சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி
டில்லியில் ஓராண்டுக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது
ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM சார்பில், இன்று ஜனவரி 26.1.2023 வியாழன் மாலை 5 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் இருந்து டிராக்டர் பேரணி துவங்கியது. டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் அணிவகுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.