நகர்மயமாக்கம்தலித்பாட்டாளிசாதி ஒழிப்புமார்க்சியம்.

இராமச்சந்திரன்

 சாதியின் தோற்றமும்இருத்தலும்

 சமூகத்தில்  வேலைப்   பிரிவினையைக் கட்டமைப்பது என்ற இயக்கப் போக்கில் சாதியக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதுபார்ப்பன புரோகிதர்கள் இந்தச் சாதியக் கட்டமைப்புக்கு தெய்வீக அங்கீகாரம் அளித்து அதை  உயர்த்திப் பிடித்தனர்காலப் போக்கில் அது மனிதர்களால் வேலைப் பிரிவினைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற நிலை மாறி அது ஒரு தெய்வீக உருவாக்கமாய் சித்தரிக்கப்படலாயிற்று; எனினும் அதன் இருத்தல் என்பது  இன்னும் முழுமையாகத் தகர்க்கப்படாத கிராம நிலவுடைமைச் சமூகக் கட்டமைப்பில்   வேர் கொண்டிருக்கிறதே தவிர அதற்கு வழங்கப்பட்ட தெய்வீக அங்கீகாரம் முதன்மையான காரணமல்ல என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

 தலித்துகளுக்கான தனிக் குடியிருப்புசட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீண்டாமை.

 தீண்டாமை சட்ட விரோதம் என அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. தீண்டாமையின் பல்வேறு வடிவங்களைச் சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால் தலித்துகளுக்கு தனிக் குடியிருப்பு என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீண்டாமையாக இருக்கிறதுசாதிய ஒடுக்குமுறையின் மிக உச்சக்கட்ட ஒரு  வெளிப்பாடாகவும் இருக்கிறதுஅக்ரஹாரத்திற்கு கீழ்நிலையில் ஊர்ஊருக்கு கீழ்நிலையில் சேரி என தலித்துகளுக்கு தனிக் குடியிருப்பு என்பது படிநிலை ஒடுக்குமுறை சாதியக் கட்டமைப்பைபார்ப்பனிய சமூக ஒழுங்கைநிலைநிறுத்துவதற்கான ஓர் ஏற்பாடுஆயிரக்கணக்கான ஆண்டுகளாக  ஆளும் வர்க்கங்களால்ஆதிக்க சாதிகளால் பாதுகாக்கப்பட்டு வரும் ஓர் ஏற்பாடுசாதியக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால்உயர்சாதி இந்துக்களின் மௌனமான ஆதரவோடு, சாதி இந்துக்கள் தாக்குதல் நடத்துவதற்கும்சொத்துகளைச் சூறையாடுவதற்கும்தீயிட்டுக் கொளுத்துவதற்கும்இவ்வாறாக வன்முறை கொண்டு தலித்துகளை ஒடுக்கி வைப்பதற்கும்இன்று சாதி இந்துக்களுக்கு ஒரு வாய்ப்பாக பயன்பட்டுவருகிற ஏற்பாடுதனிக் குடியிருப்பு  என்பது அதோடு மட்டும் நிற்கவில்லைதனிச் சுடுகாடுசுடுகாட்டிற்கு தனிப் பாதைபொதுவெளியில் சுதந்திரமாக புழங்குவதற்குத் தடை என  நீண்டுகொண்டேயிருக்கிறது.

 தலித் விடுதலைபாட்டாளி வர்க்க விடுதலைகம்யூனிஸ்ட் கட்சி.

 (ஆங்கிலேயர் வருகையை ஒட்டி) “முதலாளித்துவத்தின் வருகையும்பெருவீத உற்பத்தியும் முதல் முறையாக சாதிக்கும், தொழிலுக்கும் இடையே ஒரு பிளவைக் கொண்டுவந்ததுஒரு புதிய வர்க்கமாக  தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கம் எழுந்ததுபாட்டாளி வர்க்கத்தின் முதல் தலைமுறை தோட்டங்கள், சுரங்கங்கள்துணிசணல் ஆலைகள் இன்னபிறவற்றுக்கு அனுப்பப்பட்டனர்அவர்களில் மிகப் பெரும்பாலோர், தலித்பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோராக இருந்தனர்; பின்னாளில் உயர்சாதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கூட  இணைந்துகொண்டனர்இவ்வாறாக தொழிற்சாலைகள்சாதிகளை அழித்தொழிக்கும் உள்ளாற்றலை ஏந்திச் செல்லும் சமூகத் தொழிற்சாலைகளாகவும் கூட இருந்தன”(வினோத் மிஸ்ராவின் படைப்பிலிருந்து).

 மக்கள் இயக்கங்கள் தோன்றினகட்சிகள், அமைப்புகள் உருவாகினஎல்லாச் சாதிகளும் மாறுதலுக்கு உள்ளாகின. "தலித் மக்களும் வரலாற்றின் இயக்கப் போக்கில் சமூக நகர்வுகளையும், அறுதியிடலையும் நோக்கி வளர்ந்துள்ளனர்நேற்று அவர்கள் 'அரிசன்கள்இன்று அவர்கள் 'தலித்துகள்நாளை அவர்கள் பாட்டாளிகளாக மாறுவார்கள்தலித் மக்களின் உணர்வுகளும்காந்தியால் பாதுகாக்கப்பட வேண்டிய சமூகப் பிரிவு என்கிற அர்த்தத்தில் 'அரிசன்என்று முன்வைக்கப்பட்ட அடையாளம் உதறப்பட்டு, உரிமைக்காகப் போராடும் 'தலித்என்ற அடையாளமாய்  வளர்ந்துள்ளது. (வேறு யாருமல்லஅம்பேத்கர்தான் இந்த மாற்றத்திற்குப் பின்னுள்ள உத்வேகமூட்டும் உணர்வாக இருந்தவர்). இது மேலும் விவசாயத் தொழிலாளி எனும் உணர்வாய், இன்னும் மேலும் ஆட்சி அதிகாரம் கோரும் பாட்டாளி எனும் உணர்வாய் வளர்க்கப்பட வேண்டும்இதைச் சாதிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையுமாகும். (வினோத் மிஸ்ரா படைப்பிலிருந்து)

 "தலித்", "பாட்டாளிஇந்த  இரண்டு வகையினமும், "தலித் விடுதலை",  "பாட்டாளி வர்க்க விடுதலைஎன்ற இந்த இரண்டு முழக்கங்களும் முதலாளித்துவச் சமூகத்தில் பிறந்தவைதான்ஆனால் இந்த இரண்டு பிரிவின் கட்டமைப்புகளும்வர்க்கநலன்களும், நோக்குநிலைகளும்இலக்குகளும் வெவ்வேறானவைஎனினும் சாதி ஒழிப்புஜனநாயகம் என்ற பொதுப் புள்ளியில் இந்த இரண்டு பிரிவுகளும் சேர்ந்து செயலாற்ற முடியும்சேர்ந்து செயலாற்ற வேண்டும்.

 "தலித்என்ற சொல்  தொழிலாளி, உழைக்கும்  விவசாயி, குட்டி முதலாளி எனப் பல்வேறுபட்ட வர்க்கப் பிரிவினரை உள்ளடக்கிய பல்வேறுபட்ட பட்டியலினப் பிரிவினரை உள்ளடக்கிய ஒரு  சமூகத் தொகுப்பைக் குறிக்கிறது. "பாட்டாளிஎன்ற சொல் ஒரேயொரு வர்க்கத்தை, சாதிகளைக் கடந்த ஓர் ஒற்றுமையைக் குறிக்கிறது.

 "வர்க்கம் என்பது சாதிகளைப் போல உடைபட்ட துண்டுகளால் ஆனதாக இல்லைஅப்படி இருக்கவும் முடியாதுதொழிற்சாலைக் கட்டமைப்பும்முதலாளித்துவமும் பாட்டாளி வர்க்க அடையாளம் உருப்பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கின்றனஒரு கம்யூனிஸ்ட்  கட்சி அதற்காக பாட்டாளி வர்க்கத்தை கூட்டு நடவடிக்கைகளில் அமைப்பாக்குவதோடுஅமைப்பாக்கப்பட்டஅமைப்பாக்கப்படாத தொழிலாளர் வர்க்கத்தின் பல்வேறு பகுதியினர் இடையே உள்ள சாதிமதபேரினவாத தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராட வேண்டும்". (வினோத் மிஸ்ரா படைப்பிலிருந்து)

 சாதியக் கட்டமைப்பும்,

முதலாளித்துவச் சமூக வர்க்கக் கட்டமைப்பும், நகர்மயமாக்கமும்.

 இடதுசாரிஅம்பேத்கரிய, பெரியாரிய  இயக்கங்களின் ஒரு நூற்றாண்டு கால போராட்டத்தின் விளைவாக தமிழ்ச் சமூகத்தில் சமூக, பொருளாதாரஅரசியல் நிலையில்  சிற்சில  மாற்றங்கள்முன்னேற்றங்கள்  வந்திருந்தாலும்சாதிய இறுக்கத்தில் சில தளர்வுகள் தாண்டிகிராமப்புரத்தில் ஊர்-சேரி என்ற பிரிவினை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த  மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறதுநினைவுக்கு எட்டிய காலத்திலிருந்துஇடைநிலைச் சாதியின் அல்லது தலித் சமூகத்தின் அதே  உட்பிரிவின் சந்ததியினர்தான் அங்கு வழிவழியாக வாழ்ந்துவருகிறார்களே தவிர உட்பிரிவில் கூட குறிப்பிட்டுச் சொல்லும்படியான  மாற்றம் ஏதும் நிகழவில்லைஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்அவரது சொந்த கிராமத்துடனான பிணைப்புக்கு  சாதியும்அது சார்ந்த பண்பாடும் அடிப்படையாக இருப்பது ஒரு முக்கிய காரணமாகும்.

 கிராமங்களைவிட நகரங்களில் வேகமாக நடைபெறும் முதலாளித்துவ தொழில்மயமாக்கம்  சாதியக் கட்டமைப்பில் தளர்வுகளைக்  கொண்டுவருவதோடு, அதனிடத்தில் முதலாளித்துவச் சமூக வர்க்கக் கட்டமைப்பை நிறுவுவதற்கான புறச் சூழலையும் உருவாக்குகிறதுஆனால் இந்தப் போக்கு பலம் பெறுவதற்கு மாறாக நகரங்களுக்குள் சாதியக் கட்டமைப்பு மீண்டும் மறுவடிவம் பெறுவதைப் பார்க்கிறோம். சாதி பாகுபாடு கிராமப்புரங்களில் மட்டுமே இருக்கிறதுநகரமயமாக்கத்தின் காரணமாக இது குறைந்து விடும் என்ற கருத்தை முன்வைப்பது இந்திய யதார்த்தத்தை மிகப்பெருமளவுக்கு தவறாக பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்இங்கே, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும்ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி மையங்களிலும்மருத்துவ, பொறியியல் கல்லூரிகளிலும் தலித்  மாணவர்களும் ஆய்வாளர்கள்/அறிஞர்களும் தொடர்ந்து பெரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்இவ்வாறாக

அழிவை நோக்கி  அடியெடுத்து வைத்திருக்கிற சாதியக் கட்டமைப்பு முழுமையாக அழியவுமில்லைபுதிதாக உருவான  முதலாளித்துவ சமூக வர்க்கக் கட்டமைப்பு முழுமையாக நிலைபெறவுமில்லை. ஏனிந்த நிலைவரலாற்றின் ஒரு கட்டத்தில் எதிரெதிர் வர்க்கங்களாக இருந்த முதலாளித்துவ வர்க்கமும்நிலப்பிரபுத்துவ வர்க்கமும் இன்று கூட்டுச் சேர்ந்துகொண்டு, நிலச் சீர்திருத்தத்தை முற்றிலும் முடக்கிப்போட்டுவிட்டு, இன்னும் மோசமாக விவசாயிகளை நிலத்திலிருந்தும்மக்களை வாழ்விடங்களிலிருந்தும் வெளியேற்றிக்கொண்டும்பழைய/ சாதிய சமூக அமைப்பை பாதுகாத்துக்கொண்டுமிருக்கின்றனஇதனால்தான் இகக(மாலெ)வின் விவசாயத் திட்டம்பாட்டாளி வர்க்கம் … சுரண்டும்  வர்க்கங்களை தூக்கியெறிய வேண்டுமானால், வர்க்கப் போராட்டத்தை கிராமப்புரங்களுக்கு எடுத்துச் செல்லாமல் இதைச் சாதிக்க முடியாது” என்று வலியுறுத்துகிறது.

 விவசாயகிராமப்புரத் தொழிலாளர் சங்கமும்கம்யூனிஸ்ட் கட்சியும்:

 கிராமப்புரத்தின் மீதான முழுக் கட்டுப்பாடும்நிலம்பொருளாதாரச் செயல்பாடுகள்கோவில்ஊராட்சி அதிகாரம் என எல்லாவற்றிலும்உயர் சாதி/இடைநிலை சாதியைச் சார்ந்த கிராமப்புர முதலாளிகளிடம்தான்  இருக்கின்றனஎனவே, விவசாயகிராமப்புரத் தொழிலாளர்கள் நிலம், கூலிகௌரவம்அரசியல் அதிகாரத்திற்காக கிராமப்புர முதலாளிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறதுஇந்தப் புறநிலை யதார்த்தம் காரணமாக

விவசாய/கிராமப்புரத் தொழிலாளியாக இருக்கிற ஒரு தலித்விவசாய கிராமப்புரத் தொழிலாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொள்கிறார். சாதிய தப்பெண்ணங்கள் காரணமாக  பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்த விவசாய/கிராமப்புரத் தொழிலாளி முதலில் தயக்கம் காட்டுகிறார்சங்கம் தனது வர்க்க நலனுக்கானது என்று புரிந்துகொண்டு பின்னர் தானும் இணைகிறார்.

 தோழர் சீனிவாசராவ்ஆரம்பத்தில் சாதி இந்துக்களான வாரதாரர்களும்குத்தகைதாரர்களும்சிறு விவசாயிகளும் விவசாயிகள் சங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர்; விவசாயிகள் சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதி சங்கம் என்று நினைத்தார்கள்; சாதி வெறுப்பு அதிகமாய் இருந்தபடியால் விவசாயிகள் சங்கத்தின் கொள்கைகளையும், திட்டத்தையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு காலதாமதமாயிற்றுஎன தனது விவசாய சங்க அனுபவங்களை விவரிக்கிறார்.விவசாயிகள் சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதிச் சங்கம் என்று
ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தவர்கள், அது தவறு எனப் புரிந்து
கொண்ட பின்னர் எல்லாச் சாதிய பின்னணிகளைக் கொண்ட கூலி, ஏழை
விவசாயிகளும் செங்கொடி விவசாய சங்கத்தில் தங்களை
இணைத்துக்கொண்டு பண்ணை முதலாளிகளின் நிலவுடைமை, உழைப்புச்
சுரண்டல், சமூக ஒடுக்குமுறை, அதிகாரத்திற்கு எதிராக ஒன்றுபட்டுப்
போராடினர்; எல்லாவகையான இன்னல்களையும் எதிர்கொண்டனர்;
களத்தில் குருதி சிந்தினர்; உயிரைத் தந்தனர்; தோழர்கள் களப்பால் குப்பு,
வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், சாம்பவான் ஓடை
சிவராமன், பூந்தாழங்குடி பக்கிரி, சிக்கல் பக்கிரி, கீழக்கரை ஏ.ஜி.
ராமச்சந்திரன், சின்னப்பிள்ளை, மணியம்மை, இவர்களை வழிநடத்திய
சீனிவாசராவ், வெண்மணி தியாகிகள் வரையிலும், அதற்குப் பின்னும்
அப்பு, பாலன், சந்திரகுமார், சந்திரசேகர், சுப்பு எனத் தொடரும் வரலாறு
இதைக் காட்டுகிறது.
சாதிய துருவச் சேர்க்கையை முன்தள்ளி பலம் பெறும் பாஜக.
சாதிகள் பற்றி பேசும்போது நால்வரு ணங்களைக் குறிப்பிட்டாலும் (இந்த
நால்வரு ணங்களுக்குள் தலித்துகள் இல்லை), இன்று சாதிகள்
அடிப்படையில் உயர்சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியலினச்
சாதிகள் என மூன்று முக்கிய தொகுப்புகளாக இருக்கின்றன.
உயர்சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதிக ளுக்கும் இடையேயான முரண்
மண்டல் குழு பரிந்துரையின்போது பட்டவர்த்தனமாக வெளிவந்தது.
தலித்துகள் உயர்சாதியினருக்கு எதிராக, மண்டல் குழுவுக்கு ஆதரவாக
நின்றனர். ஆனால், தலித்துகள் தங்கள் உரிமைகளை, விருப்பங்களைச்
சாதிக்க முனைந்தபோது களத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின்
மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் என்ன
நடந்தது என்பதைப் பார்த்தோம். இன்றும் என்ன நடந்துகொண்டிருக்கிறது
என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். துவக்கத்தில் ஒன்றுபட்டிருந்த
விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவும் பின்னாளில் பிரிந்துசெல்வதற்கு
இதுதான் அடிப்படையாக இருந்தது. உ.பி.யில் மாயாவதியும், முலாயமும்,
பீகாரில் லாலுவும், பஸ்வானும் இவ்வாறுதான் பிரிந்து சென்றனர். இந்தச்

சூழலிலிருந்து, “பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதியினரோடு ஒன்று சேர்ந்து
தலித் அறுதியிடலை தடுத்துநிறுத்துவது, தலித்துகள் உயர்சாதியினரோடு
ஒன்றுசேர்ந்து பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் செல்வாக்கை குறைப்பது”
என்பதாக ஒரு புதிய சந்தர்ப்பவாத அரசியல் போக்கு எழுந்தது. பாஜகவின்
உயர்சாதி ஆதிக்கத்தை / வர்க்கச் சுரண்டலை உறுதி செய்யும் சமூகப்
பொறியியலுக்கு இது ஒத்திசைவாக இருந்தது. தமிழ்நாட்டில் பாஜக-பாமக
கூட்டணியும், பீகாரில் பாஜக-பாஸ்வான் கூட்டணியும் இதற்கான
எடுத்துக்காட்டுகள்.
வர்க்கப் போராட்டத்தை பொருளாதார / நாடாளுமன்ற அரங்கிற்குள்
குறுக்கிவிட முடியாது.
அரசமைப்புச் சட்டம் பொதுவாக தீண்டாமையைத் தடை செய்திருந்தாலும்,
ஜனநாயக உரிமைகள் வழங்கினாலும், சட்டத்திற்கு முன் அனைவரும்
சமம் என்று சொன்னாலும், பிற்போக்கு சாதியக் கட்டமைப்போடு
நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிற அதிகார வர்க்கத்தைக்
கொண்டுள்ள, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசும் சாதிய அமைப்பை
பாதுகாக்கிறது. தலித்துகளின் / தொழிலாளர்களின் உரிமைகளுக்கான
போராட்டத்தை நசுக்குவதில் நிலப்பிரபுத்துவ ஆதிக்க சாதிவெறி/
முதலாளித்துவ சக்திகளின் வன்முறையோடு, அரசு - நாடாளுமன்ற
அமைப்புகள், நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை, ராணுவம் -
வன்முறையும் சேர்ந்துகொள்கிறது.
வலதுசாரி அரசாங்கத்தை விட்டுத் தள்ளுங்கள் வெகுமக்கள்
போராட்டங்களிலிருந்து, இயக்கங்களிலிருந்து வளர்ந்து, மாநிலத்தில் ஆட்சி
அதிகாரத்திற்கு வந்த சமூகநீதி பேசும் அரசாங்கமோ, தலித்
தலைமையிலான பகுஜன் அரசாங்கமோ, ஏன், இடதுமுன்னணி
அரசாங்கமோ, எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, மக்கள் தங்கள்
உரிமைகளுக்கான போராட்டத்தில் எழும்போது மக்கள் போராட்டத்தின் ஓர்
உறுப்பாக, மக்கள் போராட்டத்தை மேலும் விரிவாகவும், மேலும் உயர்ந்த
மட்டத்திற்கும் எடுத்துச் சென்று, கீழே வேர்க்கால் மட்டம் வரை
பரவியுள்ள முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை, மேலே ஒன்றிய
அரசாங்கத்தை எதிர்கொண்டு, மக்கள் கோரிக்கையை, முற்போக்கு
ஜனநாயக சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது (மாநில ஆட்சி
அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பான இகக(மாலெ)வின்
பொதுத்திட்டம் இதைத்தான் பேசுகிறது) என்பதற்குப் பதிலாக,
முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசின் ஓர் உறுப்பாக மாறி விடுகிறது;
அல்லது உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது.

மற்ற அரசாங்கங்களால், சில மேலோட்ட மான சீர்திருத்தங்கள் தவிர்த்து,
நிலவும் சமூக, அரசுக் கட்டமைப்பைத் தாண்டிச் செல்ல முடியாது என்பது
புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் ஓர் இடது முன்னணி அரசாங்கம்?
மாநில அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரம் இல்லை என்பதல்ல
முதன்மையான பிரச்சனை, மக்கள் போராட்டத்தின் ஓர் உறுப்பாக
இல்லை; வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தயாராக
இல்லை என்பதுதான் பிரச்சனை.
பொருளாதாரப் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள், சாதியாதிக்க
எதிர்ப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, உடனடி நிவாரணத்திற்கு
மாநில அரசாங்கம் என்பது வர்க்கப் போராட்டங்களை பொருளாதார
அரங்கிற்குள் குறுக்குவதன் வெளிப்பாடுதான்.
வர்க்கம் - சாதி, ஒற்றுமையும் - முரணும்:
சாதிக்குள் பல வர்க்கங்கள் இருக்கின்றன; வர்க்க உறவுகள் சாதிய
வடிவத்தில் வெளிப்படுகின்றன. ஆனால் வர்க்கமும் சாதியும் முறையே
அடிக்கட்டுமானத்திலும், மேல் கட்டுமானத்திலும் - உற்பத்தி முறையிலும்,
விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதிலும் - வேர் கொண்டுள்ள
திட்டவட்டமாக வேறுபட்டுள்ள இரண்டு வகையினங்களாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட (முதலாளித்துவத்துக்கு முந்தைய) உற்பத்தி முறையில்
அடிக்கட்டுமானமும் மேல்கட்டுமானமும் ஒத்திசைவாக இருக்கும்போது
வர்க்கமும், சாதியும் ஒத்திசைவாக இருக்கின்றன; எனவே வர்க்கமும்
சாதியும் ஒன்று போலத் தோன்றுகின்றன. உற்பத்திச் சக்திகள்
வளர்ச்சியின் காரணமாக உற்பத்தி முறையில் மாறுதல் ஏற்படுகிறபோது
(முதலாளித்துவ உற்பத்தி முறை தொடங்குகிறபோது) இந்த ஒத்திசைவு
உடைகிறது. வர்க்கமும், சாதியும் அடிக்கட்டுமானமும், மேல்
கட்டுமானமும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஒன்று மற்றொன்றை
வரையறுக்க முயற்சிக்கிறது. இந்த இரண்டாம் கட்டத்தில் வர்க்க-சாதி
உறவு சிக்கலானதாகின்றது. முதலாளித்துவத்தின் முழு வளர்ச்சிக்
கட்டத்தில் உழைப்புப் பிரிவினைக்கான வடிவம் என்கிற வகையில் சாதி
ஒழிக்கப்படுகிறது; வர்க்கம் விநியோக முறையையும் நேரடியாகத்
தீர்மானிக்கிறது. வர்க்கப் போராட்டம் வெளிப்டையாகவும், நேரடியாகவும்
கூர்மை பெறுகிறது.
வர்க்க ஒற்றுமை: ஏற்பும், மறுப்பும்.
வர்க்க அடிப்படையிலான ஒற்றுமை பற்றி பேசும்போது வழக்கமாக ஓர்
ஆட்சே பணை எழுப்பப்படுகிறது: பல்வேறு சாதிப் பின்னணிகளைக்

கொண்ட தொழிலாளர்கள் ஓரிடத்தில் ஒன்றுசேர்ந்து பணிபுரிந்தாலும்,
ஒரே பணியில் ஈடுபட்டாலும், வீடு திரும்பும்போது ஒருவர் ஊருக்கும்,
மற்றொருவர் சேரிக்கும் செல்கிறார்; இருவரும் சேர்ந்து ஓரிடத்தில் வாழ
முடியாதென்றால் வர்க்க ஒற்றுமை எவ்வாறு சாத்தியம்? என்று.
(அன்றைய தஞ்சை) இன்றைய நாகை மாவட்டம், மணலூரில்
நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக சிபிஐ(எம்
எல்) நடத்திய போராட்டத்தில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நடத்திய
தாக்குதலில் தலித்துகள், வன்னியர்கள், கள்ளர்கள் எனப் பல்வேறு சாதியப்
பின்னணி கொண்ட தோழர்கள் ரத்தம் சிந்தினர்; உயிரிழந்தனர்.
கொலைகாரர்களும் வன்னியர்கள், கள்ளர்கள், தலித்துகள் என அதே
சாதியப் பின்னணியைக் கொண்டிருந்தார்கள். சாதி அல்ல, வர்க்க
ஒற்றுமையே தீர்மானகரமானதாக இருந்தது என்பதற்கு இது ஓர்
எடுத்துக்காட்டு மட்டுமே.
இரண்டாவதாக, நகரங்களில் அமைப்பாக்கப் பட்ட தொழிலாளர், அரசு
ஊழியருக்கான குடியிருப்புகள் - தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்,
உயர்சாதியினர் சேர்ந்து வாழும் - பொதுக் குடியிருப்புகளாகத்தான்
உருவாகின்றன. சமூகரீதியில் அவர்கள் ஏற்றத்தாழ்வான
பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் வேலை
வர்க்கரீதியில் அவர்களை ஒரே படித்தரம் கொண்டவர்களாக
மாற்றியிருக்கிறது. பணியிடத்தில் சேர்ந்து வேலை செய்வதைப் போலவே,
குடியிருப்பிலும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள். இவைகள் இன்று
விதிவிலக்குகளாகத் தோன்றலாம். ஆனால் ஒரு நவீன சமூக அமைப்பின்
அடையாளம் இது. இந்தப் போக்கு பலம் பெறுவது என்பது அவர்களின்
வர்க்க உணர்வு, வர்க்க ஒற்றுமை, குறிப்பாக கிராமப்புர தொழிலாளர்,
நகர்ப்புர அமைப்புசாரா தொழிலாளருடனான ஒற்றுமை, வர்க்கப் போராட்ட
வளர்ச்சியோடு தொடர்புடையது. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு
இடையே, சாதி மறுப்பு இணையர்களுக்கு இன்றும் தொழில்
வளர்ச்சியடைந்த நகரங்கள்தான் ஓரளவுக்கு நம்பிக்கையும், துணிவும்,
புகலிடமும் அளிக்கின்றன.
எனினும், பழமைவாத வழியிலான இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி
வர்க்கங்களாக பகுபடும் இந்த இயக்கப் போக்கை, ஜனநாயகப் போக்கை
மந்தப்படுத்துகிறது. ஒரு ஜனநாயக புரட்சியால் மட்டுமே இந்த இயக்கப்
போக்கை மந்தப்படுத்தும் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிய முடியும்.
சாதிய துருவச் சேர்க்கையை பின்னுக்குத் தள்ளும் வர்க்கப் போராட்டமும்,
சமூக மாற்றமும்.

வர்க்கப் போராட்டம் ஏதோ ஒரு தளத்திலிருந்து -
சமூக/பொருளாதார/அரசியல் தளத்திலிருந்து - துவங்குகிறது. அந்தப்
போராட்டத்தை அனைத்துத் தளங்களுக்கும் விரிவுபடுத்துவதும்,
அனைத்தும் தழுவியதாக மாற்றுவதும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின்
வேலையாகும். இவ்வாறாக வர்க்கப் போராட்டம் தாழ்ந்த மட்டத்திலிருந்து,
உயர்ந்த மட்டத்திற்கு செல்கிறபோது சாதிய துருவச் சேர்க்கையைப்
பின்னுக்குத் தள்ளி, வர்க்கத் துருவச் சேர்க்கையை முன்னுக்குக்
கொண்டுவருகிறது. வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சி மட்டத்தைப்
பொறுத்து, எல்லாச் சாதிய பின்னணிகளைக் கொண்ட
தொழிலாளர்களுக்கும், தமது சொந்த வர்க்கத்தினரோடு அவர்கள்
கொண்டுள்ள பிணைப்பு படிப்படியாக முன்னிலைக்கு வருகிறது; ஆட்சி
அதிகாரம் கோரும் பாட்டாளிகளாக மாறுகிறார்கள்; தாங்கள் பிறந்த
சமூகத்தைச் சேர்ந்த இதர வர்க்கத்தினரோடு அவர்கள் கொண்டுள்ள
ஐக்கியம், அவர்கள் நட்பு வர்க்கமா? பகை வர்க்கமா? என்பதைப் பொறுத்து
தீர்மானிக்கிறார்கள். விவசாய/கிராமப்புர/நகர்புரத் தொழிலாளர் அமைப்பில்
ஒருவர் உறுப்பினராக சேர்வதே சாதி மறுப்பை நோக்கிய ஓர்
அடிவைப்புதான். ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்படும்
இது போன்ற அமைப்பால் மட்டுமே சாதி அமைப்பையும், அதற்கு
ஆதாரமாக உள்ள நிலவுடைமை முறையையும் ஒழிப்பது என்ற இலக்கை
நோக்கி இறுதிவரை பயணப்பட முடியும்.
இவ்வாறாக, வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படையான
அடித்தளத்தின் மீது, பாரம்பரியமான பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு
எதிராக, ஒரு புதிய தலித், பிற்படுத்தப்பட்டோர் போராட்டக் கூட்டணி
உருவாகிறது. இந்தப் போராட்டக் கூட்டணி உயர்சாதிகளைச் சேர்ந்த
நிலப்பிரபுக்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குலக்குகளை
மட்டுமல்ல, தலித் மேட்டுக்குடியினரையும் கூட இலக்காகக் கொள்ளும்
அதே சமயம் உயர் சாதிகளைச் சேர்ந்த ஏழைகளையும், அறிவொளி பெற்ற
பிரிவினரையும் கூட தன்னுள் இணைத்துக்கொள்கிறது.
தொழிலாளர் - விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள
இந்தக் கூட்டணியால்தான் முதலாளித்துவ-நிலப்பி ரபுத்துவ
ஆட்சியதிகாரத்தை வீழ்த்தி, ஆட்சியதி காரத்தை தனது கையில்
எடுத்துக்கொள்ள முடியும்; முற்றூடான நிலச்சீர்திருத்தத்தின் அல்லது
நிலங்களை தேசியமயமாக்குவதன் வழியே, விவசாயத்தில்
நிலப்பிரபுத்துவ தளைகளிலிலிருந்து முற்றிலும் விடுபட்ட, சுதந்திரமான,
ஆனால் சோசலிசத் திட்டமிடலின், கட்டுப்பாட்டின் கீழ்
முறைப்படுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை, அதனை

ஆதாரமாகக்கொண்ட தொழில்மயமாக்கத்தை உறுதி செய்ய முடியும்.
சாதி ஒழிப்புக்கான, பெண் விடுதலைக்கான, பாட்டாளி வர்க்கத்தின்
விடுதலைக்கான பொருளீய அடித்தளத்தையும் உருவாக்க முடியும்.
“நான் ஒரு கம்யூனிஸ்டாக இல்லை என்ற போதிலும், நமக்கு என்ன
தேவை எனில் ருஷ்யாவின் கூட்டுப் பண்ணை அமைப்பு முறைதான்;
நமது விவசாய பிரச்சனையைத் தீர்க்க இது ஒன்று மட்டுமே வழி” என்று
அம்பேத்கர் சொன்னார். மிகச் சரியானதுதான். ஆனால் இதை நடைமுறை
யதார்த்தமாக்கிய சமூக சக்திகளை அவர் (மட்டுமல்ல பெரியாரும்தான்)
புரிந்துகொள்ளவில்லை. சோசலிச உணர்வு பெற்ற தொழிலாளர்
வர்க்கமும், ஜனநாயக உணர்வு பெற்ற விவசாய சமூகமும், இதர
பிரிவினரும்தான் அந்த சமூக சக்திகள். புரட்சிதான் அதற்கான ஒரே
வழிமுறையாக இருந்தது. புரட்சி என்பது ஆயுதம் தாங்கிய சில
குழுக்களின் நடவடிக்கை அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உச்சக்கட்டம்.
வெகுமக்களின் திருவிழா. பகத்சிங் சொன்னது போல இந்த அநீதியான
சமூகத்தை மாற்றியமைப்பதுதான்.