செப்டம்பர் 15, 2022 ஆம்பூர் வாணியம்பாடி புளோரின் யுனிஸ்கோ தொழிலார்களின் வாழ்வாதரத்திற்கு நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தோழர் சுகுந்தன் தலைமையில், தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சதிஸ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AICCTU மாநில சிறப்பு தலைவர் சொ.இரணியப்பன், மாநில செயலாளர்கள் திருநாவுக்கரசு, U.அதியமான், AIPWA மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி மற்றும் CPIML மாநில செயலாளர் NK நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்புரையாற்றினர்.
மேலும் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரி தலைமை செயலகத்தில் தொழிலாளர் அமைச்சரின் செயலாளரை சந்தித்து மணு கொடுத்தனர்.