இந்தியாவில் உள்ள விவசாயிகள் இயக்கம் உலகெங்கிலும் உள்ள மக்கள் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது

(தஞ்சாவூரில் 11.8.23ல் நடந்த விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில், ஏஐகேஎம் மாநிலத் தலைவர் சிம்சன், மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, அயர்லா மாநில நிர்வாகி வளத்தான், கன்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில ஊழியர் கூட்டமும் நடைபெற்றது. விவிமு மாநாட்டில் எஸ்கேஎம் தேசிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர், ஏஐகேஎம் தேசிய செயலாளர் தோழர் புருசோத்தம் சர்மா அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்)


அன்பிற்கினிய தோழர்களே! விவசாயிகளே! 

மோடிக்கு எதிரான கிராம மக்களின் கோபத்திற்கு வடிவம் கொடுப்போம்! மோடியின் முயற்சியை முறியடித்து வேலை உறுதித் திட்டத்தைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோருவோம்!

ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தில் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். 2022-23 நிதியாண்டு காலத்தில் இதுவரை 5 கோடி தொழிலாளர்களின் பெயர்களை வேலை உறுதித் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். இது சென்ற ஆண்டான 2021-2022 காட்டிலும் 247 சதம் அதிகமானதாகும்.

மோடி ஆட்சியை வெளியேறிடக் கோரி அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் பிரச்சார இயக்கம் - ஆர்ப்பாட்டம்

மோடி ஆட்சியை வெளியேற்று வோம்! தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பாதுகாப்போம்!| தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 200 நாள் வேலை, நாளொன்றுக்கு ரூ.600/ சம்பளம் வழங்கு!!! கிராமப்புற ஏழைகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாநில தழுவிய அளவில் ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை பிரசார இயக்கம், கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டங்கள் மாவட்டங் களில் ஒன்றிய மட்டங்களில் நடத்தப் பட்டன. இந்த பிரச்சார இயக்கத்தில் விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

வெகுமக்களிடம் செல்வோம்; வெகுமக்களை வெல்வோம்! (ஜூன் 15-30 பரப்புரை இயக்கத்தை நோக்கி....)

கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 22 அன்று கிளைகள் தோறும் கட்சிக் கொடி ஏற்றுவது, ஏப்ரல் 22 உறுதிமொழி ஏற்பதற்கான அழைப்பை, கட்சி மத்தியக் கமிட்டி விடுத்திருந்தது. கட்சி மாநிலச் செயலாளர், ஆசைத்தம்பி, புதுக்கோட்டை பொறுப்பாளர் பாலசுந்தரம் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டக்கமிட்டிக் கூட்டத்தில், ஏப்ரல் 17 அன்று மத்தியக் கமிட்டி அழைப்பை செயல் படுத்துவது குறித்து விரிவாக திட்டமிடப் பட்டது. கட்சி வேலைகள் உள்ள 7 ஒன்றியங் களில் மொத்தம் 57 கிளைகளில் கட்சிக் கொடியேற்றம் உறுதி மொழி ஏற்பது என்று திட்டமிடப்பட்டது.

அக்டோபர் 18, 2022 உளுந்தூர்பேட்டையில் CPIML ஆர்ப்பாட்டம்...

அக்டோபர் 18, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடி ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவண ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மாநில செயலாளர் தோழர் ராஜசங்கர் விளக்கி பேசினார்.

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!
   
கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.