நிலக் கொள்ளையனுக்கு ஆதரவாக வருவாய் துறையும்நெடுஞ்சாலை துறையும்

சிபிஐ எம்எல் துணையுடன் எதிர்த்து நிற்கும் முள்ளிப்பள்ளம் கிராம மக்கள்

வைகையின் வலது கரையில்சோழவந்தானுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள கிராமம் முள்ளிப்பள்ளம்மிக செழுமையான வயல்வெளிகளும்நிலமும் முன்னர் பார்ப்பனர்களின் கையில் இருந்தன. இந்தியாவின் அரசியலில் பெருமளவு பேசப்பட்ட பார்ப்பனர்கள் இக்கிராமத்திலிருந்து புறப்பட்டுவந்தவர்கள்.

1960களுக்குப் பின்பு நிலம் பிற்பட்ட சாதி ஆதிக்க சக்திகளின் கைகளுக்கு மாறியதுதிராவிட அரசியல் வெற்றியின் பலனை அறுவடை செய்த பிற்பட்ட சாதிகளின் ஆதிக்க சக்திகள் கிராம அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டனர்.

முள்ளிப்பள்ளத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த மாரநாடன் என்பவர் தன் கையில் வந்து சேர்ந்த நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக ஒரு நாடக வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்மேலக்கால் முதல் பேரணை வரையிலான கிராமத்துச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும்  அதற்காக, 24 கி.மீ நீளமுள்ள சாலையில் முள்ளிப்பள்ளத்தில் உள்ள 800 மீட்டர் நீளத்துக்கு சாலையோரம் அமைந்துள்ள 128 வீடுகளை அகற்ற வேண்டும் என்றார். அந்த வீடுகள் அனைத்தும் சாலையோர ஆக்கிரமிப்புகள் என்று அவர் வழக்கில் தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு வீடுகளை இடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு நெருக்கடி கொடுத்தார்.

இப்பிரச்சனை மதுரை மாவட்ட கட்சியிடம் வந்தது. பகுதி மக்கள் கையில் இருந்த வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தபோது பெரும்பகுதி வீடுகள் பட்டாபதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டிருந்தன. நெடுஞ்சாலை சர்வே எண்ணைக் குறிப்பிட்டு பட்டா உள்ள வீட்டை  இடிப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற முறைகேடுகளைக் கண்டுபிடித்த கட்சிஜூலைஅன்று நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுக்குப் பின்பு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வருவாய் துறை ஆவணங்களின் குளறுபடிகளுக்கான ஆதாரங்களை அளித்தனர்.

இதற்கிடையில் வருவாய் துறையின் ஆவணத்தில் உள்ள தவறுகளை பளிச்சென்று காட்டும் ஆவணங்களைக்கொண்டஆர்வத்துடன் முன்வந்தவீட்டின் உரிமையாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் இடிப்புக்கு தடைகோரி வழக்குத் தொடர்ந்தனர்.

முள்ளிப்பள்ளம் குடியிருப்பாளர்கள் 15 07 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி இடிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.

பின்னர்வாடிப்பட்டி தாசில்தாரிடம் குளறுபடிகளுக்கு ஆதாரங்களை அளித்து வீடு இடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டதுஅதே நாள் காலையில் நெடுஞ்சாலை துறையின் இடிப்பு நோட்டீசின் மீதான நடவடிக்கையை இரண்டு வாரம் நிறுத்தி வைக்கும்படியும்அரசு தனது ஆவணங்களை அடுத்த அமர்வில் அளிக்க வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இருந்தாலும்மாவட்ட நிர்வாகம் இடிப்பு நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் செய்வதைக் கண்டு நீதிமன்ற உத்தரவைக் காட்டி மாவட்ட நிர்வாகத்தின் பல மட்டங்களிலும் ஆட்சேபணைகளைப் பதிவு செய்தோம். இருந்தாலும் 26 07 24 அன்று தடையாணைக்கு மனு செய்தவீடுகளை விட்டுவிட்டு 125 வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன.

அன்று மாலை ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசின் அத்துமீறலுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த மக்கள் தீர்மானித்தனர்நேர்மையான ஊடகங்களின் துணையோடு சட்டவிரோதமானநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வீடு இடிப்பு செய்தி பரப்பப்பட்டது.

தற்போதுஇடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்வருவாய் துறை ஆவணங்களின் குளறுபடி்களை் திருத்த வேண்டும்வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்நிலப்பறி கும்பலுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இயக்கம் தொடர்கிறது.

நமது விடாப்பிடியான முயற்சிகளினால் கட்சியின்பால் நேசம் கொண்ட மக்கள் 28 07 24 அன்று நடைபெற்ற தியாகிகள் தின மாநில ஊழியர் கூட்டத்திற்கு நிதி வசூல் செய்து அளித்தது மட்டுமல்லாமல், அவர்களின் முன்னணிகள் நிகழ்ச்சியின்போது வந்து கலந்துகொண்டு தேவையான பணிகளைச் செய்தனர்.

தற்போது 40க்கும் மேற்பட்ட வீடுகளின் ஆவணங்களைத் திரட்டிக்கொண்டு வருவாய் துறையின் பல பத்தாண்டு ஆவண மோசடிகளை அம்பலப்படுத்துவதற்கான சட்டபோராட்ட முயற்சிகள் முன்னேறிக்கொண்டுள்ளன.

நிலப்பறி கொள்ளையன் மற்றும் அவனது கூட்டத்திற்கு,, அவர்களுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள்அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிப்போம்நிலப்பறி கொள்ளையர்களை அம்பலப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு நமது கட்சி முன்னேறுகிறதுஇந்த இயக்கத்தைக் கட்டமைப்பதில் தோழர்கள் ஈஸ்வரி, மங்கையர்க்கரசிநளினிமுத்துராக்கு முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர் தோழர் மனோகரன்கட்சி உறுப்பினர்கள் பாண்டிக் கண்ணன்போதுமணிகார்த்திக், ஈஸ்வரன்அருண் உள்ளிட்டவர்கள் மிகப்பெரும் பங்காற்றினர்.