மோடியின் துரோகத்தைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
விவசாயிகளின் எழுச்சிகரமான போராட்டத்தின் முன்னால் மண்டியிட்ட, மோடி அரசாங்கம் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. அதைத் தொடர்ந்து, குறைந்த பட்ச ஆதார விலை உறுதிச் சட்டம், உயிர் நீத்த 700க்கும் மேலான விவசாய தியாகிகளுக்கு நினைவிடம், அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு போன்ற வாக்குறுதிகள் பற்றி பேசி முடிவு செய்து அறிவிப்பதாக எழுத்து பூர்வமாக அறிவித்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் துரோகம் செய்கிற மோடி அரசை கண்டித்து 31.1.2022 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபாவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் சந்திரமோகன் கண்டன உரையாற்றினார்.