பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீட்டில் உள்  ஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு :

பட்டியல் இன மக்களின் இடஒதுக்கீட்டில் உள்  ஒதுக்கீடு வழங்குவது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு :

 சிபிஐஎம்எல் அரசியல் தலைமைக்குழு தீர்மானம்

 

தலித்துகள் மீது முடிவின்றித் தொடரும் வன்கொடுமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

தமிழ்நாட்டில், தலித்துகள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகள் நடந்துள்ளன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்குச் சில....

புதுக்கோட்டை வேங்கைவயல்

2022ம் ஆண்டு டிசம்பரில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கயவர்கள் மலம் கலந்தார்கள். குற்றவாளிகள் சாதியாதிக்க சக்திகள்தான் எனத் தெரிந்த போதும், தலித்துகளையே குற்றவாளிகள் ஆக்க முயற்சிக்கப் பட்டது. சிறப்பு புலனாய்வு, உயர்நீதிமன்ற புலனாய்வு எல்லாம் நடந்தும் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப் படவில்லை.