வண்டலூர் உயிரியல் பூங்காவை தனியாருக்கு தாரை வார்க்காதே!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவை தனியாருக்குத் தாரை வார்க்கும் அரசின் முடிவுக்கு எதிராக அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தினை வாழ்த்தியும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் ஏஐசிசிடியு தமிழ்நாடு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன் உரையாற்றினார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றுவதற்கு அரசு முயற்சிக்கிறது. இது மறைமுகமாக தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இதை ஏஐசிசிடியு வன்மையாகக் கண்டிக்கிறது.