து பாஜக போட்ட நிதிநிலை அறிக்கைகளில் இவ்வாண்டும் புதிய விசயம் என்று சொன்னால், 'அமுத காலத்தில் 'சப்தரிஷிகள்' நம்மை வழிநடத்துகிறார்கள் என்ற வாக்கியம்தான். நிர்மலா சீதாராமன் வழக்கமாக வாசிக்கும் திருக்குறளையும் இந்த ஆண்டு காணவில்லை. 'அனைவருக்கும் வீடு', 'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு', 'உள்கட்டுமானத்தில் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' '2024க்குள் ஐந்து டிரிலியன் டாலர் பொருளாதாரம்' போன்ற இதுவரை எதுவும் நிறைவேற்றப்படாதவை, மீண்டும் காணப்பட்டன.

இமாச்சல், டெல்லி, குஜராத்திலிருந்து வரும் சமிஞ்கைகளும் பாடங்களும்

நிச்சயமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தத்தக்க பாஜகவின் குஜராத் வெற்றியின் அளவு தவிர, குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல், டெல்லியின் நகர்மன்ற தேர்தலின் முடிவுகள் எதிர்பார்ப்புக்கு இணங்கவே வெளிவந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களிலும் பாஜக தான் ஆட்சியில் இருந்த கட்சியாகும். தற்போது இரண்டில் அது ஆட்சியை இழந்துள்ளது. இந்த அர்த்தத்தில் பாஜக தோல்வியடைந்துள்ளது எனலாம். ஆனால் வாக்கின் பங்கு (52 சதத்திற்கும் மேல்), இடங்களின் பங்கு (85 சதத்திற்கும் மேல்) ஆகிய இரண்டு அளவுகளின் படி குஜராத்தில் அது பெற்ற வெற்றி அதன் தோல்வி மீது நிழலாக படிந்து அதனை மறைத்து விட்டது.

தோழர் என் கேவின் இறுதிப்பயணம்

கட்சி முழுவதும் தோழர் என்கே என்று அழைக்கப்பட்ட நீலகண்டன் நடராஜன் பிறந்ததிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பிள்ளைபட்டியில் அவரது உடல்அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமை நாளில்தோழர் என்கே திண்டுக்கல் மாவட்ட கட்சிஅலுவலகத்தில் 11 ஆவது கட்சிக் காங்கிரஸ் தயாரிப்புக்கான மாவட்ட கமிட்டிக் கூட்டத்தைநடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும் நேரத்தில் உடல் நிலை சரியில்லையென்று தோழர் என்கே சொன்னதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தோழர் என்கேவுக்கு வீரவணக்கம்

தோழர்களே,

இன்னும் சற்று நேரத்தில், தோழர் என்கே நடராஜன் என்று அறியப்படும் நீலகண்ட நடராஜனின் இறுதிப்பயணம் புறப்படவிருக்கிறது. நமக்கெல்லாம், கட்சி முழுவதற்கும் டிசம்.10 மிக மோசமானதொரு நாள்! இடியென இறங்கிய நாள்! கட்சியின் 11வது மாநில மாநாடு வெற்றிகரமாக திருச்சியில் நடந்து முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 13வது நாளி லேயே மாநிலச் செயலாளர் தோழர் நடராசன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இது மிகக் கொடுமையானது.

தோழர் என்கே: நினைவுகள் அழிவதில்லை

தோழர் என்கே மீது பலருக்கும் மிக உயர்ந்த மரியாதை ஏற்பட்டதற்குக் காரணம் அவர் மிகமிக எளிமையானவர். வாழ்நாள் முழுக்க மிகமிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து உதாரணமாக திகழ்ந்தவர். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர். அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர்களை போராட்டங்களில் அணிதிரட்டியவர் என்பது ஆகும்.

பிரியாவிடை தோழர் என். கே

நான் மட்டுமல்ல வேறு யாரும் கூட அதை நம்ப மறுப்பார்கள். ஆனால், அது திடீரென்று நடந்து முடிந்து விட்டது. நமது இதயத்தை சுக்குநூறாக்கும் உண்மை செய்தியாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கு தோழர்.என்.கே வின் நண்பர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கும் கூட. அதேபோல் நாட்டுப்புற, நகர்ப்புற தொழிலாளர்களுக்கு, பிரிக்கால் தொழிலாளர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள், திட்டத் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அவரை வெகுமக்கள் தலைவராகப் பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைக்காக நிற்கக்கூடிய தலைவராகப் பார்த்தார்கள்.

தோழர்.என்.கே.நடராஜன் அவர்களுக்கு செவ்வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக் கமிட்டி, தோழர் என்.கேவின் திடீர் மரணத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.

நீண்ட கால கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் என்.கே, தமிழக கட்சி வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சிப் பொறுப்புகளை முன்மாதிரியான கடப்பாற்றுடனும் விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வந்திருக்கிறார். அவரது 40 ஆண்டுகால நீடித்த கட்சி வாழ்க்கையில் அவர் தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடப்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பாளராக பல துறைகளிலும் பல மாவட்டங்களிலும் செயலாற்றி இருக்கிறார்.