பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்படும், நீர் நிலம் மண்மக்கள் மீதான தாக்குதல்  முறியடிக்கப்பட வேண்டும்!

-சந்திர மோகன்

பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவு /கசிவு நீரால் ஓடைக் காட்டூர்புஞ்சை பாலதொழுவு குளங்கள் மாசடைந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம்குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுதொழிற்சாலைகள் வெளியேற்றும்  மாசடைந்த நீரை சுத்திகரித்து வழங்கிட, கடந்த 2023 நவம்பரில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.40-  கோடி மதிப்புள்ள பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளன.

மற்றொருபுறம்சிப்காட் வளாகத்தில்  60,000 டன்னுக்கும் அதிகமான கலப்பு உப்புகள் (Mixed Salt) அகற்றப்படாமல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுஇதனால்விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கடந்த 2018 ஜுன் மாதத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் துவக்கிய போராட்டத்தை தொடர்ந்து, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திவிளைவாககடந்த 2018 ஜுலை மாதம் முதல் மாசு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பற்றிய மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள் வட்டாட்சியர் மூலமாகவும்பிறகு, 2022 ஏப்ரல் முதல் பெருந்துறைமாசு கட்டுப்பாடு வாரிய  அலுவலகத்தில்  மாதந்தோறும் 5-ஆம் தேதி நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டங்கள் மூலமாகவும்  தொடர்ந்து நடைபெற்று வந்தனஇதனால், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பங்கேற்று  குரல் எழுப்பியதால்ஓரளவுக்காவது மாசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில்கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்கள்சிப்காட் தொழிற்சாலை முதலாளிகளின் கையாட்களை  திட்டமிட்டு நேரடி கலந்தாய்வு கூட்டத்திற்கு அழைத்து வரச் செய்து மோதலை உருவாக்ககலவரத்தை தூண்ட முயற்சித்தார்; மாதந்தோறும் நடைபெற்ற நேரடி கலந்தாய்வு அமர்வு  கூட்டத்தை நடத்த மறுத்தார்கூட்டங்கள் நடைபெற்ற இதுவரைஐந்தாண்டு காலமாகஅதிகாரிகள் மாசு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருந்ததுஓரளவுக்காவது நிவர்த்தி செய்யும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனநேரடி கலந்தாய்வு கூட்டங்கள் இல்லை என்றால் நிலைமை மோசமாகும் என்பதால், நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட மக்கள் கடந்த 5-7-2024 ல் அமைதியாகப் போராடினார்கள்.

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில்பெருந்துறை காவல் துறையினர்

பெண்கள் உட்பட 42 விவசாயிகளை அராஜகமான முறையில் கைது செய்தனர்ஒன்றிய மோடி அரசால்  அறிவிக்கப்பட்ட புதிய குற்றவியல்  சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் கீழ்ஜாமீனில் வரமுடியாத பிரிவுகள் மற்றும் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.‌‌

மாசு கட்டுப்பாடு வாரியத்தைக் கண்டித்தும், பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும்நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டங்களை வழக்கமான முறையில் கூட்ட அரங்கில் தொடர்ந்து நடத்திட வலியுறுத்தியும்சிப்காட் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும்விரிவான இயக்கத்தை மேற்கொள்ளபெருந்துறை மற்றும் சென்னிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலுப்படுத்திட, 'பெருந்துறை சிப்காட் மாசு தடுப்பு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு‌' உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமாகிறதுபெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்படும், மக்களின் நீதிக்கானப் போராட்டம் வெல்லட்டும்!

தமிழ்நாடு அரசே!

பொய்வழக்குகளைத் திரும்பப் பெறுகபெருந்துறை சிப்காட் சுற்றுச்சூழல்  பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்க !