திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டுகளும்,

இடது ஜனநாயக மாற்றின் தேவையும்

                 -மு.இராமச்சந்திரன்

"தலை சிறந்த மூன்றாண்டு; தலை நிமிர்ந்த தமிழ்நாடுஇது சொல்லாட்சி அல்லசெயலாட்சி!" என்று முதல்வர் பெருமை பேசுகிறார்ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியோடுகடந்த கால ஜெயலலிதாஎம்.ஜி.ஆர்  ஆட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர் பேசியிருக்கக் கூடும்அல்லது அவரின் முன்னவர்களான அண்ணா, கருணாநிதி ஆட்சியைப் போல சில முற்போக்கான முதலாளித்துவ சீர்திருத்தங்களை, சேம நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்பட்டிருக்கலாம். ஆனால் மக்களின் விருப்பங்கள்எதிர்பார்ப்புகள்தேவைகளின்  அடிப்படையில் பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தோழி விடுதித் திட்டம்விடியல்  பயணத் திட்டம்புதுமைப் பெண் திட்டம் என பெண்களுக்கான நலத் திட்டங்களை வரிசையாக அடுக்குகிறார்கள். சரிதான்.

கிராமப்புரங்களில் பெண்கள் பெருமளவில் வேலை செய்யும் ஊரக  (குடும்பத்திற்கு நூறு நாள்வேலைத் திட்டத்தில், (நபருக்கு) 200 நாட்கள் வேலை, ₹600 கூலி என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டுவருகிறது. திமுகதேர்தலில் கொடுத்த வாக்குறுதியான (குடும்பத்திற்கு) 150 நாட்கள் வேலை என்பதைக் கூட இன்னும் நிறைவேற்றத் தயாராக இல்லை. ₹600 கூலி என்பதை திமுக கருத்தளவில் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ₹300 கூலி என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதிஉடல் உழைப்பு பற்றிய இழிவான சநாதனப் பார்வையும்குலக்குகளின் (கிராமப்புர முதலாளிகளின்நலனும்தான் இதில் வெளிப்படுகிறதுஇந்தப் பார்வையைக் கைவிடாமல்இந்த நிலையை மாற்றாமல் டெங்கு, மலேரியாவைப் போலசநாதனத்தை  ஒழித்துக்கட்டுவது     எப்படி? என்ற ரகசியத்தை உதயநிதி தான் நமக்குச் சொல்ல வேண்டும்.

நகர்ப்புரங்களில்  வேலை செய்யும் அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள்கடும் உழைப்புச் சுரண்டலுக்கும்பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்இதைத் தடுக்க வலுவான தொழிலாளர் நலச் சட்டங்களும் இல்லைஇருக்கிற சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லைஅல்லது முதலாளிகள் விருப்பப்படி திருத்தப்படுகின்றன. 90% பெண்களாக உள்ள ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு, தொடக்கத்தில் அகவிலைப்படி ₹8130 என இந்த அரசு அறிவித்துவிட்டு, அதை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்துவிட்டு, இப்போது இறுதியாக ₹4070 என பாதியாகக் குறைத்திருக்கிறது. சொல்வதைச் செய்வோம் என்ற திமுகவின் முழக்கத்திற்கு முன்னால்  முதலாளிகள் என்ற சொல் ஒளிந்திருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

பெண்கள் தங்கள் வாழ்க்கை இணையரை, சாதிமதம் கடந்து சுதந்திரமாகத் தாங்களே தேர்வு செய்துகொள்ளும்போது ஆணாதிக்கசாதிமதவெறி சக்திகள் ஆணவப் படுகொலைகளை நடத்துகின்றனஇதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என மிக நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டுவருகிறதுபெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகஅம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த திராவிட மாடல் அரசுபெரியார்அம்பேத்கர் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் செல்லகோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து  நூல்கள் வெளியிடத் தயாராக இருக்கும் ஓர் அரசுபெரியார், அம்பேத்கர் லட்சியக் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றத்  தயங்குவது ஏன்தங்கள் சுரண்டல் நலனுக்காகஆணாதிக்க சாதியக் கட்டமைப்பை பாதுகாக்க விரும்பும்  பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதிகளிலிருந்து எழுந்து வந்திருக்கிற குலக்குகள் நலன்களுக்கு இந்த  அரசு முன்னுரிமை அளிப்பதாலா?

ஈடில்லா ஆட்சிஇரண்டாண்டு ஆட்சிநடைபெற்ற காலத்தில்தான் தமிழ்நாட்டை வெட்கித் தலை குனிய வைக்கும் வேங்கை வயல் கொடிய நிகழ்வு நடந்தது.

குற்றம் நடைபெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும்இந்த அரசால் இன்னும்  குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. ஒருவேளை  விரும்பவில்லையோதலித் வன்கொடுமை வழக்குகளிலோபாலியல் வன்கொடுமை வழக்குகளிலோ குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்பதே விதியாக இருக்கிறது. விதிவிலக்காக சில குற்றங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் இடதுஜனநாயக அமைப்புகள்சமூக செயற்பாட்டாளர்களின் விடாப்பிடியான போராட்டங்கள்தான் முக்கிய காரணமே தவிர அரசின் பாத்திரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லைமரக்காணம்மதுராந்தகம் நச்சு சாராய சாவிலிருந்துதான் திராவிட மாடலின்  தலைசிறந்த மூன்றாண்டு துவங்கியது. நான்காம் ஆண்டு இன்னும் கொடிய கருணாபுரம் நச்சு சாராய சாவுகளுடன் துவங்குகிறது.

2021 சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கை படிப்படியாக  நடைமுறைப்படுத்த திமுக  வாக்குறுதி தந்திருக்கிறதுஆனால்டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்குவதில் முனைப்பாக இருக்கிறதே தவிர மக்கள் இயக்கங்கள், குறிப்பாக பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கும் முழு  மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் இல்லை.

காலை உணவுத் திட்டம்நான் முதல்வன் திட்டம்தவப்புதல்வன் திட்டம் என மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகிறதுவரவேற்கத் தக்கவைதான்ஆனால் ஆரம்பப் பள்ளிகளிலிருந்து கல்லூரிகள் வரை பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றனஉள்கட்டமைப்பு வசதிகளும் போதுமானதாக இல்லை. கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து இந்தப் பிரச்சனைகளையெல்லாம் சரி செய்து, கல்விச் சூழல் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்அனைவருக்கும் கல்விஅனைவருக்கும் வேலை என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று சொல்லிக்கொண்டாலும்தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமையாகவோகட்டணமில்லாக் கல்வி என்பதாகவோ இல்லை. ஒன்றிய அரசின்எளிய வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கிற, குலக்கல்வியைத் திணிக்கிறகார்ப்பரேட் ஆதரவுபிற்போக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பும்  இன்னும் கைகூடவில்லைமாறாக இந்த முயற்சியில் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதைப் பொறுத்தவரை 3.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்கூடுதலாகலட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும்ஆக மொத்தம் 5.5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று திமுக தேர்தலில் வாக்குறுதியளித்திருந்தது.

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் விதி 110-ன் கீழ் முதல்வர் அளித்த அறிக்கையில் கடந்த மூன்றாண்டுகளில் 65,483 இளைஞர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டதாகவும்எதிர்வரும் இரண்டாண்டுகளில் இன்னும் கூடுதலாக 76,803 அரசு வேலைகள் வழங்கப்படும் என்றும்  சொல்லப்பட்டிருக்கிறதுஆக மொத்தம் 1,42,286 பணியிடங்கள்தான் நிரப்பப்படும். ஆகலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாது. 2 லட்சம் புதிய அரசு பணியிடங்களும் உருவாக்கப்படாது;

எனில் ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதியின் நிலையை ஊகிப்பதில் சிரமம் ஏதும் இருக்காது.

விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதிக்குத் துரோகம் இழைக்கும் வகையில் நேரெதிராக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் - 2023   கொண்டுவந்திருக்கிறது.

வீட்டுமனைவீடு, பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் என்பது கிராமப்புரநகர்ப்புர வறியவர்களின் உயிராதாரமான பிரச்சனையாக இருக்கிறதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உகந்த வகையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாழ்விடங்களிலிருந்து மக்களைக் கண்மூடித்தனமாக வெளியேற்றுவதன் மூலம் பிரச்சனையை மேலும் பெரிதாக்குகிறது அரசு.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக விவசாய நிலங்களை பறிமுதல் செய்வதற்கு எதிரான விவசாயிகள் இயக்கத்தோடுவறியவர்களின் வாழ்விடங்களுக்கான  இயக்கத்தையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

திமுக தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 90%ஐ நிறைவேற்றிவிட்டதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்கிறார்ரேசன் கடையில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும்  வழங்கப்படும் என்ற எளிய கோரிக்கைககளிலிருந்து 3.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதுபழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் போன்ற கோரிக்கைகள்  வரை நிறைவேற்றப்படாத கோரிக்கைகளின்  ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறதுதிமுக அரசுக்கு எதிராக  நடைபெறும் தொழிலாளர்கள்விவசாயிகள், ஆசிரியர்கள்அரசு ஊழியர்கள்செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என பலதரப்பட்ட பிரிவினரின்  போராட்டங்களில் பெரும்பாலானவை அதன் தேர்தல் வாக்குறுதிகளை மய்யமாகக் கொண்டே எழுகின்றனஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடிடாலர் பொருளாதார வளர்ச்சி என்ற பேரிரைச்சலுக்குள் இந்த எதிர்ப்புக் குரல்களை மூழ்கடிக்கப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு.

ஒன்றிய அரசும் தன் பங்குக்கு மக்கள் நலத் திட்டங்களை வெட்டிச் சுருக்குவதற்கு மாநிலத்தின் நிதியாதாரங்களைக் கட்டுப்படுத்துவது, மாநிலத்தின்  அதிகாரங்களைப் பறிப்பதுஆளுநரைக் கொண்டு போட்டி அரசாங்கம் நடத்துவது, ஆணாதிக்கசாதிமத, தேச வெறிச் சக்திகளுக்கு ஊக்கமளிப்பது என வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் திமுக அரசு மீதும்தமிழ்நாட்டு மக்கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறது.

திராவிட எதிர்ப்பு வலதுசாரி  தளத்திலிருந்து பாஜகபாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூடதிமுக எதிர்ப்பு என்ற பெயரில் திராவிட எதிர்ப்புக் கருத்துகளை முன்வைக்கிறதுபுரட்சிகர கம்யூனிஸ்டுகளாகிய  நாம், திராவிட இயக்கத்தின் முற்போக்கு விழுமியங்களை விமர்சனப்பூர்வமாக உட்கிரகித்துக்கொண்டு, தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, இடது ஜனநாயக அமைப்புகளோடு ஒன்றிணைந்துஇடதுசாரித் தளத்திலிருந்து எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும்.

வலதுசாரி அரசாங்கமோதிமுக போன்ற நடுச்சாரி அரசாங்கமோஅல்லது இடது முன்னணி  அரசாங்கமோ, எதுவாக இருந்தாலும் சரி புரட்சிகர எதிர்க்கட்சி என்பதுதான் நமது அடிப்படை நிலைப்பாடாகும். அதே சமயம்வேறுபட்ட சூழல்கள்வேறுபட்ட அரசாங்கங்கள்வேறுபட்ட பிரச்சனைகளில் நடைமுறைக் களத்தில் செயல்தந்திர நெகிழ்வுத்தன்மையுடன் நாம் செயலாற்ற வேண்டியிருக்கிறதுஅந்த வகையில் ஒன்றிய  பாசிச பாஜக அரசு திமுக அரசை சீர்குலைக்க முயற்சிக்கும்போதும்திமுக அரசு ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதமக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்கும்போதும் நாம் திமுக அரசுக்கு விமர்சனபூர்வமாக ஆதரவளிப்பதும்திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவுமக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களை அணிதிரட்டி முறியடிப்பதும் புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரத்தின் ஒருங்கிணைந்த  அம்சங்கள்தான்.

அதிமுக பலவீனமடைந்தால்பாஜக எதிர்க்கட்சி வெளியைக் கைப்பற்றி விடும்எனவே அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்ற மூடக்கருத்து முற்போக்கு வட்டாரங்களில் இருக்கிறது. இடதுஜனநாயக சக்திகள் ஒரு மாற்று சக்தியாக எழுவதோ, அரசியல் மய்ய நீரோட்டத்திற்கு வருவதோ சாத்தியமில்லைஅவர்கள் விளிம்புநிலை சக்தியாக இருப்பதற்கே விதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள கருத்துநாம் இந்தக் கருத்தை திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும்.

நிலம்சாதி ஒழிப்பு, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் சமூக நீதிமதச்சார்பின்மை, தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தினூடே

கிராமப்புரநகர்ப்புரத் தொழிலாளர்கள்உழைக்கும் விவசாயிகள்ஜனநாயகப் பிரிவினரை ஓர் அரசியல் சக்தியாக அறுதியிட்டு எழச் செய்ய வேண்டும். இதன் வழியாக எதிர்க்கட்சி வெளியை இடதுஜனநாயக, முற்போக்கு சக்திகள் கைப்பற்ற வேண்டும்.