தேசத்தைக் காப்போம்! மக்களைக் காப்போம்!

அனைத்து சாலைகளும் 2022 மார்ச் 28, 29

48 மணி நேர வேலை நிறுத்தத்தை நோக்கி..

தொழிலாளர்கள் ஆதரவுடன் நடைபெற்ற வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தால் மோடி அரசு சட்டமாக்கிய விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னணியில் தொழி லாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்யக் கோரியும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு, தேசிய பணமாக்கத் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயரிலும் அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு பணி நிரந்தரம் அதுவரை சம வேலைக்கு சம ஊதியம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது, திட்டத்தை நகரப்புறப் பகுதிக்கும் விரிவாக்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 28, 29 இரு நாட்கள் மார்ச் 28, 29 நடத்த மத்திய தொழிற்சங்கங்களும் துறைவாரி சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்திருக்கின்றன. வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்ட, மண்டல மாநாடுகள், ஆலை வாயிற் கூட்டங்கள், மக்கள் மத்தியில் பிரச்சாரம், வர்த்தகர்களின் ஆதரவை கோருதல், கூட்டாக வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குதல், மார்ச் 22 அன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பல மையங்களில் ஆர்ப்பாட்டம், மார்ச் 28 வேலை நிறுத்தத்தின் முதல் நாளன்று மறியல் போராட்டம், மார்ச் 29 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம், 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களின் முழு பங்கேற்பை உத்திர வாதம் செய்வது  ஆகியவற்றை அட்டவணைப் படி செயல்படுத்துவது என தமிழ்நாடு மாநில அளவில் கூடிய கூட்டுக் குழு கூட்டம் முடிவு செய்திருக்கிறது.

அதனடிப்படையில் மாவட்டங்கள் தோறும் மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. அதுபோல் திட்டமிட்டபடி திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை மண்டல மாநாடுகளும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பங்கேற்பு டன் நடந்து முடிந்துள்ளன. 16.3.2022 அன்று புதுச்சேரியில் வேலை நிறுத்த தயாரிப்பு அனைத்து சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 15.3.2022 அன்று கூடிய ஏஐசிசிடியு மாநில செயற்குழு வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய உறுதி பூண்டது.

வேலைநிறுத்த தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கும்போதே மோடி ஆட்சி அடுத் தடுத்த தாக்குதல்களை தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழக பங்கு விற்பனை அறிவிக்கப் பட்டுள்ளது.

 எல்ஐசி பங்கு விற்பனை என்பது, வீட்டின் பண தேவைக்காக பணம் காய்க்கும் மரத்தை வெட்டி விற்பதற்கு சமமானதாகும். சண்டிகர் யூனியன் பிரதேச மின்சாரத் துறை 871 கோடிக்கு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த குறி பாண்டிச்சேரி யூனியன் பிரதேச மின்துறையாக உள்ளது. மின் துறை தனியார்மயத்திற்கு எதிராக தொழிலாளர்களும் தனியார்மயமானால் கடும் மின் கட்டண உயர்வு இருக்கும், இலவச மின்சாரம் ரத்தாகும் என உணர்ந்த மக்களும் சண்டிகரில் ஒன்றிணைந்து போராடி வருகின்ற னர். வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.5% லிருந்து 8.1% மாக குறைக்கப்பட்டுள்ளது.

சேமிப்புகள் பணப்புழக்கமாக வெளியில் வந்தால் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற  காரணத்தை வருங்கால வைப்பு நிதி விசயத்தில் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. யுத்த மேகங்கள் சூழ்ந்திருக் கக்கூடிய பின்னணியில், கச்சா எண்ணெய் பீப்பாய் 120 டாலரை தாண்டுகிற சூழலில் தொழிலாளர்கள், மக்கள் மீது அடுத்த சுற்று தாக்குதல் வர இருக்கிறது.

விவசாயச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் எப்படி பஞ்சாப் முன்மாதிரி பங்காற்றியதோ அதுபோல் தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகள் எதிர்ப்புப் போராட் டத்தில் தமிழ்நாடு முன்மாதிரி பங்காற்ற வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் மாநாடுகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் ஏஐசிசிடியு மாநில சிறப்பு தலைவர் தோழர் இரணியப்பன் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் 14.2.2022 அன்று சந்தித்தனர். மார்ச் 28, 29 வேலை நிறுத் தத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு சாதகமாக பதில் வினையாற்ற வேண்டிய நேரம் இது.

ஒன்றிய மோடி ஆட்சியின் கொள் கைகள் தொழிலாளர்களை மட்டுமல் லாது சமூகத்தின் பிற பிரிவினரான விவசாயத் தொழிலாளர்கள், விவசா யிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் பாதிப்புக்குள் ளாகும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையாகவும், மதவெ றியை உசுப்பி விட்டு மக்களை பிளவு படுத்தும் கொள்கையாகவும் மாநில உரிமைகளை பறிக்கும் பன்மைத்து வத்திற்கு எதிராக ஒற்றைத் தன்மையை திணிக்கும் பாசிச கொள்கையாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களையும் வீச்சாக அணிதிரட்ட வேண்டிய கடமை புரட்சிகர சக்திகளின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஆலை சக்கரங்கள் ஓடாது, போக்குவரத்து ஸ்தம்பிக்கும், வணிக நிறுவனங்கள் இயங்காது என்ற நிலையை ஏற்படுத்தி மக்கள் பங்கேற்புடன் வெற்றி பெறச் செய்வோம்.