கும்பமேளா துயரமும் மோடி - ஷா - யோகி ஆட்சியின் குற்றமும்

இப்போது பிரயாக்ராஜ் என்ற பெயரிலுள்ள அலகாபாத்தின் கங்கை, யமுனை நதிகள் கூடுமிடத்திலும் அதே போன்ற மற்ற இடங்களான ஹரித்துவார் உஜ்ஜைனியிலும் குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒருமுறை சாமியார்களும், இந்து மதத்தின் மீது நம்பிக்கையுள்ள சாதாரண மக்களும், இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளிலுள்ள ஆன்மீக அன்பர்களும் ஒன்றுகூடுவது, புனிதப் பயணம் சென்று வருவது என்பது பழங்காலந்தொட்டே இருந்து வரும்  பழக்கமாகும். ஆரம்பகால குறிப்புகள்படி கும்பமேளா ஒரு தத்துவார்த்த நிகழ்வாகும். ஆன்மீகச் சொற்பொழிவாலும் விவாதங்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் 'உண்மையான சுதந்திரம்' பற்றி ஆர்எஸ்எஸ் சொல்லும் தீய கதை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்  அரசே ராமர் கோயிலைக் கட்டி குடமுழுக்கும் நடத்தியது. அதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்தை வரையறுக்கும் தருணமாக விளங்குகிறது என மோகன் பகவத்தின் அறிக்கை விவரிக்கிறது. இதன் மூலம் தேசியவாதம், சுதந்திரம் பற்றிய ஆர்எஸ்எஸ்-சின்  பார்வை நினைவூட்டப்படுகிறது. இந்திய விடுதலை இயக்கத்தின் உண்மையான வரலாற்றுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் நேரெதிரானதாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

சீமானின் அரசியல்

ஸ்ரீலங்காவில்  அந்த நாட்டின் அரசின் வெளிப்படையான ஆதரவுடன் 1983ஆம் ஆண்டு  ஜூன், ஜூலை மாதங்களில் தமிழர்களுக்கு எதிராக நடந்த  இனக்கொலையை அடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அதற்கு முன்பே தமிழர்கள் மீது சிங்களர்கள் நடத்திய தாக்குதல்கள் இருந்தபோதிலும் மேற்சொன்ன நிகழ்வுதான்  தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு பெருகச் செய்தது. அந்த ஆண்டு முதலே பல்வேறு தமிழீழப் போராளிக் குழுக்களும் தமிழகம் வந்தன.

மார்கழி மக்களிசை, கர்னாடக இசை, சென்னை சங்கமம் கலைச் சங்கமத்தின் இசை ஒலியாய் மாறுமா?

தை 1, பொங்கல் நாளன்று சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் முரசடித்து தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலின் சிறப்புகளை மாபெரும் விழாவாகக் கொண்டாடுவது நோக்கம் என்று அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைப்பாக்கிய நிகழ்ச்சி இதுவாகும். தமிழகத்தின் பல்வகை கலைகளையும் ஒருங்கிணைத்துக் காண்கின்ற வாய்ப்பு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினை துரத்தும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்!

தினெட்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் தயாரிப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. 2019 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி ஈட்டிய ஸ்டாலின், தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்றவேண்டிய சவாலை சுமக்கிறார். தோல்வியை தொடர்ந்து சுவைத்து வரும் அதிமுக, வெற்றி பெறாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறி என்ற நெருக்கடியை எடப்பாடி சுமக்கிறார்! சட்டையை கழட்டிக்கொண்டு சாட்டையால் அடித்துக்கொள்ளும் பாஜக தலைவர் அண்ணாமலை, இது வெறும் டீசர்தான், போகப்போக இன்னும் தெரியும் என்று அச்சுறுத்துகிறார்!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; ஆளுநர் பதவியை ஒழித்துக் கட்ட வேண்டும்!!

இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலிருந்தும் ஆளுநர் ரவீந்திர நாராயண ரவி வெளியேறி விட்டார்! வழக்கம் போல், முதல் நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  தேசியகீதம் முதலாவதாக இசைக்கப்படவில்லை என்றுகூறி ஆளுநர் வெளியேறிவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முன் வைக்கும் அறிக்கையையே   சட்டப்பேரவையில் ஆளுநர் வாசிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிவிட்டார்.  இந்த ஆண்டு மட்டுமல்ல தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ரவி இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்.

Recognising Fascism in India: If Not Now, Then When?

Recognising Fascism in India: 

If Not Now, Then When? 

Ahead of the forthcoming 24th Congress of the CPI(M), an internal note issued by the party polit bureau, and widely reported in the media, has attracted more public attention than the draft resolution released earlier. The draft, in a couple of places, had used the expression 'neo-fascist characteristics' to describe the current political situation and the Modi government.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு: சாதனைகளும், பாடங்களும் சவால்களும்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு: 

சாதனைகளும், பாடங்களும் சவால்களும்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள்  குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்) கட்சிகள், 1925 டிசம்பர் 26 அன்று சிபிஐ ஒரு கட்சியாக தொடங்கப்பட்டதாக அங்கீகரிக்கின்றன.

2025 அய் பாசிச தாக்குதலுக்கெதிரான பெரும் வெற்றிகளைப் பெறும் ஆண்டாக மாற்றுவோம்!

பாலஸ்தீனர்களுக்கு எதிராக காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் நடந்து கொண்டிருக்க, 2024 பல நாடுகளில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக இருந்துள்ளது. நமது பிராந்தியத்தில், சிறீலங்கா அதன் வரலாற்றில், முதன்முறையாக ஒரு இடது சாய்வு கொண்ட ஆட்சியைக் கொண்டுவந்துள்ளது. பங்களாதேஷில் ஏற்பட்ட வெகுமக்கள் எழுச்சி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாட்டைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சமடைய வைத்துள்ளது; ஆனால், இங்கு பிற்போக்கு ஜமாத்-சார்பு சக்திகள் உறுதிப்பட்டிருப்பதால் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் வாய்ப்பு நிச்சயமற்றதாக உள்ளது.

அதானியின் லஞ்ச ஊழல்: அமெரிக்காவில் கைது செய்ய பிடி ஆணை! இந்தியாவிலோ நடவடிக்கையே இல்லை!

அதானி குழுமம் பல பில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையால் கௌதம் அதானி மீதும் அவரது மருமகன் சாகர் அதானி மீதும் கைது பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனஇது அதானியின் ஊழல் தொழில் நிறுவன பேரரசின் மீது இதுவரை தொடுக்கப்படாத மிகப்பெரிய தாக்குதலாகும்.