வாரிசு அரசியல்… பெரும்தொழில் நிறுவனங்களில்இருந்தே துவங்குகிறது;.. முதலாளித்துவத்தின்கருவான பகுதிகளில்தான்வாரிசு வழியான மாற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”.

இகக(மாலெபொதுச்செயலாளர் திபங்கர்பிடிஅய்நாடாளுமன்றத்தெரு சேனலுக்குஅளித்த சிறப்பு நேர்காணல்;

….சென்ற இதழின் தொடர்ச்சி

 இந்தத்தேர்தலின்மிகப்பெரியஆச்சரியங்களில்ஒன்றுகாங்கிரஸ்கட்சிபெற்றவாக்குகள். அவர்கள் பெற்ற இடங்கள் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாயிருக்கிறது. இறுதியாகராகுல்காந்திக்கு. முதிர்ச்சி வந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? அவருடைய செயல்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

நீங்கள் சொன்னது போல காங்கிரஸ், வென்ற தொகுதிகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளனவாக்குகள்சதம் அதிகரித்துள்ளதுவழக்கமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைவிட இம்முறை, 100 தொகுதிகள் குறைவாகவே போட்டியிட்டது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவேகுறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளை காங்கிரஸ் மீட்டுக்கொண்டுள்ளது. ஆகஇது பாஜகவிற்கான பின்னடைவு என்பது தெளிவு. திரு ராகுல் காந்தி மிகப்பெரிய பாத்திரம் வகித்திருக்கிறார் என்பது உறுதி. மீண்டு வர வேண்டுமென்றால்புதிய விஷயங்களை கண்டுகொள்வது அவசியம் என்று காங்கிரசும் புரிந்துகொண்டுள்ளது என்றே நினைக்கிறேன்.உதாரணமாக, சாதிவாரி கணக்கெடுப்புஇட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொல்லலாம். இதுபோன்ற விஷயங்களில் காங்கிரஸ் இதுவரை இந்த அளவுக்குப் பேசியதில்லை. இப்பிரச்சனைகளில் காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மற்ற கட்சிகளுடன் சேர்ந்து நிற்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறது. ஆனால்அக்கட்சி ஒருபோதும் முன்முயற்சி மேற்கொள்வதில்லை. அதானி பற்றிசலுகைசார் முதலாளித்துவம் பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்காங்கிரசில் மற்ற தலைவர்கள் இதுபற்றியெல்லாம் பேசுவதில்லை. காங்கிரசின் திசைவழியில்அதன் கொள்கைகளில்ஓரளவிற்கு மாற்றம் தேவையாக இருக்கிறது என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்தாகும். காங்கிரஸ் மீண்டு வருவதற்கு இவை உதவியாக இருக்கும்இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு காங்கிரஸ் மீண்டு எழுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால்பாஜகவிற்கு அடுத்து அகில இந்திய அளவுக்கு செல்வாக்குள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

(இடதுசாரிகளாகிய) நாங்களும்கருத்தியலில்திட்டத்தின் அடிப்படையில் தேசியக் கட்சிகள்தான்ஆனால்நாங்கள் சில மாநிலங்களுக்குள் சுருங்கியிருப்பதால் இப்படி குறிப்பிடுகிறேன். காங்கிரசுக்கும் ராகுல்காந்திக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாரிசுகளின்கட்சிஎன்றுகாங்கிரஸ்கிண்டலடிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாட்டிலிருந்து வெளியே வரும் என்று நினைக்கிறீர்களா? இப்போது வயநாட்டில் பிரியங்கா போட்டியிடப்போகிறார். அப்படிப் போட்டியிடுவது இந்த குற்றச்சாட்டுக்கு வலுவூட்டத்தானேசெய்யும்?

இந்தியாவில் வாரிசு அரசியல் இருக்கிறது என்று நான் பார்க்கவில்லைபாஜகவாரிசு அரசியலை ஒரு குற்றம் என்று ஆக்கியிருக்கிறதுபாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்பது போல பேசுகிறது. வாரிசு அரசியலையும் அரசியலையும் பாஜக இணைக்கப் பார்க்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வாரிசு அரசியலும் ஊழலும் ஒன்றுதான், நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்அவர்களின் வாதம் மிகவும் பலவீனமான வாதம்உதாரணமாகநீங்கள் வாரிசு அரசியல் பற்றி பேச வேண்டுமென்றால்முதலில் அதனை தொழில் நிறுவனங்களில் துவங்க வேண்டும். அங்கே  மிகப்பெரிய அளவிலான சொத்துடைமையும்செல்வ உடமையும்  வாரிசு அடிப்படையில்தான் நடக்கிறதுஅங்கேதான்முதலாளித்துவத்தின் கருவான பகுதிகளில்தான்பரம்பரை வழியான மாற்றம் முதலில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேலும்ஒவ்வொரு பதவியிலும் ஒவ்வொரு தொழிலிலும் இது ஏதாவது ஒரு வகையில் நடக்கிறது. நமது சமூகத்தில் சமூக இயக்கம் பற்றாக்குறையாக இருக்கிறது. தனிநபரின் தனித்துவம் பற்றாக்குறையாக இருக்கிறதுதனி நபரின் உரிமையைதனித்துவம் என்பதை அங்கீகரிப்பதே நமது சமூகத்தில் பிரச்சனையாக இருக்கிறதுநமது சமூகத்தில்எங்கு பார்த்தாலும்நீதித்துறையைப் பார்த்தாலும்மருத்துவத்துறை பற்றிப் பேசினாலும், வேறு எந்தத் தொழிலைப் பற்றிப் பேசினாலும் அங்கே பரம்பரையின் தொடர்ச்சி காணப்படுகிறதுஎனவேஅரசியலை மட்டும் தனிமைப்படுத்தி பரம்பரை தொடர்ச்சி என்று பேசுவது தவறானதுபரம்பரை அரசியலுக்கும் ஊழலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பேசுவது அடிப்படையற்றது.ஊழல் இருக்கிறதென்றால் அங்கே அதிகாரம் இருக்கும்அதிகாரம் இருந்தால் அது ஊழலுக்கு வழி வகுக்கும். முழுமையான அதிகாரம் முழுமையான ஊழலுக்கு வழி வகுக்கும்முழு அதிகாரமும் ஒருவர் கையில் இருந்தால்அது கட்டுப்படுத்தப்படாத ஒன்றாக ஆகிவிடுகிறது. அப்படியாகும்போது அதிகார வட்டங்களில்  ஊழல் உருவாவது நிச்சயம்.

எனவேநாட்டில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகளும், சரி செய்யும் அமைப்புகளும் இருக்க வேண்டும்இதுதான் ஊழலைத் தடுப்பதற்கான ஒரே வழிபரம்பரை அரசியல்வாதிகள் என்று பார்த்தால் அவர்கள் பாஜகவில்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். பாஜகவினர் காந்திநேருவின் வாரிசுகள் பற்றி பேசுகிறார்கள். அதே பாஜகவில் மேனகா காந்திவருண் காந்தி எனஅதே நேருகாந்தி வாரிசுகள் இருக்கிறார்கள். அவர்கள் இப்போது பாஜக அரசியல் கட்டமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இல்லை என்பது உண்மைதான்பாஜகவினர் எந்த பரம்பரை பற்றி பேசினாலும், அந்த பரம்பரை பாஜகவிலும் இருக்கிறதுஆகஇது ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பது போல இருக்கிறதுமற்றவர்களை விமர்சிக்கும் ஒருவர் தன்னைப் பற்றியும் பரிசீலித்துக் கொள்ளவேண்டும். 

இந்ததேர்தலின்போது, இதுவரையில்லாத அணி சேர்க்கையாக, சிவசேனை முதல் எம்எல் வரை மிகப்பெரிய வண்ண அணி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த அணிச் சேர்க்கையை மக்கள் எப்படி பார்த்தார்கள்? இந்த வினோதமான அணிச் சேர்க்கையை மக்கள் ஏற்றுக்கொள்ள வைப்பது ஒரு பிரச்சனையாக இல்லையா?

இல்லைவே இல்லை. இந்தமுறை தேர்தலின்முதன்மையான பிரச்சனையாக ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும்பாதுகாக்க வேண்டும்’ என்பது இருந்ததுஜனநாயகத்திற்கு அபாயம்அரசியல் சட்டத்திற்கு ஆபத்து என்று வருகிறபோது, ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் காப்பதற்காக மிகப்பெரிய கூட்டணி ஒன்றைக் கட்டமைப்பது அவசியமாகிறதுகடந்த ஆண்டுகளில்கோவிட் காலத்தின்போது சிவசேனையின் பாத்திரத்தைப் பார்க்கும்போதுமற்ற பல கட்சிகள் போலசிவசேனா தன்னைத்தானே சிறிதளவு ஆய்வு செய்து மாற்றிக்கொண்டுள்ளது. எனவேஅது ஒரு பிரச்சனையில்லை என்று தோன்றுகிறது. சிவசேனாவும்ஆர்ஜேடியும்சிபிஐஎம்எல் கட்சியும் பீகாரில் கூட்டணி அமைப்பதாக இருந்தால்தான் பிரச்சனையாக இருக்கும். சூழ்நிலை என்னவாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். இது போன்ற நிலைமைகளில் என்ன செய்யப்பட வேண்டும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே இது பிரச்சனையாக இல்லை.

உலகஅளவில்பேசும்போது, இடதுசாரி அரசியல் பழைய விஷயம் என்றாகி வருகிறது. சீனாவில் கூட உண்மையான பொருளில் பார்த்தால் இடதுசாரி அரசியலாக இல்லை. அப்படியிருக்கும்போது, இடதுசாரி அரசியலுக்கு நினைவஞ்சலி எழுதுவது அவசரப்பட்ட செயலாகிவிடுமா?

 அப்படிச் செய்வது அவசரப்பட்ட செயல்தான்அது எப்போதும் அவசரப்பட்டு செய்யப்பட்ட காரியமாகவே இருக்கும். …. நான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை அடிக்கடி படித்து வருகிறேன்நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இப்போது படித்துப்பாருங்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்போதுதான்நேற்றுதான் எழுதப்பட்ட ஒன்று என்பதாக நீங்கள் உணர்வீர்கள். (நடந்தவற்றை) எதிரொலிக்கும் ஒன்றாகநிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறும்போது, அவற்றின் சாரத்துடன் பிணைந்துள்ள பொருத்தமுள்ளதாகஅந்தச் சூழலுடன் பிணைக்கப்பட்ட பொருத்தப்பாடு உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளது. எனவே மக்கள்புதிதாகபுதியதான வழிமுறைகளில் இடதுசாரி அரசியலை மறு கட்டமைப்பு செய்வார்கள்.

பொருளாதார நீதியைப் பற்றிதான் இடதுசாரிகள் பேசுகிறார்கள்பொருளாதாரத்தை மறு வினியோகம் செய்வது, வேலையின்மை பிரச்சனைக்கு முடிவு கட்டுவதுவறுமையை ஒழிப்பதுஇன்னும் பிற விஷயங்கள் குறித்துதான் இடதுசாரிகள் பேசுகிறார்கள். ஜனநாயகம் பற்றி கவலைப்படுவதில்லைதனிநபர் சுதந்திரம் பற்றி கவலைப்படுவதில்லை என்றெல்லாம் இடதுசாரி இயக்கத்தின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் முழுவதும் பொருத்தமற்றவை என்று சொல்ல மாட்டேன்.

சோவியத் யூனியன் வீழ்ந்ததற்கு அதுதான் (தனிநபர் சுதந்திரம்ஜனநாயகம்) பிராதான காரணம்நீங்கள் மார்க்ஸ்ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால், அந்த எழுத்துகள் விடுதலையை நோக்கமாகக் கொண்டவை என்பது புரியும். அவை மிகவும் ஜனநாயகப்பூர்வமானவைஅவை ஆழமான ஜனநாயகம் பற்றியவைஎனவேஅந்த அளவு ஆழமான ஜனநாயகம் பற்றிய உள்ளடக்கம் உண்மையில் (உள்வாங்கப்பட்டு) வெளிப்படுத்தப்படவில்லைஇது கவலைப்பட வேண்டிய ஒரு அம்சம்.மற்றொரு அம்சம் என்னவென்றால், நமது அரசியல் முழுமையும் பருவநிலை மாற்ற நெருக்கடி பற்றி பேச வேண்டும். அதுதான் இந்த நூற்றாண்டின் விவாதப் பொருளாகஇந்த நூற்றாண்டின் பிரச்சனையாக இருக்கிறதுமக்கள் இப்போது பருவநிலை மாற்றம் பற்றி பேசுகிறார்கள்அதிலும் மாணவர்கள் அதிக அளவு பேசுகின்றனர்அவர்கள் பருவநிலை மாற்றம் என்பதை நிகழ்ந்துவிட்ட ஒரு பேரழிவு என்பதாகப் பார்ப்பதில்லைமாறாகஅதனை முதலாளித்துவத்துடன் மிக எளிதாகத் தொடர்பு படுத்திப்பார்க்கிறார்கள்எப்படிப்பட்ட சமத்துவமற்ற நிலை நிலவுகிறதுகேவலமான நுகர்வுவாதம் இருக்கிறது, அருவருப்பான செல்வச்செழிப்பும் ஆடம்பரமும் வெளிப்படுகிறது என்பதை பார்க்கிறார்கள். மேற்குலகைச் சார்ந்த நுகர்வுவாதம் கட்டமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்தப் பார்வை காந்திய வாதமாக அல்லது மார்க்சிய வாதமாகப் படலாம். ஆனால்இத்தனை ஆண்டுகளாகமுதலாளித்துவம் குறித்து நாங்கள் கட்டியமைத்த விமர்சனத்தைக் காட்டிலும்அவை கடுமையான விமர்சனங்களாக அமைகின்றனஎனவேபருவநிலை மாற்ற நெருக்கடி அரசியல் நம்மை இடது திசையை நோக்கி இழுத்துச் செல்லப்போகிறது. இடது அரசியல் வளர்வதற்கான ஒரு புதிய அடித்தளத்தை ஏற்படுத்தித் தரப்போகிறது என்று நான் நினைக்கிறேன்.

 நீங்கள், ‘வாக்குச்சீட்டுமுறையையேவிரும்புவதாகச்சொன்னீர்கள்வாக்குப்பெட்டிமுறைக்குத்திரும்பிச்செல்வோம்என்றால்அரசியல்வன்முறைநிறைந்ததேர்தல்முறைக்கு, குறிப்பாகபீகார்போன்றமாநிலங்கள்திரும்பிச்செல்லாதா?

இல்லைதேர்தல் சாவடியைக் கைப்பற்றுவது என்றால் என்னநீங்கள் சொன்னது போல அது தேர்தல் சாவடியைக் கைப்பற்றுவதுவாக்குச் சீட்டைக் கைப்பற்றுவது அல்லதேர்தல் சாவடியில் மின்னணு வாக்கு யந்திரம் இருக்கிறது என்றால் ஒருவர் மின்னணு வாக்கு யந்திரத்தைக் கைப்பற்றிவிட முடியும். எட்டு தடவை பொத்தானை அழுத்தி அதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் போடுகிறார்கள் என்றால்தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு இல்லை என்று பொருள்கேள்வி கேட்க முடியாதுமுழுமையான அதிகாரம் அவர்களின் கைகளில் இருக்கிறது என்று பொருள்ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்யலாம் என்று பொருள்கேள்விக்கு இடமில்லாத அதிகாரம்தான் தேர்தல் சாவடியைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் செல்கிறது. கேள்வி கேட்க முடியாத அதிகாரம்தான்தேர்தல் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.

துவக்கக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால்தேர்தல் போட்டியில் பங்கெடுத்தால் வன்முறை தாக்குதல் நடந்ததுஅதற்கு முன்பு 'அமைதியான வன்முறை’ இருந்ததுஅப்போதெல்லாம் வன்முறை இருக்காதுஅந்த சமயத்தில் 'அமைதியான முறையில் தேர்தல் சாவடியைக் கைப்பற்றுவதுநடந்தது. அந்த காலகட்டத்தில் அதுதான் 'ஒழுங்காக’ இருந்தது. அந்த காலத்தில் அரசியல் விளையாட்டை அந்த முறையில்தான் விளையாட வேண்டியிருந்தது.ஆனால்மக்கள் தேர்தலில் பங்கெடுக்கத் துவங்கியபோதுபோராடத் துணிந்து போட்டியிடும்போதுவன்முறைத் தாக்குதல் நடக்கிறது. அதனை தேர்தல் வன்முறை என்கிறோம்அதற்குப் பிறகு புதிய மட்டத்திலான சமநிலையை எட்டும்போதுஎந்த ஒருவரும் வாக்களிக்கலாம் என்ற நிலை ஏற்படும்போதுஎவரின் வாக்கையும் நீங்கள் கைப்பற்ற முடியாதுவாக்களிக்கக் கூடாது என்று எந்த ஒருவரையும் தடுத்து நிறுத்த முடியாதுஅப்படியிருக்க, வாக்குப் பெட்டி முறை திரும்பி வருவது எப்படி கூடுதல் வன்முறைக்கு இட்டுச் செல்லும்?இன்னும் சொல்லப்போனால், மின்னணு தேர்தல் முறையில் கூடுதல் வன்முறைகள் சில மாநிலங்களில் நடக்கின்றன. சில மாநிலங்களில் குறைவான வன்முறைகள் நடக்கின்றனஎனவே, வாக்குப்பெட்டி தேர்தலாஅல்லது மின்னணு வாக்கு எந்திர தேர்தலா? என்பது பிரச்சனையில்லை என்றே எண்ணுகிறேன்.

ஜூன்தேர்தல் முடிவுகள் சாதகமான ஒன்று என்பதாகக் கருதி நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா?

 ஆமாம். (தேர்தலின் போதுஅனைத்து வகையான பாரபட்சங்களும் இருந்தன. நிர்வாகம் ஒரு சார்பானதாக இருந்ததுஅப்படியிருந்தும் உத்தரப்பிரதேச தேர்தல் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. பீகாரின் தேர்தல் முடிவுகள் குறித்து எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் பணிக்கு தேர்தலில் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்றே நினைத்திருந்தோம்.

 இரண்டு மாநிலங்களின் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளித்தனஒன்று உத்தரப்பிரதேசம்மற்றது மேற்கு வங்கம். 2021 போலவே மாநிலத்தை பாஜக கைப்பற்றிவிடும் என்ற செய்தியை ஊதிப் பெரிதாக்கிப் பரப்பினார்கள்கட்சிக்கு வெளியே உள்ள எனது நண்பர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தில் பாஜக வுக்கு 25 தொகுதிகளுக்குக் குறையாத வெற்றி கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால்அங்கே பிஜேபிக்கு வெறும் 12 இடங்களே கிடைத்தனஇந்த இரண்டு மாநிலங்களும் இந்த தேர்தலில் இனிய அதிர்ச்சியை அளித்துள்ளன.

நீங்கள்விரைவில்தேர்தலில்போட்டியிடுவீர்களா? அது சாத்தியமா?

அந்தப் பாத்திரத்திற்கு நான் பொருத்தமான ஆள் இல்லை.

இல்லை. நீங்கள் பொருத்தமானவர்தான் என்று நான் நினைக்கிறேன்.

இல்லைஇல்லை. அதற்கான ஆள் நானில்லைநான் மற்ற பல வேலைகளைச் செய்வது கட்சிக்குப் பலன் தருவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்எனவேகட்சிதான் முடிவு செய்ய வேண்டும்இருந்தாலும்தேர்தலில் போட்டியிடுவது போன்ற வேலைகளைக் காட்டிலும் மற்ற வேலைகளை நான் சிறப்பாகச் செய்ய முடியும் என்று மக்கள் நினைக்கலாம்.

                                                                 (நிறைவுற்றது)

                                               தமிழாக்கம்சி.மதிவாணன்