பாஜகவின் இந்தித் திணிப்பு நிகழ்ச்சி நிரல்
உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப் பதற்காக மீண்டும் ஒருமுறை வேண்டு மென்றே வாதிட்டிருக்கிறார். அதிகாரபூர்வ மொழி பற்றிய நாடாளுமன்றக் கமிட்டியின் தலைவர் என்ற முறையில் அந்தக் கமிட்டி உறுப்பினர் களிடையே பேசும்போது, நாட்டின் 'ஒற்றுமைக்கு' இந்தி அவசியம் என்றும் அதனால் இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக ஆக்க வேண்டுமென்று பேசியுள்ளார். ஒன்றிய அமைச்சரவையின் 70 விழுக்காடு தகவல் பரிமாற்றங்கள் தற்போது இந்தியிலேயே நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணிக்கும் நிகழ்ச்சிநிரல், 2014 முதலாய் மோடி ஆட்சி முன்தள்ளிவரும் இந்தி-&இந்து&-இந்தியா எனும் ஆர்எஸ்எஸ்-&பாஜகவின் பெரிய மனுதர்ம நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இந்தியா முழுவதுமுள்ள எதிர்கட்சிகளும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் திட்டவட்டமான விதத்தில் இந்தித் திணிப்பை நிராகரித்து வருகிற போதிலும் ஆர்எஸ்எஸ்-&பாஜக இவ்வாறு செய்து வருகிறது.
மோடி ஆட்சி, ஒன்றிய அமைச்சகங்கள், துறைகள், கார்ப்பரேஷன்கள், வங்கிகள் இவற்றின் சமூக ஊடக கணக்குகளை நடத்து வதில் இந்திக்கு முன்னுரிமையளிக்க வேண்டு மென கேட்டு வருகிறது. இந்தியில் பேசுமாறு பாஜக தலைவர்களை கேட்டு வருகிறது; அய்நா சபையில் இந்திக்கு அதிகாரபூர்வ தகுதி பெற முயன்றும் வருகிறது; இவ்வாறாக, இந்திதான் இந்தியாவின் தேசியமொழி என்று பொருள் படுத்திவருகிறது; தென் மாநிலங்களில் உள்ள மைல் கற்களில் உள்ள ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை கொண்டுவர முயற்சிக்கிறது; இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் தற்போதுள்ள இருமொழிக் கொள்கைக்குப் பதிலாக மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவரும் முன்மொழிதலைக் கொண்டுவர முயன்று வருகிறது. இந்த முயற்சிகளில் மோடி ஆட்சி மீண்டும் மீண்டும் பின்வாங்க நேரிட்டபோதும் ஒட்டுமொத்த நாட்டின் மீதும் இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏனெனில், இது ஆர்எஸ்எஸின் கருவான நிகழ்ச்சி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை, 22 மொழிகளை தேசிய மொழி களாக அங்கீகரித்திருக்கிறது என்பது சுட்டிக் காட்டப் படவேண்டும்; அதே வேளை இந்தியும் ஆங்கிலமும் அதிகாரபூர்வ மொழி என்ற சமதகுதி கொண்டவை என்பதும் அங்கீகரிக்கப்பட்டிருக் கிறது. மேலும் (சட்டவழியில் அல்லாது) நடை முறையில் அதிகாரபூர்வ தகவல் தொடர்புக்கு இந்திமட்டுமே எனதாக்க முயற்சிப்பது அரசமைப்பு சட்ட உணர்வுக்கு எதிரானது.
அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் சமஸ்கிருஸ்தமயமாக்கப்பட்ட இந்தி வடிவம், இந்தி பேசும் பகுதிகள் என்று சொல்லப்படும் பகுதிகளில் பொதுவாக பேசப்படும் தாய்மொழியைப் போலல்லாமல், மாறாக அது ஒரு வகையான இணைப்பு மொழியாகவே இருந்து வருகிறது. தென்னிந்திய மாநிலங்கள், அசாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் எப்படி ஆங்கிலம் இணைப்பு மொழியாக பயன்படுத்தப்படுகிறதோ அதுபோல் பயன்படுத்தப்படுகிறது என்பதும் வலியுறுத்தி சொல்லப்படவேண்டிய ஒன்று. நன்கறியப்பட்ட வரலாற்றாசிரியர் அலோக் ராய் கூறியிருப்பது போல, இந்தி பேசும் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இந்தித் தேர்வில் பெரும் எண்ணிக்கையில் தோல்வியடைவதென்பது அங்குள்ள மாணவர்களின் தாய்மொழியை இந்தி களவாடிவிட்டது என்பதற்கான வலுவான சாட்சியமாகும்; வட இந்திய மாநிலங்களில் கூட இந்தி ஒருவிதமான ஏழைகளின் ஆங்கிலமாகவே- அதாவது அதிகாரம், மேல்நோக்கிய நகர்வு ஆகியவற்றின் மொழியாகவே கருதப்படுகிறது என்பது ராய்&ன் வாதமாகும்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியான மொழியில் அனைத்து ஆவணங்களைப் பெறுவது அவர்களது உரிமையாகும். நடைமுறையில், ஒன்றிய அரசாங்கம் ஆவணங்கள், சட்டங்கள், படிவங்கள் இன்ன பிறவற்றை இந்தியிலும் ஆங்கிலத்திலும் உருவாக்குகிறது. மாநில அரசுகள், அவற்றை மாநிலங்களுக்குரிய குறிப்பான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து கொள்கின்றன. இந்தி பேசாதவர்களின் தொண்டை களுக்குள் இந்தியை திணிப்பது ஒற்றுமையை உருவாக்காது பாகுபாட்டையே உருவாக்கும்.
இந்தி மேலாதிக்கம், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், மற்ற வடகிழக்கு மாநிலங்களுடையது மட்டுமல்ல, போஜ்புரி, மைதிலி, மகாஹி, அவாதி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலுள்ள இன்னும் பிற மொழி பேசுகிறவர்களுக்கும் உரியது என்பதும் முக்கிய மானது. இந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தி கவிஞர் தூமில், 1965ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து ‘உனது தமிழ் வலி/ எனது போஜ்பூர் வலியின் சகோதரன்’ என்று எழுதினார்.
சோவியத் ஒன்றியம் முழுவதும் ருஷ்ய மொழியை கட்டாயமாக்குவது என்ற முன் மொழிதல்கள் வந்தபோது, அது பற்றி லெனின் கூறிய கருத்துரைகள் நினைவு கூறத்தக்கது. "குண்டாந்தடி கொண்டு மக்களை சொர்க்கத் திற்குள் விரட்டுவதை நாம் விரும்புவதில்லை; "கலாசாரம்" பற்றி நேர்த்தியான சொற்கள் சொல்லப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, கட்டாய அதிகாரபூர்வ மொழியென்பது குண்டாந் தடியை பயன்படுத்துகிற பலவந்தமாகும். இந்த "பலவந்தப்படுத்தும் கூறு" தான் ஒட்டுமொத்த நாட்டின்மீதும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை திணிக்கும்படி பாஜகவை ஆட்டிப் படைத்து இயக்கும் சக்தியாகும்.
இந்தியத்தன்மை, ஒற்றுமை என்பதை பாஜக ஒருபடித்தன்மையோடு சமப்படுத்துகிறது, மொழியில் மட்டுமல்ல உணவு, நம்பிக்கை, அரசியல், கருத்தியல் விசயங்களில் கூட அது ஒருபடித்தன்மையை கோருகிறது. இந்திய மக்கள், இந்தியாவின் பல்வகைப்பட்ட மொழி, கலாசாரங்கள், உணவு, நம்பிக்கைகள், கருத்தியல்களைப் பாதுகாக்க, பாஜக வின் பாசிச திட்டமான ' ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு நம்பிக்கை, ஒரு கருத்தியல்' என்பதை எதிர்த்துப் போராடியாக வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியில் பள்ளிக்கல்வி பெறுகிற உரிமையை நாம் அறுதியிட வேண்டும்; வட இந்திய பள்ளிகளில் நடுநிலை, உயர்நிலை வகுப்புகளில் விருப்பத்தேர்வு பாடமாக ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுகு, உருது மற்ற பிற மொழிகளில் கல்வி வழங்க வேண்டு மென்று கோர வேண்டும்; மேலும் இந்தியை விட தகுதிக் குறைவானதாக ஆக்கப்படாமல் ஆங்கிலமும் இணைப்பு மொழியாக பயன்படுத்து வதை உறுதி செய்ய வேண்டுமென்பதையும் கோர வேண்டும்.
எம்எல் அப்டேட் (12-18 ஏப்ரல், 2022) -- தலையங்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)