ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டம்  புதிய  மொந்தையில் பழைய கள்ளே!

நான்காம் பிரிவுதலித்பழங்குடியின ஊழியர் சமூக பாதுகாப்பிற்கு கேடு

மோடி3.0 அரசாங்கம்ஒன்றிய அரசு ஊழியர்களிடமோஓய்வூதியர் சங்கத்தினரிடமோ விவாதிக்காமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களைத் திசை திருப்பவும்  பிளவுபடுத்தவும் செய்யப்பட்ட அறிவிப்பாகும்.

  இந்த அறிவிப்பின் மூலம் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நடைபெறும் இயக்கத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக மோடி அரசாங்கம் நினைக்கிறதுமோடி அரசின்  புதிய தேசிய ஓய்வு ஊதிய திட்டத்திற்கு எதிராக கடுமையாகப் போராடியதால் அரசுக்கு ஒரு திருத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதுதேசிய  ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடும்போது அளவு ரீதியான மாற்றம் எதுவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இல்லைசொல்லப் போனால் ஊழியர்களின் உரிமையான பழைய ஓய்வூதிய திட்டத்தின் மறுப்பே  இது ஆகும்அதாவது பல பத்தாண்டுகளாக அரசுக்குச் சேவை செய்த ஊழியர்களுக்கு பலன்களைக் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டத்தை இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஈடு கட்டாதுபழைய ஓய்வூதிய திட்டத்தில் வரையறுக்கப்பட்ட  பலன்கள் உள்ளனஓய்வூதியத்திற்காக அரசு ஊழியர்கள் பங்களிப்பு எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லைமேலும் நீதிமன்றங்கள் ஓய்வூதியம் என்பது கொடுபடா ஊதியம் என வரையறை செய்து தீர்ப்புகள் வழங்கி உள்ளன.

 தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கும்  ஊழியர்  தொடர்ந்து அவருடைய சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பத்து விழுக்காடு செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதுதற்போது பணி இறுதியின் போது ஊழியர்களுக்கு  வழங்கப்படும் இறுதிப் பலன்கள் தொடர்பான புதிய அறிவிப்பு அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.   மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த வருங்கால பொது வைப்பு நிதி பலன்களை ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் பறித்துவிட்டது.

 இன்னமும் கூட ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நிதிச் சந்தையுடன் இணைக்கப்பட்டு இருப்பதால் என்னதான் அரசு வாக்குறுதி அளித்தாலும் சந்தை அதிர்வுகளுக்கு ஏற்ப ஊசலாட்டம் இருக்கத்தான் செய்யும்..

முழு ஓய்வூதியம் பெறும் சேவை ஆண்டுகள் 20ல் இருந்து 25 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு இருப்பதும் பகுதி ஓய்வூதியம் பெற  சேவை ஆண்டுகளுடன் ஊழியர்களின் பங்களிப்பும் இணைக்கப்பட்டுள்ளதால் தினக்கூலி ஊழியராக இருந்து காலம் கடந்து  பணி நிரந்தரம் பெறும் ஊழியர்களும்அரசமைப்புச்  சட்டப்படி வயது தளர்வுள்ள தலித்பழங்குடி ஊழியர்களும்முன்னாள் ராணுவ வீரர்களும் ஓய்வூதியம் குறைவாகவே பெற்றிடும் அபாயம் ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது.   

 ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் தேசிய ஓய்வூதிய திட்டம் போல் ஓய்வூதியத்தை ஒரு சலுகை என்ற வகையில் நிராகரிக்கிறதுஅது விகிதாச்சார ஓய்வூதியமாகவே உள்ளதுஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை அப்பட்டமாக மீறி இருப்பதுடன் அரசமைப்புச் சட்டத்தையும் மீறுவதாகவே உள்ளது.

அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் முழுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றேபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீட்டெடுக்கபோராட்டங்களைத் தீவிரப்படுத்திட அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியூஅனைத்து பகுதி தொழிலாளர்களையும் அறைகூவி அழைக்கிறது.