கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது. இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர் பாளர் ஒருவர் இந்தப் படத்தை மதிப்பிழந்த கதையா டலை முன்தள்ளும் விரோத பரப்புரை என்றும் இது காலனிய மனோபாவத்தால் உந்தி தள்ளப்படுகிறது என்றும் விவரித்தார். சமூக ஊடகத்தளங்களில் இந்தப் படத்தை வெளியிடு வதற்கு எதிரான தடை உத்தரவு 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் விதி எண் 16ன் படி அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி வெளியிடப் பட்டிருக்கிறது.

2002ல் குஜராத்தில் இனப்படுகொலை நடந்த போது உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. அதிர்ச்சிக்குள்ளான இந்தியா, 2004 இல் பாஜக வை ஆட்சியிலிருந்து அகற்றியது. 2004 தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் 2002 குஜராத் பெரும் பங்காற்றியது. சுதந்திர இந்தியாவின் அதிர்ச்சிகர மான, பயங்கரமான வெகுமக்கள் படுகொலை குஜராத்தில் நிகழ்ந்தது. அப்போது அம்மாநில முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் காரணமாகவே கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் 2014 இல் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரி ஆகிற வரை அவருக்கு நுழைவு அனுமதி (விசா) வழங்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இப்போது குஜராத் படுகொலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து விட்டது என்பது உண்மைதான். நரேந்திர மோடி மீது வழக்கு தொடுக்க வெளிப்படையான எந்த ஆதாரமும் இல்லை தான். 2014, மே மாதம் முதல் இந்தியாவின் பிரதம மந்திரியாக மோடி இருப்பதும் உண்மைதான். அதனால் குஜராத் 2002 பற்றி இனிமேல் உலகத்தில் யாரும் பேசக்கூடாது என்றாகி விடுமா?

உண்மையிலேயே 2002 குஜராத் படுகொ லைகள் தான், குஜராத் மாதிரியின் கருவான அம்சம் என்று பாஜக ஏராளமான அளவு தெளிவுபடுத்தி விட்டது. குஜராத்தின் நீடித்த அமைதிக்கு படுகொலைகள் எப்படி உதவின என்று 2022 இல் அமித்ஷா கூறினார்.பில் கிஸ்பானுவை த டி வன்புணர்வு செய்ததால் க்கப்பட்டவர்களை, அவர் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்தவர்களை விடுவிப்பதற்கான நாளாக 75 வது சுதந்திர தினத்தை பாஜக தேர்ந்தெடுத்தது. சிறையில் இருந்து வெளிவந்த அவர்களுக்கு கதாநாயகர் களுக்குரிய வரவேற்பு அளித்து கௌரவித்தது. குஜராத் 2002ஐ அதன் கோரமான அத்தனை விசயங்க ளுடனும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பிபிசி ஆவணப்படம் அதையே தான் செய்திருக்கிறது. 2002ல் பிரிட்டிஷ் தூதராக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட உள்மட்ட புலனாய்வு அறிக்கை இன அழிப்புக்கான எல்லா அடையா ளங்களும் இருந்ததை கண்டுணர்ந்திருக்கிறது. மோடியை நேரடியாக பொறுப்பாக்கியிருக்கிறது. பிபிசி ஆவணப்படத்திற்கு மோடி அரசாங்கம் கோப ஆவேசத்தை வெளிப்படுத்திய பிறகு, அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேக் ஸ்ட்ரா, கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் அந்த அறிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். சொல்லப்போனால், கோத்ராவை காரணமாக வைத்து நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதலே குஜராத் படுகொலை என்று கேரவன் பத்திரிகை இப்போது வெளிப்படுத்தி உள்ள அறிக்கையின் முழு தொகுப்பும் தெரிவிக்கிறது.

இந்தப் படத்தின் வலுவான அம்சம் என்னவென்றால், அதில் நரேந்திர மோடியும் இடம் பெற்றிருப்பது தான். ஒரு பேட்டியின் போது அவர் பேட்டி எடுத்த பெண்மணியை அச்சுறுத்தும் வகையில் பார்த்துவிட்டு, சூழலை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது என்று இழிவான ஒரு கூற்றை கூறினார். ஊடகங்களோடு கலந்துரை யாடுவதை தவிர்க்கும் கலையை கற்றுக்கொள்ளாத ஆரம்ப கட்ட நாட்களாக மோடியின் அந்தக் காலகட்டம் இருந்தது. அந்தப் பேட்டியின் போது அவர் செய்து கொண்ட ‘சுய விமர்சனம்' என்பது அரசாங்கத்திற்கு ஊடகங்களை சரியாக கையாளத் தெரியவில்லை என்பதுதான். அதுவரை பாஜகவுக்கு ஊடகத்தின் மீது மொத்தக் கட்டுப்பாடு இருந்திருக்கவில்லை. குஜராத் படுகொலை பற்றிய உண்மையை மறைக்க முடியவில்லை. அதற்குப் பிறகு ஒன்றிய மோடி அரசு கண்காணிக்கும் ஊடகம் என்ற ஒன்று இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டது. 2002 குஜராத் சம்பவத்தின் போது ஊடகங்களை கையாளத் தவறிவிட்டோம் என்று ஒப்புக்கொண்ட மோடி, மைய நீரோட்ட ஊடகத்தை மோடி அரசாங்கத்தின் ஊது குழலாக மாற்றி அமைப்பது, சங்கடமான கேள்விகளை தவிர்ப்பதற்காக ஒட்டுமொத்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பையே தவிர்ப்பது என இரண்டு சரிப்படுத்தும் பாடங்களை இப்போது கற்றுக் கொண்டார்.

சில நாட்களுக்கு முன்புதான் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எப்படி மோடி எல்லா வகையிலும் ஊக்குவித்து தன்னுடைய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார் என்று பார்த்தோம். இப்போது பிபிசி ஆவணப்படத்தை பிரச்சாரத்திற்கான படம் என்று முத்திரை குத்தி தனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவின் சமூக வலைத்தளங்களில் தடை செய்திருக்கிறார். அதற்குப் பின்பும் இணையதளத் திலோ அல்லது தங்களது எண்மய கருவிகளிலோ பார்க்கும் மக்களை இந்த அரசு பலவந்தமாக தடுக்க விரும்புகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படம் திரையிடப்படு வதையும் பார்ப்பதையும் தடுப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஏபிவிபி யினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இந்த அரசாங்கம் காலனிய ஆட்சியாளர்கள் செய்தது போலவே அதிகரித்த அளவில் கொடூர சட்டங்கள் கொண்டு மாற்றுக் கருத்தை ஒடுக்குவதையும், குடிமக்களின் ஒவ்வொரு சுதந்திரத்தையும் முடக்குவதையும் செய்து கொண்டிருக்கிற அதே வேளையில், இந்த ஆவணப்படம் பிபிசி யில் ஒளிபரப்பப்பட்டது என்பதனாலேயே அதை காலனிய மனோபாவ த்தால் உந்தித் தள்ளப்பட்டது என்று அழைக்கிறது.

இனப்படுகொலை குற்றங்களுக்கு ஒருபோதும் வெள்ளைச் சாயம் பூச முடியாது. உண்மை எப்போதுமே திரும்ப வந்து குற்றமிழைத்தவர்களை விரட்டி அடிக்கும். அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாடு விதித்து, தற்காலிகமாக படத்தை தடை செய்யலாமே ஒழிய, உண்மையை எல்லா காலத்திலும் மூடி மறைத்திட முடியாது.