ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் (ஜேஎன்யூஎஸ்யூ) தேர்தல்களில் ஒன்றுபட்ட இடது கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் (ஏஐஎஸ்ஏ) தோழர் தனஞ்செய் ஜேஎன்யூஎஸ்யூ மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2,598 வாக்குகள் பெற்று 922 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஸ்எஃப்ஐ யின் அபிஜித் கோஸ் துணைத் தலைவராகவும், ஒன்றுபட்ட இடது கூட்டணியின் ஆதரவுடன் பாப்சாவின் ப்ரியான்சி ஆர்யா பொதுச் செயலாளராகவும், ஏஐஎஸ்எப் இன் தோழர் சஜித் இணைச் செயலாளராகவும் வென்றனர்.