ஏரியைக் காக்கும் போராட்டம்

31.12.2021 அன்று தருமபுரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏஐகேஎம், சிபிஐஎம்எல் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்- தருமபுரி வரை 6 வழிச்சாலைக்காக கார்பரேட் முதலாளிகளின் நலனுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. லட்சகணக்கான வீடுகள், மரங்கள் அழிக்கப்படுகிறது. வழி நெடுக ஏரிகளில் கிராவல் (நொரம்பு) மண், மணல் அள்ளப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் நீர் சேமிப்பு அழிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் தலையிட்டு ஏரியில் மணல், கிராவல் (நொரம்பு) எடுப்பதை நிறுத்தினார்கள். தோழர்கள் கோவிந்தராஜ், முருகன் உரையாற்றினர்.